»   »  "தமிழை சரியா உச்சரிக்க வைக்கணும்" - பிரபல நடிகையின் புத்தாண்டு சபதம்!

"தமிழை சரியா உச்சரிக்க வைக்கணும்" - பிரபல நடிகையின் புத்தாண்டு சபதம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : புத்தாண்டு பிறக்க இன்னும் ஒரே ஒரு நாள் இருக்கும் நிலையில் அடுத்த வருடம் இந்த விஷயங்களை செய்ய வேண்டும், இதைத் தவிர்க்க வேண்டும் என நிறைய பிளான் போட்டு வருகின்றனர்.

அந்த வகையில் நடிகை ஸ்ரீபிரியா அடுத்த வருடத்தில் ஒரு முக்கிய விஷயத்தை செய்ய இருக்கிறாராம்.

தமிழ் மக்கள் அனைவருக்கும் 'தமிழ்' என்பதை சரியாக கூற வேண்டும் என்பதை தெரியப்படுத்த இருக்கிறாராம். இதனை அவரே தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

நடிகை ஶ்ரீபிரியா

'தமிழ்' என்கிற வார்த்தையை அனைவரும் சரியாக உச்சரிக்கும்படி இந்த புத்தாண்டில் நினைவுபடுத்த விரும்புகிறேன். 'தமில்', தமுள்' என்றோ சொல்லக்கூடாது என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

நீங்க முதலில் சரியா எழுதுங்க

அதே போல், ன - ண வையும் சரிபார்த்த பின் உங்களது கருத்துகளைப் பதிவிடவும் என ஒரு நெட்டிசன் கமென்ட் செய்துள்ளார். அதற்கு ஶ்ரீபிரியா அது என் அறிவைத்தான்டி மொபைல் போனால் ஏற்பட்டு விடுகிறது என பதில் அளித்துள்ளார்.

செய்வதைத் திருந்தச் செய்

அது 'டமிழ்' இல்லை.. தமிழ்.. ஆங்கிலத்தில் எழுதுவதை சரியாக எழுதலாமே.. செய்வதைத் திருந்தச் செய்யலாமே என இன்னொருவர் கமென்ட் செய்துள்ளார்.

ரஜினிக்கா இது

ரஜினிக்கா இது

இது யாருக்கு சூப்பர்ஸ்டார் ரஜினிக்கா? எனக் கேட்டு ஒரு நெட்டிசன் கோர்த்து விட்டுள்ளார்.

English summary
Actress Sripriya takes a new year resolution. She will remind tamil people to pronounce 'Thamizh' correctly.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X