»   »  சென்னையில் நடிகை சபர்ணா, கேரளாவில் நடிகை ரேகா மர்ம மரணம்: என்ன நடக்கிறது?

சென்னையில் நடிகை சபர்ணா, கேரளாவில் நடிகை ரேகா மர்ம மரணம்: என்ன நடக்கிறது?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்த சபர்ணா மர்மமான முறையில் இறந்து கிடந்த நிலையில் மலையாள நடிகை ரேகாவும் தனது வீட்டில் இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பெரிய திரை மட்டும் அல்ல சின்னத் திரையிலும் நடித்து வருபவர்களும் மன உளைச்சலால் அவதிப்பட்டு வருகிறார்கள். தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்த சபர்ணா ஆனந்த் சென்னையில் உள்ள தனது வீட்டில் அழுகிய நிலையில் பிணமாகக் கிடந்தார்.

அவரது மரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சபர்ணா

சபர்ணா

சபர்ணா நிர்வாண நிலையில் இறந்து கிடந்ததால் அவரது மரணம் கொலையா, தற்கொலையா என போலீசார் விசாரித்து வருகிறார்கள். சபர்ணாவின் மரணம் அவரது குடும்பத்தாரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

காதல்

காதல்

சபர்ணா வாலிபர் ஒருவரை காதலித்து வந்ததாகவும், அந்த காதல் முறிந்ததால் தனிமை, விரக்தியால் சோகமாக இருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் தான் அவர் இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

ரேகா மோகன்

ரேகா மோகன்

மலையாள படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்த ரேகா மோகன்(45) திருச்சூரில் உள்ள தனது அபார்ட்மென்ட்டில் பிணமாகக் கிடந்ததை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். அவரது மரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.

அதிர்ச்சி

அதிர்ச்சி

சபர்ணா தமிழ் தவிர மலையாள தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். கேரளாவிலும் அவர் பிரபலம். முதலில் சபர்ணா தற்போது ரேகா மர்ம மரணம் அடைந்துள்ளது சக கலைஞர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

English summary
After actress Sabarna, malayalam actress Rekha Mohan was found dead. These two deaths have shocked their colleagues.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil