எங்களுக்கு வாழ்த்துக்கள்... சமந்தா சொன்ன வாழ்த்து... எதுக்குன்னு தெரியுமா?
சென்னை : நடிகர் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா உள்ளிட்டவர்கள் லீட் கதாபாத்திரங்களில் நடித்து சமீபத்தில் திரையரங்குகளில் ரிலீசான படம் காத்து வாக்குல ரெண்டு காதல். இந்தப் படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து தற்போது சிறப்பான வசூலையும் பெற்று வருகிறது.

காத்து வாக்குல ரெண்டு காதல் படம்
நடிகர் விஜய் சேதுபதி மூன்றாவது முறையாக நயன்தாராவுடன் இணைந்து நடித்துள்ள படம் காத்து வாக்குல ரெண்டு காதல். இந்தப் படத்தில் சமந்தாவும் நடித்திருந்த நிலையில் முக்கோண காதல் கதையை மையமாக கொண்டு படத்தை இயக்கியிருந்தார் இயக்குநர் விக்னேஷ் சிவன். படம் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது.

கேரக்டர்களை வெளிப்படுத்திய விக்னேஷ் சிவன்
படத்தில் ராம்போவாக விஜய் சேதுபதி, கண்மணியாக நயன்தாரா மற்றும் கதீஜாவாக சமந்தா நடித்திருந்தனர். இவர்களது கேரக்டரை படத்தின் ரிலீசுக்கு முன்னதாக வெளியிட்டு எதிர்பார்ப்பை ஏற்படுத்தினார் விக்னேஷ் சிவன். அதேபோல படத்தின் பிரமோஷன்கள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டியது.

சிறப்பான பாடல்கள்
படத்தின் பாடல்களும் மிகவும் சிறப்பாக அமைந்திருந்தன. அனைத்து பாடல்களும் வேற லெவல் ரகம். அனிருத் இசையில் இந்தப் பாடல்களும் படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தன. இந்நிலையில் படம் திரையரங்குகளில் ரிலீசாகி தற்போது சிறப்பான வசூலை பெற்று வருகிறது.
Recommended Video

செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ நன்றி
இதுகுறித்து படத்தின் தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்கீரின் ஸ்டூடியோ தற்போது மகிழ்ச்சியுடன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் படத்தின் ஹீரோ விஜய் சேதுபதி, இயக்குநர் விக்னேஷ் சிவன், நயன்தாரா, சமந்தா மற்றும் அனிருத் ஆகியோரை தனித்தனியாக குறிப்பிட்டு படத்தின் வெற்றிக்கு காரணமான இவர்களுக்கு பாராட்டு தெரிவித்துள்ளது.
படத்தின் கலைஞர்களுக்கு நன்றி
இதேபோல படத்தின் வெளியீட்டு உரிமையை கைப்பற்றிய உதயநிதி மற்றும் அவரது ரெட் ஜெயண்ட் நிறுவனத்திற்கும் நன்றியை தெரிவித்துள்ளது. மேலும் ரவுடி பிக்சர்ஸ், விஜய் டிவி, ஹாட்ஸ்டார் மற்றும் சோனி மியூசிக் ஆகியவற்றிற்கும் நன்றியை தெரிவித்துள்ளது. மேலும் படத்தின் அனைத்து கலைஞர்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளது.
எங்களுக்கு வாழ்த்துக்கள்
இந்நிலையில் இந்த அறிக்கைக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிலளித்துள்ள சமந்தா, எங்களுக்கு வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளார். மேலும் லவ் எமோஜிகளையும் பதிவிட்டுள்ளார். காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் கதீஜாவாக நடித்திருந்த சமந்தா, அனைவரது பாராட்டுக்களையும் பெற்றது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











