Don't Miss!
- News
அடேங்கப்பா.. "ட்விஸ்ட்டு".. எடப்பாடி பல்டி.. அண்ணாமலைக்கு போன் போட்ட சீனியர்கள்.. காத்து திரும்புதே!
- Automobiles
மாருதி, ஹூண்டாயை அண்ணாந்து பாக்க வைத்த டாடா! சம்பவம் லோடிங்! தளபதி 67-ஐ விட எதிர்பார்ப்பு எகிறிகிட்டே போகுது!
- Sports
டி20 வரலாற்றில் இந்தியாவின் மகத்தான வெற்றி.. 3வது டி20ல் சுப்மன் கில் தந்த ஷாக்.. ஆடிப்போன நியூசி!
- Finance
மூலதன செலவு ரூ.10 லட்சம் கோடியாக அதிகரிப்பு.. நிதியமைச்சர் கொடுத்த சூப்பர் அப்டேட்!
- Lifestyle
எடையை வேகமாக குறைக்க ஆசைப்படுறீங்களா? அப்ப இந்த உணவுகளை தெரியாமகூட சேர்த்து சாப்பிடாதீங்க!
- Technology
அந்த ஹார்திக் பாண்டியா போன் நியாபகம் இருக்கா? அறிமுக தேதி உறுதி! விலை இதுதானா?
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
எந்த மாதிரி மாஸ்க்கை தேர்ந்தெடுத்து அணிய வேண்டும்.. நடிகை ஷெரின் வெளியிட்ட விழிப்புணர்வு வீடியோ!
சென்னை : கொரோனா இரண்டாவது அலை தமிழகத்தில் மிகத் தீவிரமாக பரவி வருவதை அடுத்து பிரபலங்கள் பல்வேறு வகைகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
Recommended Video
குறிப்பாக தடுப்பூசி அனைவரும் போட்டுக்கொள்ள வேண்டும் என பல திரைப்பிரபலங்கள் ஒவ்வொருவராக கொரோனா தடுப்பூசியைப் போட்டுக் கொண்டு வருகின்றனர்.
லாக்டவுன் முடியும்னு எதிர்பார்த்தா வயசாகிடும்.. சட்டுப்புட்டுன்னு திருமணம் செய்து கொண்ட பிரபல நடிகை!
இந்நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கு முதன்மையாக இருக்கும் மாஸ்க்கை எவ்வாறு தேர்ந்தெடுத்து அணிய வேண்டும் என்பதை செய்து காட்டி விழிப்புணர்வை ஏற்படுத்தும் வீடியோவை நடிகை ஷெரின் பகிர்ந்து பாராட்டுக்களைப் பெற்று வருகிறார்.

உயிர் இழப்புகள்
கொரோனா இந்தியாவில் பரவத் தொடங்கி ஓராண்டை கடந்த நிலையில் இப்போது இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி மக்களை பாடாய் படுத்தி வருகிறது. அரசும் அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து கொரோனாவை விரட்ட அனைத்து வழிகளையும் பின்பற்றி கொண்டுள்ளது. முதல் அலையை விடவும் இரண்டாவது அலை சற்று வீரியமாகவும் எளிதில் பலருக்கும் பரவக் கூடியதாகவும் இருப்பதால் இதனால் பாதிக்கப்பட்டு உயிர் இழப்புகள் தொடர்ந்து ஏற்பட்டுக் கொண்டே வருகிறது.

காற்றில் பரவக்கூடியது
கொரோனா தொற்று மிக எளிதாக காற்றில் பரவக்கூடியது என்பதால் பலரும் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு வரும் நிலையில் இன்றளவும் இந்திய அளவில் 50 சதவீதம் மக்கள் மட்டுமே மாஸ்க் பயன்படுத்துகின்றனர் என்று புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

எந்த மாதிரி மாஸ்க்கை
மாஸ்க் மூலமாக ஒரு புறம் கொரோனா பரவலை தடுக்க முடிந்தாலும் மற்றொரு புறம் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என அரசு தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில் திரைப் பிரபலங்கள் தாமாக முன்வந்து தடுப்பூசியை போட்டுக் கொண்டு விழிப்புணர்வுகளை தொடர்ந்து ஏற்படுத்தி வருகின்றனர்.இந்த நிலையில் கொரோனாவிலிருந்து தப்பிக்க எந்த மாதிரி மாஸ்கை தேர்ந்தெடுக்க வேண்டும் அதை எவ்வாறு பயன் படுத்த வேண்டுமென ஷெரின் வெளியிட்டுள்ள விழிப்புணர்வு வீடியோ அனைவரது பாராட்டுக்களையும் பெற்று வருகிறது.
மாஸ்க்கை அணியுங்கள்
அந்த வீடியோவில் முதலில் சர்ஜரிக்கல் மாஸ்க் போட்டுக்கொண்டு மெழுகுவர்த்தியை ஊத எளிதாக மெழுகுவர்த்தி அணைந்து விடுகிறது. தொடர்ந்து இரண்டு சர்ஜரிக்கல் மாஸ்க் போட்டுக்கொண்டு மெழுகுவர்த்தியை கொஞ்சம் வேகமாக ஊத அணைந்து விடுகிறது. அதைத் தொடர்ந்து லேயர்கள் கொண்ட மாஸ்க் மற்றும் N95 மாஸ்க் அணிந்து மெழுகுவர்தியை தம் கட்டி ஊதியும் அணையவில்லை. எனவே மருத்துவ வல்லுநர்கள் கூறியது போலவே லேயர்கள் கொண்ட துணி மாஸ்க் அல்லது N95 மாஸ்க்கை அணியுங்கள் என ஷெரின் வெளியிட்டுள்ள இந்த வீடியோ அனைவரது பாராட்டுக்களையும் பெற்று வருகிறது.