ஸ்ருதியின் வயிற்றில் எழுதிய காதலர்… அப்படி அங்க என்ன எழுதினாரு?

சென்னை : உலகநாயகனின் மூத்த மகள் என்ற பெருமைக்குரியவர் ஸ்ருதி ஹாசன். புலிக்கு பிறந்தது பூனை ஆகுமா என்ற பழமொழியை பல நேரங்களில் மெய்ப்பித்துள்ளார் ஸ்ருதி.

பாட்டு, இசை, நடனம், நடிப்பு என அனைத்திலும் தனது தந்தையைப் போல சிறந்து ஜொலித்து வருகிறார் ஸ்ருதி.

நடிகை ஸ்ருதி, தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பரபரப்பான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அனைத்து மொழிகளிலும்

அனைத்து மொழிகளிலும்

நடிகர் கமல் ஹாசன் மற்றும் நடிகை சரிகாவுக்கு 1986ம் ஆண்டு ஜனவரி 28ம் தேதி பிறந்தார் ஸ்ருதி. சிறுவயது முதலே திரைத்துறையில் இவருக்கு அளாதி ஆர்வமாக இருந்துள்ளது. தனது அப்பாவைப்போலவே தமிழ், தெலுங்கு, இந்தி என அனைத்து மொழிகளிலும் கலக்கி வருகிறார்.

முறைப்படி இசை

முறைப்படி இசை

சென்னையில் உள்ள லேடி ஆண்டாள் பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்த ஸ்ருதி. மும்பை கல்லூரியில் உளவியல் முடித்தார். இசை மீது இருந்த ஆர்வத்தால் அமெரிக்கா கலிபோர்னியாவில் உள்ள இசைக்கல்லூரியில் இசையை முறைப்படி பயின்றார்.

தேவர்மகனில்

தேவர்மகனில்

தேவர் மகன் படத்தில் குழந்தை நட்சத்திரமாக தனது கலைப் பயணத்தை தொடங்கினார் ஸ்ருதி. இவர் அறிமுகமான முதல் படமே நடிகர் திலகம் சிவாஜி கணேஷனுடன் தான் என்ற பெருமை இவருக்கு உண்டு. அடுத்ததாக ஹே ராம் படத்தில் ஒரு சிறு வேடத்தில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி சுட்டி பெண் என்று பெயர் எடுத்தார்.

அறிமுக நடிகைக்கான விருது

அறிமுக நடிகைக்கான விருது

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவான 7ம் அறிவு திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். முதல் படத்திலேயே இயல்பான நடிப்பை வெளிப்படித்தி சிறந்த அறிமுக நடிகைக்கான விருதை வெற்றார் ஸ்ருதி. அந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இவருக்கு பட வாய்ப்புகள் வரத் தொடங்கின.

காதலில் மூழ்கடித்தார்

காதலில் மூழ்கடித்தார்

3 திரைப்படத்தில் ஜனனி கதாபாத்திரத்தில் ஸ்ருதி நடித்தார் என்பதைவிட அழகாக யதார்த்தமான காதலை திரையில் காண்பித்து அனைவரையும் காதலில் மூழ்கடித்தார். இப்படம் இவருக்கு வெற்றியைத் பெற்றுத் தந்ததோடு விருதையும் பெற்றுத்தந்தது.

முன்னணி நடிகர்கள்

முன்னணி நடிகர்கள்

விஜய்,அஜித்,சூர்யா,தனுஷ் என முன்னணி நடிகர்களுடன் நடித்து முன்னணி நடிகையாக வலந்து கொண்டு இருக்கிறார். தமிழ், தெலுங்கு, இந்தி என மொழிகளிலும் கலக்கி வருகிறார். இவர் நடித்த அனைத்து படங்களும் ஹிட்டடித்ததால் வெற்றி நாயகி என பெயர் எடுத்துள்ளார்.

ஸ்ருதியின் காதலர்

ஸ்ருதியின் காதலர்

நடிகை ஸ்ருதி ஹாசன் அசாம் மாநிலம் கவுகாத்தியைச் சேர்ந்த டூடுல் கலைஞரான சாந்தனுவை காதலித்து வருவதாக சொல்லப்படுகிறது. இவர்கள் இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து இணையத்தை அதிரிபுதிரி செய்வார்கள்

வேறு இடம் கிடைக்கலயா

இந்நிலையில், நடிகை ஸ்ருதி ஹாசன் தனது இஸ்டாகிராம் ஸ்டோரியில் ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார். அதில், ஸ்ருதியின் வயிற்றில் காதலர் சாந்தனு Thug Life என்று எழுதியுள்ளார். இந்த வீடியோ வைரலாகி வரும் நிலையில், எழுதுற இடமா அது என்றும், வேறு இடம் கிடைக்கலயா என்று ரசிகர்கள் மாறி மாறி கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X