»   »  உயிருக்கு போராடிய பாட்டியுடன் நடிகை செல்ஃபி: கொந்தளித்த நெட்டிசன்கள்

உயிருக்கு போராடிய பாட்டியுடன் நடிகை செல்ஃபி: கொந்தளித்த நெட்டிசன்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

லண்டன்: இங்கிலாந்தை சேர்ந்த பிரபல தொலைக்காட்சி தொடர் நடிகை மருத்துவமனையில் மரணப்படுக்கையில் இருந்த பாட்டியுடன் செல்ஃபி எடுத்து ட்விட்டரில் வெளியிட்டார்.

இங்கிலாந்தை சேர்ந்தவர் க்ளோ ஃபெர்ரி(21). அவர் ஹாலிவுட் தொலைக்காட்சி தொடரில் நடித்து வருகிறார். உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிரு்த அவரது பாட்டி உயிர் இழந்தார்.

Actress takes selfie with grandma lying in hospital bed

இதற்கிடையே க்ளோ ஃபுல் மேக்கப் போட்டுக் கொண்டு மருத்துவமனைக்கு சென்று உயிருக்கு போராடிய பாட்டியுடன் செல்ஃபி எடுத்துள்ளார். பட்டிக்கு செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டிருக்க க்ளோவோ சிரித்தபடி செல்ஃபி எடுத்துள்ளார்.

பாட்டி இறந்த பிறகு அந்த செல்ஃபியை ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார் க்ளோ. அதை பார்த்த நெட்டிசன்கள் கொந்தளித்து க்ளோவை கோபம் தீரும் வரை திட்டித் தீர்த்தனர்.

இதை பார்த்த க்ளோ வம்பு எதற்கு என்று அந்த ட்வீட்டை நீக்கிவிட்டார். இன்ஸ்டாகிராமிலும் புகைப்படத்தை நீக்கிவிட்டார்.

English summary
English television actress Chloe Ferry posted a selfie of hers with grandma lying in a hospital bed on twitter and instagram.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil