த்ரிஷா நடிக்கும் ‘த்விட்வா‘ த்ரில்லர் மூவி… இயக்குனர் யார் தெரியுமா?
சென்னை : பிரபல இயக்குனர் பவன் குமாரின் புதிய படமான 'த்விட்வா' வில் த்ரிஷா கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
இவர் அண்மையில் அமலாபாலின் குடியெடமைகே என்ற வெப் சீரிஸில் கவனத்தை ஈர்த்தார்.
த்ரிஷா 7 ஆண்டுகளுக்கு பிறகு புனித் ராஜ்குமாருடன் ஜோடி சேர்ந்துள்ளார்.

தனி ரசிகர் கூட்டம்
மும்பை,ஆந்திரா, கேரளாவிலிருந்து வந்த நடிகைகளே தமிழ்த் திரைத்துறையில் ஆதிக்கம் செலுத்தி வந்த நேரத்தில் தமிழ் திரைத்துறையில் சிறுசிறு கதாபாத்திரங்களில் நடித்து தனக்கேன தனி ரசிகர் கூட்டத்தை உருவாக்கிக் கொண்டவர் த்ரிஷா.

கவனத்தை ஈர்த்தார்
சென்னை எத்திராஜ் கல்லூரியில் பிபிஏ படித்த த்ரிஷா,1999ம் ஆண்டு மிஸ் சேலம் பட்டத்தையும், மிஸ் சென்னை பட்டத்தையும் பெற்று அனைவரின் கவனத்தை ஈர்த்தார். இதையடுத்து, பல விளம்பர படங்களில் நடிக்க த்ரிஷாவுக்கு வாய்ப்புகள் வந்து குவிந்தன.

மௌம் பேசியதே
இதையடுத்து, சிம்ரன், பிரஷாந்த் நடித்த ஜோடி திரைப்படத்தில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. ஜோடி படத்தில் சிம்ரனின் கல்லூரித் தோழியாக நடித்தார் த்ரிஷா. இதையடுத்து, லேசா லேசா திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்கத் தொடங்கினார். ஆனால், இந்த திரைப்படம் வெளியாவதற்கு முன்பே, மௌனம் பேசியதே, மனசெல்லாம் ஆகிய திரைப்படங்கள் வெளிவந்தன.

ஹிட் பாடல்கள்
இதையடுத்து, ஹரி இயக்கத்தில் உருவான சாமி திரைப்படம் த்ரிஷாவுக்கு ஒரு திருப்பு முனையான திரைப்படமாக அமைந்தது.இந்த திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது.இப்படத்தில் இடம் பெற்ற ஒவ்வொரு பாடல்களும் ஹிட்டடித்து பட்டி தொட்டி எங்கும் ஒலித்தன.

திறமையான நடிகை
த்ரிஷாவுக்கு சவாலான கதாபாத்திரமாக இருந்தது கில்லி. இத்திரைப்படம் முழுக்க சண்டை காட்சியிலும் ஓடிக்கொண்டே இருப்பார் த்ரிஷா. இந்த திரைப்படம் அவருக்கு ஒரு திறமையான நடிகை என்ற பெயரை பெற்றுத்தந்து. படமும் மிகபெரிய அளவில் வெற்றி பெற்றது.

கொடி கட்டி பறந்தார்
கில்லித்திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தமிழ், தெலுங்கு, கன்னடம் என அனைத்து மொழி படங்களிலும் கொடி கட்டி பறந்தார் த்ரிஷா. தனது சம்பளத்தையும் கணிசமாக உயர்த்தி முன்னணி நடிகை என்ற அந்தஸ்ததை பெற்றார். திருப்பாச்சி, ஆறு , உனக்கும் எனக்கும் சம்திங் சம்திங் திரைப்படம் த்ரிஷாவுக்கு வெற்றிப்படங்களாக அமைந்தன.

காதல் திரைப்படம்
கௌதம்மேனன் இயக்கத்தில் சிம்பு, த்ரிஷா இருவரும் இணைந்து நடித்த விண்ணைத்தாண்டி வருவாயா இன்று வரை காதலர்கள் கொண்டாடும் திரைப்படங்களில் ஒன்றாக இருக்கிறது.

ரஜினியுடன் பேட்ட
தமிழ் திரைத்துறையில் 18 ஆண்டுகள் தனக்கென தனி இடத்தை பிடித்த த்ரிஷா ரஜினி மற்றும் கமலுடன் நடிக்க வேண்டும் என்பது அவரின் விருப்பமாக இருந்தது. த்ரிஷாவின் இந்த ஆசை நிறைவேறியது. கமலுடன் தூங்காவனம் மற்றும் ரஜினியுடன் பேட்ட படத்திலும் நடித்தார் த்ரிஷா.

மறக்க முடியாத படம்
விஜய் சேதுபதியுடன் 96 திரைப்படத்தில் ஜானு கதாபாத்திரத்தில் அனைவரும் அசந்து போகும்படி நடித்திருந்தார். இந்த திரைப்படத்தை இளசுகள் முதல் பெருசுகள் வரை அனைவரும் தலையில் தூக்கிவைத்து கொண்டாடினர். இந்த திரைப்படம் த்ரிஷாவின் திரை வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு திரைப்படமாகும்.

குழந்தைக்கு அம்மாவாக
சமீபகாலமாக கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படங்களை தேர்வு செய்து நடித்து வரும் த்ரிஷா. பரமபதம் விளையாட்டு திரைப்படத்தில் ஒரு குழந்தைக்கு தாயாக நடித்திருந்தார்.இத்திரைப்படம் த்ரிஷாவின் 60வது திரைப்படமாகும். இப்படம் டிஸ்னி பிளாஸ் ஹாட் ஸ்டாரில் வெளியானது.

பொன்னியின் செல்வன்
மணிரத்னம் இயக்கும் வரலாற்றுத் திரைப்படமான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் குந்தவை கதாபாத்திரத்தில் த்ரிஷா நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பாண்டிச்சேரியில் முடிவடைந்ததை அடுத்து, தற்போது ஹைதராபாத்தில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இப்படத்திற்காக த்ரிஷா குதிரை பயிற்சி மேற்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகின.

த்விட்வா
லூசியா, யு டர்ன் போன்ற திரைப்படங்களை இயக்கிய பவன் குமாரின் த்விட்வா படத்தில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார் த்ரிஷா. பவன் குமார் எப்போதும் வித்தியாசமான திரைப்படங்களை தனது ரசிகர்களுக்கு கொடுத்து வருகிறார். இப்படமும் ஒரு த்ரில்லான திரைப்படம் என்று கூறப்படுகிறது.
Recommended Video

புனித் ராஜ்குமார் ஹீரோவாக
புனித் ராஜ்குமார் ஹீரோவாக நடிக்கும் இந்தப் படத்தை ஹம்பிள் ஃபிலிம்ஸ் தயாரிக்கிறது. புனித் ராஜ்குமார் மற்றும் பவன் குமார் இருவரும் இப்படத்தில் இணைந்துள்ளதால், இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

கிட்டத்தட்ட 7 ஆண்டுகளுக்கு பிறகு
கடந்த 2014ம் ஆண்டு வெளியான பவர் படத்தில் கன்னட முன்னணி நடிகரான புனித் ராஜ்குமாருக்கு ஜோடியாக த்ரிஷா நடித்திருந்தார். பவர் திரைப்படம் தான் த்ரிஷாவின் முதல் கன்னடப்படமாகும். இத்திரைப்படம் தெலுங்கில் தூக்குடு என்ற பெயரில் வெளியானது. அதில் சமந்தா நடித்த வேடத்தில் தான் பவர் படத்தில் த்ரிஷா நடித்திருந்தார். கிட்டத்தட்ட 7 ஆண்டுகள் கழித்து மீண்டும் இவருடன் ஜோடி சேர உள்ளார்.


Click it and Unblock the Notifications











