மகேஷ் பாபு, தமனை தொடர்ந்து நடிகை த்ரிஷாவுக்கும் கொரோனா.. தீயாய் பரவுது.. உஷாரா இருங்க மக்களே!

சென்னை: நடிகை மீனா, மகேஷ் பாபு, லக்‌ஷ்மி மஞ்சு மற்றும் தமன் என தொடர்ந்து ஏகப்பட்ட பிரபலங்களை கொரோனா வைரஸ் தாக்கி வருகிறது.

இந்நிலையில், தற்போது இந்த நட்சத்திர பட்டியலில் நடிகை த்ரிஷாவும் இணைந்துள்ளார்.

புத்தாண்டுக்கு முன்னதாகவே தனக்கு கொரோனா பாதித்ததாகவும் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக குணமாகி வருவதாகவும் நடிகை த்ரிஷா தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

பிரபலங்களை துரத்தும் கொரோனா

பிரபலங்களை துரத்தும் கொரோனா

படப்பிடிப்புகள் முடக்கப்படாத நிலையில், பல நடிகர்களும் சினிமா ஷூட்டிங்கில் பிசியாகி உள்ளனர். அதே போல புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக வெளிநாடுகளுக்கு சென்று வந்தனர். இந்நிலையில், நடிகை மீனா, மகேஷ் பாபு, இசையமைப்பாளர் தமன், நடிகை லக்‌ஷ்மி மஞ்சு உள்ளிட்ட பிரபலங்கள் கடந்த சில நாட்களில் கொரோனா பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர்.

த்ரிஷாவுக்கு கொரோனா

த்ரிஷாவுக்கு கொரோனா

இந்நிலையில், தற்போது நடிகை த்ரிஷாவும் தனக்கு கொரோனா பாசிட்டிவ் ஆகி உள்ளதாக ட்விட்டரில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டும் தன்னை கொரோனா தாக்கி விட்டதாகவும், கொரோனா பாதிப்பில் இருந்து தற்போது கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தடுப்பூசி தான் காப்பாற்றியது

தடுப்பூசி தான் காப்பாற்றியது

இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டது தான் தனக்கு பெரிய பாதிப்பு வராமல் காப்பாற்றியது என்றும் ரசிகர்கள் கொரோனா தடுப்பூசியை சீக்கிரமே போட்டுக் கோங்க மருத்துவர்களின் ஆலோசனைகளை கேட்டு நடந்து கொள்ளுங்கள் என ரசிகர்களுக்கு அறிவுரை வழங்கி உள்ளார்.

கோல்டன் விசா

கோல்டன் விசா

சமீபத்தில் நடிகை த்ரிஷாவுக்கு ஐக்கிய அமீரக அரசு கோல்டன் விசாவை அளித்து கெளரவப்படுத்தியது. தமிழ் சினிமா நடிகைகளிலேயே முதல் நபராக கோல்டன் விசாவை பெற்றது நான் தான் என ட்விட்டரில் நடிகை த்ரிஷா போட்டோக்களை ஷேர் செய்து வைரலாக்கி இருந்தார்.

சினிமாவில் 19 வருஷம்

சினிமாவில் 19 வருஷம்

தமிழ் சினிமாவில் ஹீரோயினாக 19 ஆண்டுகள் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய நடிகை த்ரிஷா சமீபத்தில் 19 ஆண்டுகள் கடந்த கொண்டாட்டத்தை தனது ரசிகர்களுடன் கேக் வெட்டிக் கொண்டாடி மகிழ்ந்த தருணங்கள் ரசிகர்களை ரசிக்க வைத்தது. மிளகாய் பொடி மாமி, ஜெர்சி, ஜானு என தொடர்ந்து ரசிகர்களை ஈர்த்து வருகிறார் த்ரிஷா.

பொன்னியின் செல்வன் குந்தவை

பொன்னியின் செல்வன் குந்தவை

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் ஆயுத எழுத்து படத்திற்கு பிறகு மீண்டும் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து வருகிறார் நடிகை த்ரிஷா. குந்தவையாக த்ரிஷா நடித்துள்ள காட்சிகளின் ரஷ்களை சமீபத்தில் பார்த்து படக்குழுவே மிரண்டு போனதாக தகவல்கள் வெளியாகின. கொரோனா பாதிப்பில் இருந்து நடிகை த்ரிஷா சீக்கிரம் குணமாகி வரவேண்டும் என ஏகப்பட்ட ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X