Don't Miss!
- News
குடியரசு தின விழாவில் கலந்து கொள்ள எகிப்து அதிபர் அல் சிசி வருகை! டெல்லியில் உற்சாக வரவேற்பு
- Finance
Budget 2023: பட்ஜெட்டில் இப்படி ஒரு சர்பிரைஸ் கிடைக்குமா.. தங்கம் இறக்குமதியாளர்களுக்கு வாய்ப்பு?
- Sports
பந்துவீச்சில் மாற்றம் செய்தேன்.. இரட்டிப்பாக உழைப்பதில் மகிழ்ச்சி.. டி20 தொடருக்கு ரெடி - ஹர்திக்
- Automobiles
டொயோட்டாவுக்கு ஏழரை சனி! காரை நம்பி வாங்கியவர்கள் அதிர்ச்சி! பிரச்னைக்கு மேல பிரச்னையா வந்துகிட்டு இருக்கு!
- Lifestyle
உங்க சருமம் பளபளன்னு ஜொலிக்கவும் முடி நீளமா வளரவும் பப்பாளியை எப்படி யூஸ் பண்ணனும் தெரியுமா?
- Technology
Android போன்களுக்கு புது சோதனை.! 'இதை' செஞ்சுடாதீங்க.! மானம், பணம் எல்லாமே போய்விடும்.! எச்சரிக்கை.!
- Travel
கன்பார்ம் செய்யப்பட்ட ரயில் டிக்கெட்டின் பயண தேதியை மாற்ற வேண்டுமா – இப்படி செய்யுங்கள்!
- Education
CRPF Head constable Recruitment 2023:பிளஸ் டூ பாஸ்? 1,458 பணிக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி வாய்ப்பு...!
அம்மா அதிகமா குடிச்சாங்க..குடும்பமே பிரிஞ்சு போச்சு..இவங்க தான் காரணம்..மனம் திறந்த வனிதா!
சென்னை : வைரல் ஸ்டார் வனிதா விஜயகுமார், தனது குடும்பத்தில் நடந்த பிரச்சனைகள் குறித்து முதல்முறையாக மனம் திறந்து பேட்டி அளித்துள்ளார்.
அடிக்கடி சர்ச்சையில் சிக்கிக்கொள்ளும் நடிகை வனிதா விஜயகுமார், பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப்பிறகு பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார்.
வனிதாவின் தைரியமான பேச்சு, எதையும் முகத்திற்கு நேராக சொல்லும் குணம் ரசிகர்களுக்கு பிடித்துப்போனது. குறிப்பாக இல்லத்தரசிகள் வனிதாவை கொண்டாட ஆரம்பித்துவிட்டார்கள் என்றே சொல்லலாம்.
ராபர்ட்
பிக்
பாஸ்ல
கலந்துக்க
நான்
தான்
காரணம்…
ஆனால்
என்னைப்
பற்றி
பேசவே
இல்லை:
குமுறிய
வனிதா

வனிதா விஜயகுமார்
சந்திரலேகா படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை வனிதா, ஒரு சில திரைப்படங்களில் நடித்துக்கொண்டிருக்கும் போதே, 2000ம் ஆண்டு ஆகாஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆகாஷுக்கும் வனிதாவுக்கும் ஸ்ரீஹரி மற்றும் ஜோவிகா என்ற இரண்டு குழந்தைகள் பிறந்த நிலையில், 2005ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்து செய்து கொண்டனர்.

இருவருக்கும் சண்டை
அப்போது மூத்த மகன் ஸ்ரீஹரி விஜய்யை தன்னுடன் அனுப்ப வேண்டும் என்று ஆகாஷ் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வனிதாவின் குடும்பமும் ஆகாஷ் பக்கம் நின்றனர். இந்த காரணமாக வனிதா குடும்பத்திற்கும் வனிதாவிற்கும் ஏகப்பட்ட பிரச்சினைகள் வெடித்தது. விஜயகுமார் உடன் சென்ற ஸ்ரீஹரியை, சென்னை விமான நிலையத்தில் வனிதா வலுக்கட்டாயமாக இழுக்க முயன்ற போது வனிதாவுக்கும் விஜயகுமாருக்கும் இடையே சண்டை ஏற்பட்டது.

வனிதா என் மகளே இல்லை
இதையடுத்து, மஞ்சுளாவும் விஜயகுமாரும் கூட்டாக சேர்ந்து பேட்டி அளித்து, வனிதா என் மகளே இல்லை என்றனர். இதையடுத்து, ஒட்டுமொத்த குடும்பத்தினரும் வனிதாவை ஒதுக்கிவிட்டார்கள். இதனால், கடந்த சில ஆண்டுகளாகவே வனிதா தனது இருமகள்களுடன் தனியாகவே வாழ்ந்து வருகிறார்.

அம்மா மன அழுத்தத்தில் இருந்தார்
இந்நிலையில், பிரபல யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள வனிதா, என் குடும்பத்தில் நடந்த பிரச்சனைக்கு காரணமே அவர் தான் என மனம் திறந்து பேட்டி அளித்துள்ளார். என்னுடைய பிரச்சனையால் அம்மா மிகவும் மன அழுத்தத்தில் இருந்தார்கள். இதனால், அவர்கள் அதிகமாக குடிக்க தொடங்கியதால், அவரால் சுயமாக எந்த முடிவையும் எடுக்க முடியவில்லை. அந்த நேரத்தில் யார் என்ன சொன்னார்களோ அதை அப்படியே செய்தார்கள்.

தலைகீழாக மாறிவிட்டது
ஆனால், அம்மா மருத்துவமனையில் இருக்கும் போது நான் தான் உடன் இருந்தேன். அப்போது, வீட்டில் இருப்பவர்கள் உன்னை ஏமாற்றிவிடுவார்கள் இப்போதே அட்வகேட்டை கூப்பிடு என்று கதறி அழுதார்கள். நான் சொல்லுவதை வீடியோ எடு என்றார்கள். ஆனால், அந்த நேரத்தில் என் வாழ்க்கையை பாதுகாத்துக்கொள்ள எனக்கு கொஞ்சம் கூட விருப்பம் இல்லை. ஆனால், அம்மாவின் இறப்புக்கு பிறகு அனைத்துமே தலைகீழாக மாறிவிட்டது.

என் ரத்த சொந்தம்
எனக்கும் அப்பாவுக்கும் இப்போ கூட எந்த பிரச்சனையும் இல்ல அவர் என்னை மன்னித்துவிட்டார். அதேபோல, அண்ணன் அருண் விஜய்கூட என்னிடம் நன்றாக பேசுவார். என் ரத்த சொந்தம் என் மீது இப்போதும் பாசம் வைத்து இருக்கிறார்கள். வெளியில் இருந்து வந்தவர்கள் தான் என் குடும்பத்தை குழப்பி குடும்பத்தை பிரித்துவிட்டார்கள் என்றார்.