For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  எங்கள் காதல் எப்போதும் குறையாது.. யாரும் ஒரு டேஷையும் "......." முடியாது.. கெத்துக் காட்டும் வனிதா!

  |

  சென்னை: நடிகை வனிதா விஜயக்குமார், தனது ரிஜிஸ்டர் திருமணத்திற்கான மோதிரங்களை அறிமுகப் படுத்தியுள்ளார்.

  இது என்னோட வாழ்க்கை Vanitha producer Ravinder க்கு பதிலடி

  ஏற்கன இரண்டு திருமணம் ஆனவர் நடிகை வனிதா விஜயக்குமார். முதல் கணவருக்கு இரண்டு பிள்ளைகளும் இரண்டாவது கணவருக்கு ஒரு மகள் என மொத்தம் மூன்று பிள்ளைகளை பெற்றுள்ளார்.

  இதில் முதல் கணவரான நடிகர் ஆகாஷுக்கு பிறந்த மகன், ஸ்ரீஹரி தனது அப்பா மற்றும் தாத்தா விஜயக்குமாரின் கண்காணிப்பில் உள்ளார். மற்ற இரண்டு பெண் குழந்தைகளும் வனிதாவுடன் உள்ளனர்.

  லைவில் கணவரை அழைத்து மீண்டும் லிப்லாக் கொடுத்த வனிதா அக்கா.. நைஸ் மேன் என புகழாரம்!

  பிக்பாஸ் சீசன் 3

  பிக்பாஸ் சீசன் 3

  ஏற்கனவே விவாகரத்து, சொத்து தகராறு, மகனுக்காக சண்டை. குடும்பத்தினருடன் பிரச்சனை என அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கினார் வனிதா. இந்நிலையில் கடந்த ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்று பெரும் பிரபலமானார்.

  பீட்டர்பாலுடன் காதல்

  பீட்டர்பாலுடன் காதல்

  தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்று டைட்டில் வின்னரானார். இதனை அஸ்திவாரமாக வைத்து யூட்யூப் சேனல் ஒன்றை தொடங்கினார். இந்நிலையில் தனது யூட்யூப் சேனலில் பணியாற்றிய ஆன்லைன் எடிட்டரான பீட்டர் பாலுடன் காதல் கொண்டார்.

  முதல் மனைவி புகார்

  முதல் மனைவி புகார்

  கடந்த 27ஆம் தேதி பீட்டர் பாலை கிறிஸ்தவ முறைப்படி திருமணம் செய்து கொண்டார். லிப்லாக்குடன் கோலாகலமாய் நடைப்பெற்றது திருமணம். ஆனால் பீட்டர் பாலின் முதல் மனைவி தன்னை விவாகரத்து செய்யாமல் தனது கணவர் இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாக வடபழனி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

  கழுவி ஊற்றினர்

  கழுவி ஊற்றினர்

  இதனால் வனிதாவின் திருமணம் பெரும் சர்ச்சையானது. வனிதா சட்டப்படி திருமணம் செய்து கொள்ள வில்லை திரை பிரபலங்கள் முதற்கொண்டு பலரும் கருத்து தெரிவித்து வந்தனர். சமூக வலைதளங்களிலும் நெட்டிசன்கள், அடுத்தவர் கணவரை வனிதா அபகரித்து கொண்டதாக கழுவி ஊற்றினர்.

  திருமண மோதிரம்

  திருமண மோதிரம்

  இந்நிலையில் நடிகை வனிதா தனக்கு சட்டப்படி திருமணம் நடைபெறும் என்று கூறியிருப்பதோடு தனது பதிவு திருமணத்திற்கான மோதிரங்களையும் இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். அதில் ஒரு மோதிரத்தில் சாவியும் மற்றொரு மோதிரத்தில் பூட்டும் தொங்குவது போல் டிசைன் செய்யப்பட்டுள்ளது.

  அதற்காக வைத்திருக்கிறேன்

  அதற்காக வைத்திருக்கிறேன்

  இந்த போட்டோவை தனது இன்ஸ்டாகிரம் பக்கத்தில் ஷேர் செய்துள்ள வனிதா, லாக்டவுனுக்கு பிறகு இறுதியாக மோதிரங்கள் வந்து சேர்ந்து விட்டன. பதிவுசெய்யப்பட்ட உண்மையான திருமணத்திற்காக இதனை ஒதுக்கி வைக்கிறேன்.

  புடுங்க முடியாது

  புடுங்க முடியாது

  யாருக்கெல்லாம் புரியவில்லையோ.. அல்லது ஒரு போதும் புரியாதவர்களுக்காக.. இவர்தான் என சோல்மெட், கடவுள் கொடுத்தவர்.. நாங்கள் எப்போதும் காதலில் இருப்போம்.. கடைசி மூச்சு வரை எங்கள் காதல் தொடரும்... சட்டமோ அல்லது டிராமா ட்ரூப்ஸோ ஒரு டேஷையும் புடுங்க முடியாது.. இவ்வாறு நடிகை வனிதா அந்த போட்டோவை போட்டு கேப்ஷன் கொடுத்துள்ளார்.

  கமெண்ட் ஆப்ஷன்

  கமெண்ட் ஆப்ஷன்

  நடிகை வனிதா விஜயக்குமார் என்ன பதிவு போட்டாலும் நெட்டிசன்கள் அவரை திட்டி தீர்த்து கழுவி ஊற்றி வருகின்றனர். இந்நிலையில் தனது இன்ஸ்டா பதிவுகளுக்கான கமெண்ட் ஆப்ஷனை தடை செய்து வைத்துள்ளார் வனிதா விஜயக்குமார்.

  பயாலஜிக்கல் அப்பா

  பயாலஜிக்கல் அப்பா

  இதேபோல் தனது மூன்றாவது கணவரான பீட்டர் பால், முதல் கணவரின் மகளான ஜோவிகா மற்றும் இரண்டாவது கணவரின் மகளான ஜெயந்திகாவுடன் சோஃபாவில் அமர்ந்து கொஞ்சும் போட்டோவையும் ஷேர் செய்துள்ளார். மேலும் அந்த போட்டோவுக்கு ஒரு பயாலஜிக்கல் தந்தை வேறு.. ஒரு அப்பா வேறு... ஒரு அப்பாதான் அம்மா.. ஒரு அம்மாதான் எல்லாம் என கேப்ஷன் கொடுத்துள்ளார்.

  English summary
  Actress Vanitha Shares her register wedding rings. She also says that, we are in love forever and will continue to be till our last breath...no law or no drama troupes can pluck a....
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more
  X