சினிமா வாய்ப்பிற்காக படுக்கையை பகிரும் நடிகைகள்...பிரபல டைரக்டர் பகீர் பேட்டி
சென்னை : சினிமா வாய்ப்பிற்காக பல நடிகைகள் படுக்கையை பகிர்வதாக பிரபல தெலுங்கு டைரக்டர் பகிரங்கமாக பேட்டி அளித்துள்ளது டோலிவுட்டில் பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது.
டோலிவுட் இயக்குனர், தயாரிப்பாளர், இசையமைப்பாளர் என பல திறமைகளைக் கொண்டவர் கீதா கிரஷ்ணா. தெலுங்கில் சங்கீர்த்தனா, கீச்சுரலு, கோகிலா உள்ளிட்ட படங்களை இயக்கி பிரபலமானவர். தமிழிலும் சில படங்களை இயக்கி உள்ளார். தமிழில் டைம், நிமிடங்கள் ஆகிய படங்களை இயக்கி உள்ளார்.

முதல் படத்திலேயே விருது
தெலுங்கில் 1987 ம் ஆண்டு நாகர்ஜுனா நடித்த சங்கீர்த்தனா படத்தை இயக்கி டைரக்டராக அறிமுகமானார். முதல் படத்திலேயே சிறந்த டைரக்டருமான நந்தி விருதினை வென்றுள்ளார். சமீபத்தில் யூட்யூப் சேனல் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார். அதில், நீங்கள் சினிமாவில் அறிமுகமாவிற்கு வந்தது முதல் என்னவெல்லாம் மாற்றங்கள் நடந்துள்ளது என கேட்கப்பட்டுள்ளது.

படுக்கையை பகிரும் நடிகைகள்
அதற்கு பதிலளித்த கீதா கிருஷ்ணா, பெரும்பாலான நடிகைகள் மிக குறுகிய காலத்திலேயே புகழின் உச்சிக்கு சென்று விடுகிறார்கள். இதற்கு காரணம், பட வாய்ப்பிற்காக அவர்கள் டைரக்டர்களுடன் படுக்கையை பகிர்வது தான். சினிமாவிற்கு வந்த சில காலத்திலேயே நல்ல படங்கள், பெரிய பட்ஜெட் மற்றும் பெரிய நடிகர்களின் படங்களில் நடிக்க வாய்ப்பை பெறுவதற்கும் இது தான் காரணம் என்றார்.

பற்றி எரியும் டோலிவுட்
கீதா கிருஷ்ணாவின் இந்த பேட்டி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே நடிகைகள் பலரும் தாங்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுவதாக புகார் கூறி வருகிறார்கள். ஸ்ரீரெட்டி போன்ற நடிகைகள் வெளிப்படையாகவே இதை கூறி வருகின்றனர். இந்த நிலையில் கீதா கிருஷ்ணா இப்படி ஒரு பேட்டியை அளித்துள்ளது சர்ச்சையாகி உள்ளது.

கேள்வி கேட்கும் நெட்டிசன்கள்
சோஷியல் மீடியாவிலும் இந்த விவகாரம் பரபரப்பை கிளப்பி உள்ளது. கீதா கிருஷ்ணாவிற்கு இது தொடர்பாக நெட்டிசன்கள் பல கேள்விகளை எழுப்பி உள்ளனர். நெட்டிசன்கள் கண்டபடி எழுப்பி வரும் கேள்விளால் தெலுங்கு சினிமாவே உலகமே அதிர்ச்சியில் உள்ளது.


Click it and Unblock the Notifications











