இது தான் லேட்டஸ்ட் டிரெண்டா...நடிகைகளின் சரக்கு பாட்டில் ஃபோட்டோஷுட்

சென்னை : முன்பெல்லாம் நடிகர் சினிமாக்களில் புகைபிடிப்பது போன்ற காட்சிகள் வந்தாலே கொந்தளித்து, அதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்துவார்கள். ஆனால் இப்போது நடிகைகள் ஓப்பனாக சரக்கு பாட்டிலுடன் போஸ் கொடுத்து வருகிறார்கள்.

Recommended Video

Samantha Nagachaitanya பிரிவால் வருத்தத்தில் வாடும் Nagarjuna | Nagachaitanya, Amala

டாப் ஹீரோக்கள் போதை தொடர்பான விளம்பரங்களில் நடிப்பதாலும், அது போன்ற காட்சிகளில் சினிமாக்களில் நடிப்பதால் சமூக சீர்கேடு ஏற்படுகிறது. இளைஞர்களுக்கு அவர்கள் தவறான முன் உதாரணமாக இருப்பதாக பாலிவுட்டில் அமிதாப் பச்சன், ஷாருக்கான் துவங்கி, கோலிவுட்டில் ரஜினிகாந்த், தனுஷ் பல நடிகர்களுக்கும் எதிர்ப்பு கிளம்பியது.

முடிவை மாற்றிய ஹீரோக்கள்

முடிவை மாற்றிய ஹீரோக்கள்

இதனால் சமுதாய நலன் கருதி தங்கள் படங்களில் புகைப்பிடிக்கும், மது அருந்தும் காட்சிகளில் நடிக்க போவதில்லை என பல முன்னணி ஹீரோக்கள் அறிவித்தனர். படங்களில் வைக்கப்படும் புகைப்பிடிக்கும் மற்றும் மது அருந்தும் காட்சிகளின் போது, கீழே எச்சரிக்கை வாசகம் இடம்பெறும்படி செய்யப்பட்டு வருகிறது.

மாநாட்டிற்கு வந்த எதிர்ப்பு

மாநாட்டிற்கு வந்த எதிர்ப்பு

சமீபத்தில் வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள மாநாடு படத்தில், போலீஸ் ரோலில் நடித்த எஸ்.ஜே.சூர்யா அறிமுகமாகும் காட்சியில் அவர் சிகரெட் பிடித்தபடி என்ட்ரி கொடுப்பார். அந்த காட்சியில் எச்சரிக்கை வாசகம் இடம்பெறவில்லை என கூறி சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். படத்திற்கே கூட சிலர் தடை கேட்டனர். இதனால் பிறகு அந்த காட்சி எச்சரிக்கை வாசகத்துடன் திரையிடப்பட்டது.

 சரக்கு பாட்டிலுடன் நடிகைகள்

சரக்கு பாட்டிலுடன் நடிகைகள்

ஆனால் தற்போது பிரபல நடிகைகள் வெளிநாட்டு சரக்கு பாட்டில், கையில் கிளாசுடன் போஸ் கொடுத்து போட்டோஷுட் நடத்தி வருவது அதிகரித்து வருகிறது. இந்த போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு, லைக்குகளை அள்ளி வருகிறார்கள். அதே சமயம் நெட்டிசன்கள் இதை கண்டபடி திட்டி தீர்த்து வருகிறார்கள்.

அதிகரிக்கும் நடிகைகள்

அதிகரிக்கும் நடிகைகள்

ராய் லட்சுமி, அமலா பால், இலியானா, கத்ரினா கைஃப், பிரியங்கா சோப்ரா, நிதி அகர்வால் என பலரும் வெளிநாட்டு சரக்கு பாட்டிலுடன் போஸ் கொடுத்து வருகிறார்கள். இந்த வரிசையில் லேட்டஸ்டாக தனுஷ் பட நாயகி அமைரா தஸ்தூரும் இணைந்துள்ளார். பாலிவுட், கோலிவுட் என எந்த வித்தியாசமும் இல்லாமல் கவர் ஃபோட்டோவிற்காக கவர்ச்சி ஃபோட்டோஷுட் நடத்தி வந்த நடிகைகள் தற்போது விளம்பரத்திற்காக சரக்கு பாட்டிலுடன் போட்டோஷுட் நடத்தி வருவது அதிகரித்து வருகிறது.

எதிர்க்கும் நெட்டிசன்கள்

எதிர்க்கும் நெட்டிசன்கள்

நடிகைகள் அத்துமீறி கவர்ச்சி காட்டி போட்டோ வெளியிடுவதையே பலர் விமர்சித்து வரும் நிலையில், இது போன்ற போட்டோஷுட்களுக்கு ரசிகர்களும், நெட்டிசன்களும் எதிர்ப்பு தெரிவித்து, கேள்வி கேட்டு வருகின்றன. இது என்ன லேட்டஸ்ட் டிரெண்டா, எல்லா நடிகைகளுமே இப்படி இறங்கி விட்டார்களே என கமெண்ட் செய்து வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X