»   »  நாலே நாளில் ரூ.100 கோடி வசூல் செய்த ரன்பிர், ஐஸ்வர்யா படம்: காரணம் ஆர்வக்கோளாறு!

நாலே நாளில் ரூ.100 கோடி வசூல் செய்த ரன்பிர், ஐஸ்வர்யா படம்: காரணம் ஆர்வக்கோளாறு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: ரன்பிர் கபூர், ஐஸ்வர்யா ராய் நடித்த ஏ தில் ஹை முஷ்கில் படம் வெளியான நான்கே நாட்களில் உலக அளவில் ரூ.100 கோடி வசூல் செய்துள்ளது.

கரண் கோஹார் இயக்கத்தில் ரன்பிர் கபூர், ஐஸ்வர்யா ராய், அனுஷ்கா சர்மா நடிப்பில் ஏ தில் ஹை முஷ்கில் படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியானது. முக்கோண காதல் கதையான இந்த படம் தீபாவளி ஸ்பெஷலாக ரிலீஸ் செய்யப்பட்டது.

கரண் ஜோஹாரின் வழக்கமான எமோஷனல் படமாக இது அமைந்துள்ளது.

ரன்பிர், ஐஸ்வர்யா

ரன்பிர், ஐஸ்வர்யா

ஏ தில் ஹை முஷ்கில் படத்தில் ஐஸ்வர்யா ராய் தன்னை விட வயதில் சிறியவரான ரன்பிர் கபூருடன் ஓவர் நெருக்கமாக நடித்துள்ள செய்தி அறிந்த ரசிகர்களுக்கு படத்தில் என்ன தான் உள்ளது என்பதை பார்த்துவிடும் ஆர்வம் ஏற்பட்டது.

ஆர்வம்

ஆர்வம்

ஐஸ்வர்யா ராயின் வீட்டில் வேறு இந்த படத்தால் புகைச்சல் என்று எல்லாம் செய்திகள் வெளியானதால் படத்தை பார்க்கும் ஆர்வத்தில் ரசிகர்கள் தியேட்டர்களுக்கு படையெடுத்து வருகிறார்கள்.

ரூ.100 கோடி

ரூ.100 கோடி

ஏ தில் ஹை முஷ்கில் ரிலீஸான நான்கு நாட்களில் உலக அளவில் ரூ. 100 கோடி வசூல் செய்துள்ளது. ஒரு ஹிட்டாவது கிடைக்காதா என்று ஏங்கிய ரன்பிருக்கு இந்த வெற்றி ஆறுதலை அளித்துள்ளது.

ஐஸ்வர்யா

ஐஸ்வர்யா

நடிப்புக்கு விடுப்பு விட்டு மீண்டும் திரும்பி வந்த ஐஸ்வர்யா ராய்க்கும் இது தான் முதல் வெற்றி. அதனால் அவரும் மகிழ்ச்சியில் உள்ளார். சுல்தான் வெற்றியை தொடர்ந்து அனுஷ்காவுக்கு கிடைத்துள்ள இரண்டாவது வெற்றி.

English summary
Karan Johar's Ae Dil Hai Mushkil has colleced Rs. 100 crore in just four days of its release.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil