பிரபாஸின் ஆதிபுருஷ்..மாஸ் அப்டேட்டை வெளியிட்ட இயக்குநர்!

ஐதராபாத்: பாகுபலி புகழ் பிரபாஸ் நடித்துள்ள ஆதிபுருஷ் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியீடு குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

ஓம் ராவத் இயக்கத்தில் உருவாகியுள்ள ஆதிபுருஷ் படத்தில் பிரபாஸ், சைஃப் அலிகான், கீர்த்தி சனோன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ராமாயணக் கதையை மையமாக வைத்து இப்படத்தின் கதை உருவாக்கியுள்ளார் ஓம் ராவத்.

ஆதிபுருஷ்

ஆதிபுருஷ்

ராதே ஷ்யாம், சலார், ஆதிபுருஷ், நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவாக உள்ள படங்களை கைவசம் வைத்து இருக்கிறார் பிரபாஸ். பூஜா ஹெக்டேவுடன் பிரபாஸ் ஜோடி போட்டு நடித்த ராதே ஷ்யாம் திரைப்படம் மார்ச் 11ம் தேதி வெளியானது. இந்த படத்தில் கைரேகை ஜோதிடராக பிரபாஸ் நடித்திருந்தார். இப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

ஜனவரி 12ந் தேதி ரிலீஸ்

ஜனவரி 12ந் தேதி ரிலீஸ்

ஓம் ராவத் இயக்கத்தில் உருவாகியுள்ள ஆதிபுருஷ் உருவாகி உள்ள ஆதிபுருஷ் திரைப்படம் 2023ம் ஆண்டு ஜனவரி 12-ம் தேதி 3டி தொழில்நுட்பத்தில் வெளியாகும் என்று படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் என அனைத்து மொழிகளிலும் வெளியாகவுள்ளது. படப்பிடிப்பு முடிந்ததை அடுத்து படத்தின் போஸ்ட் ப்ரோடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன.

ஃபர்ஸ்ட் லுக்

ஃபர்ஸ்ட் லுக்

இந்நிலையில் இயக்குநர் ஓம் ராவத் தனது ட்விட்டர் பக்கத்தில், ஆதிபுருஷ் இத்திரைப்படத்தில் டீசர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடும் தேதியை அறிவித்துள்ளார். அதில் அக்டோபர் 2ந் தேதி டீசர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாக உள்ளது. இப்படம் ராமாயணத்தை கதையை மையமாகக்கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

500 கோடி பட்ஜெட்

500 கோடி பட்ஜெட்

500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் மிகவும் பிரம்மாண்டமாக தயாராகி வரும் இப்படத்தில் பிரபாஸ் ராமனாகவும், சைஃப் அலிகான் ராவணன் கதாபாத்திரத்திலும், கீர்த்தி சனோன் சீதையாகவும் நடித்துள்ளார். நடிகை க்ரித்தி சனோன் உடன் நடிகர் பிரபாஸ் டேட்டிங் செய்து வருவதாக பாலிவுட்டில் பெரும் பரபரப்பு கிளம்பிய நிலையில் இருவரின் கெமிஸ்டிரியை திரையில் காண ரசிகர்கள் காத்து இருக்கிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X