பிக் பாஸ் 6ல் கடைசியாக எவிக்சனான ஏடிகே... லைஃப் டைம் செட்டில்மெண்ட் கொடுத்த கமல்
சென்னை: அக்டோபர் 9ம் தேதி தொடங்கிய பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி 98வது நாளை கடந்து விட்டது.
இந்த வாரம் இறுதியில் யார் டைட்டில் வின்னர் என்பது தெரிந்துவிடும்.
இந்நிலையில், பிக் பாஸ் வீட்டில் இருந்து கடைசி எவிக்சனாக இலங்கை ராப் பாடகர் ஏடிகே வெளியேறினார்.
கடைசியாக நடைபெற்ற Sacrifice Task-ல் ஏடிகே செய்த தியாகத்துக்கு லைஃப் டைம் செட்டில்மெண்ட் கொடுத்து வெளியே அனுப்பினார் கமல்.

பிக் பாஸ் கடைசி எவிக்சன்
21 போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக் பாஸ் சீசன் 6, இந்த வாரத்துடன் முடிவுக்கு வருகிறது. இதுவரை 14 பேர் வெளியேறிவிட்ட நிலையில், இந்த சீசனின் கடைசி எவிக்சன் நேற்று நடைபெற்றது. அமுதா டிக்கெட் டூ பினாலே வெற்றி மூலம் இறுதிப்போட்டிக்கு தகுதிப் பெற்றுவிட்டார். அவரை தொடர்ந்து அசீம், விக்ரமன், ஷிவின் ஆகியோர் ஓட்டுகளின் அடிப்படையில் சேவ் ஆகிவிட்டனர். இறுதியாக மைனா, கதிர், ஏடிகே ஆகியோர் இடையே கடும் போட்டி நிலவியது.

வெளியேறிய ஏடிகே
அதனையடுத்து கார்டன் ஏரியாவில் மூவருக்கும் பானை கட்டி தொங்கவிட, அவைகளை மூன்று பேரும் ஒரே நேரத்தில் உடைத்தனர். அப்போது அதிலிருந்து சிவப்பு ரோஜாக்கள் விழுந்து ஏடிகே எவிக்சன் செய்யப்பட்டார். 98 நாட்கள் பிக் பாஸ் வீட்டில் இருந்ததே மிகப் பெரிய வெற்றிதான் என மகிழ்ச்சியோடு வெளியேறினார் ஏடிகே. ஆனால், வெளியே அவரே எதிர்பார்க்காத ஒரு சர்ப்ரைஸ் கொடுத்தார் கமல்.

லைஃப் டைம் செட்டில்மெண்ட்
Sacrifice Task-ல் முன்பகுதியில் உள்ள முடியை தவிர மற்ற மற்ற இடங்களில் மொட்டை தலையுடன் வெளியேறினார் ஏடிகே. அப்போது அவரிடம் பேசிய கமல், உங்களை இப்படியே வெளியே செல்ல விடமாட்டேன், எனக்காக தயார் செய்யப்பட்ட ஒன்றை உங்களுக்கு தருகிறேன் எனக் கூறி, KH என பொறிக்கப்பட்ட ஒரு கேப்-ஐ ஏடிகேவுக்கு அன்பளிப்பாக கொடுத்தார். இதனை சற்றும் எதிர்பார்க்காத ஏடிகே, ரொம்பவே எமோஷனலாகி, அதனை அகம் டிவி வழியே பிக் பாஸ் ஹவுஸ்மேட்ஸ்களிடம் பகிர்ந்துகொண்டார்.

ஏடிகே சம்பளம்
பிக் பாஸ் டைட்டிலை விடவும் தரமான லைஃப் டைம் செட்டில்மெண்டோடு வெளியேறினார் அப்போது கமலின் வேண்டுகோளை ஏற்று ஒரு ராப் பாடலையும் அவர் பாடிச் சென்றார் ஏடிகே. இலங்கையைச் சேர்ந்த ராப் பாடகரான ஏடிகே, ஏஆர் ரஹ்மான், யுவன், சந்தோஷ் நாராயணன் என பல இசையமைப்பாளர்களின் இசையில் பாடல்களை பாடியுள்ளார். இந்நிலையில், 98 நாட்கள் வரை பிக் பாஸ் வீட்டில் இருந்த ஏடிகே, மொத்தம் 18 லட்சம் ரூபாய் சம்பளம் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


Click it and Unblock the Notifications











