Don't Miss!
- News
ரத கஜ துரக பதாதிகள்..ஈரோட்டில் கிழக்கில் திமுக படைத்தளபதிகள்..சிந்தாமல் சிதறாமல் "சக்கர வியூகம்"
- Lifestyle
Today Rasi Palan 03 February 2023: இன்று இந்த ராசிக்காரர்களின் கவனக்குறைவே பெரும் சிக்கலை உண்டாக்கக்கூடும்...
- Automobiles
இந்த அளவுக்கு புக்கிங் வரும்னு மாருதியே நெனச்சிருக்காது! 2 புதிய கார்களை வாங்க எல்லாரும் போட்டி போட்றாங்க!
- Sports
உடைந்த கைகளால் பேட்டிங்.. அணிக்காக ஒற்றை கையில் போராடிய ஹனுமா விஹாரி.. எதிரணி வீரர்களே பாராட்டு!
- Finance
எத்தியோப்பியா, கென்யாவோட ஜிடிபி-க்கு சமமான வீழ்ச்சி.. அதானி குழுமத்திற்கு அடிக்கு மேல் அடி!
- Technology
36 லட்ச WhatsApp பயனர்களுக்கு ஆப்பு.! உப்பு தின்னா தண்ணி குடிக்கனும்., தப்பு செஞ்சா?
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
Bigg Boss Tamil 6 Eviction: டேஞ்சர் ஜோனில் இருக்கும் 2 பேர்.. இந்த வாரம் பிக் பாஸ் எவிக்ஷன் இவரா?
சென்னை: கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் ஐஸ்வர்யா ராஜேஷ் சகோதரன் மற்றும் ஏடிகே இருவரும் டேஞ்சர் ஜோனில் உள்ளனர்.
பிக் பாஸ் நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது. இந்த வாரம் 6 போட்டியாளர்கள் நாமினேஷன் பட்டியலில் இடம் பிடித்துள்ளனர்.
இதில், யாரெல்லாம் டேஞ்சர் ஜோனில் உள்ளார்கள் என்றும் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து யார் வெளியேறுவார் என்பது குறித்து வெளியாகி உள்ள கருத்துக் கணிப்புகள் குறித்து இங்கே காண்போம்..
இதுக்கூட தெரியலையா? சரியான முட்டாளா இருக்காங்களே..பிக் பாஸ் போட்டியாளரை விளாசும் நெட்டிசன்ஸ்!

இதுவரை வெளியேறியவர்கள்
பிக் பாஸ் வீட்டில் இருந்து இதுவரை ஜிபி முத்து (walked), சாந்தி, அசல் கோலார், ஷெரினா, மகேஸ்வரி, நிவாஷினி, ராபர்ட் மாஸ்டர், குயின்ஸி, ராம் மற்றும் ஆயிஷா உள்ளிட்ட போட்டியாளர்கள் இந்த சீசனில் இருந்து வெளியேறி உள்ளனர். இந்நிலையில், இந்த வாரம் அடுத்த விக்கெட் யார் என்கிற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இந்த வார நாமினேஷன்
பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் வழக்கம் போல அசீம் நாமினேட் செய்யப்பட்டுள்ளார். அசீமை தொடர்ந்து விக்ரமன், ஏடிகே, மணிகண்டன், ஜனனி மற்றும் ரச்சிதா உள்ளிட்ட 6 போட்டியாளர்கள் நாமினேட் ஆகி உள்ளனர். இந்த வாரம் ஷிவின், அமுதவாணன், கதிரவன், மைனா நந்தினி உள்ளிட்ட போட்டியாளர்கள் இந்த வாரம் நாமினேட் ஆகாமல் எஸ்கேப் ஆகி உள்ளனர்.

டாப்பில் அசீம்
கேப்டனான வாரத்தை தவிர எல்லா வாரமும் அசீம் பெயரை நாமினேஷனில் இடம்பெற செய்து அவரை வெளியே அனுப்பியே ஆக வேண்டும் என ஹவுஸ்மேட்ஸ் நினைத்தாலும், அசீமுக்கு அதிக ஓட்டுக்களை போட்டு அவரை முதலில் சேவ் செய்ய ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த வாரமும் இதுவரை அசீம் தான் டாப்பில் உள்ளார்.

செகண்ட் பிளேஸ்
அசீமை தொடர்ந்து இந்த வாரம் நாமினேட் ஆகி உள்ள விக்ரமன் அதிக ஓட்டுக்களை பெற்று 2வது இடத்தில் உள்ளார். வார இறுதியில் கமல் அசீமை முதலில் சேவ் செய்வாரா இல்லை, இந்த வாரம் விக்ரமனை முதலில் சேவ் செய்வாரா என்பதை வெயிட் பண்ணி பார்ப்போம்.

ஜனனி, ரச்சிதா சேஃப்
அடுத்த அடுத்த இடங்களில் ஜனனி மற்றும் ரச்சிதா இருவரும் இந்த வாரமும் சேவ் ஆகிவிடுவார்கள் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. கணிசமான ஓட்டுக்களுடன் மூன்றாவது இடத்தில் ஜனனியும் 4வது இடத்தில் ரச்சிதாவும் உள்ளனர்.

டேஞ்சர் ஜோனில்
ஐஸ்வர்யா ராஜேஷின் அண்ணன் மணிகண்டன் மற்றும் இலங்கையை சேர்ந்த ராப் இசை பாடகர் ஏடிகே இருவரும் இந்த வாரம் குறைவான ஓட்டுக்களுடன் கடைசி இடத்தில் உள்ளனர். மீண்டும் ஐஸ்வர்யா ராஜேஷ் ஓட்டுக் கேட்டு தனது சகோதரரை சேவ் செய்து விடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏடிகே அவுட்
இதுவரை உள்ள நிலவரப்படி மிகவும் குறைவான வாக்குகளுடன் கடைசி இடத்தில் ஏடிகே உள்ளார் என தகவல்கள் வெளியாகி உள்ளன. கடந்த வாரம் டபுள் எவிக்ஷன் வைத்து ராம் மற்றும் ஆயிஷா வெளியேறிய நிலையில், இந்த வாரம் ஏடிகே தான் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.