11 ஆண்டுகளுக்கு பிறகு இப்படி ஒரு ரோலில் விஜய்...தளபதி 66 அப்டேட்டால் ஆடிப் போன ரசிகர்கள்
சென்னை : கிட்டதட்ட 11 ஆண்டுகளுக்கு தளபதி 66 படத்தில் ஒரு வித்தியாசமான ரோலில் விஜய் நடிக்க போவதாக வெளியான தகவலால் விஜய் ரசிகர்கள் ஷாக்காகி போய் உள்ளனர். இதனால் இந்த படம் எப்படி இருக்கும் என இப்போதே யோசிக்க துவங்கி விட்டனர்.
விஜய் தற்போது வம்சி பைடபள்ளி இயக்கும் தளபதி 66 படத்தில் நடித்து வருகிறார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். தில் ராஜு தயாரிக்கும் இந்த படத்திற்கு தமன் இசையக்கிறார். ஏற்கனவே இந்த படத்தின் முதல்கட்ட ஷுட்டிங்கை சத்தமே இல்லாமல் இரண்டு - மூன்று நாட்களில் சென்னையில் முடித்து விட்டார்கள்.

ரகசியம் காக்கும் படக்குழு
இரண்டாவது கட்ட ஷுட்டிங் ஐதராபாத்தில் அமைக்கப்பட்டு வரும் பிரம்மாண்ட செட்டில் மிக விரைவில் துவங்கப்பட உள்ளது. இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், ஷாம், பிரகாஷ் ராஜ், யோகிபாபு நடிப்பது இதுவரை உறுதியாகி உள்ளது. மற்ற கேரக்டர்களுக்கான தேர்வுகள் முடிந்து விட்டாலும், அந்த தகவலை மிக ரகசியமாக வைத்துள்ளார்களாம் படக்குழுவினர்.

விஜய்க்கு இது கிடையவே கிடையாது
சரத்குமார் அப்பா ரோலிலும், ஷாம் அண்ணன் ரோலிலும் நடிக்க போகிறார்களாம். லேட்டஸ்ட் தகவலாக இந்த படத்தில் விஜய்க்கு ஒரு ஆக்ஷன் காட்சி கூட கிடையாதாம். 1990 களில் இருந்ததை போல தளபதி 66 படத்தில் முழுக்க முழுக்க விஜய்யின் எமோஷனல் நடிப்பை மட்டுமே பார்க்க முடியுமாம். படக்குழுவினர் இதுவரை ஸ்டண்ட் யார் என்பதை முடிவு செய்யாததால் இந்த தகவல் உண்மை என்பது உறுதியாகி உள்ளது.

11 ஆண்டுகளுக்கு பிறகு இப்படி ஒரு ரோல்
2011 ம் ஆண்டு டைரக்டர் ஷங்கர் இயக்கத்தில் விஜய் நடித்த நண்பன் படத்திற்கு பிறகு, கிட்டதட்ட 11 ஆண்டுகள் கழித்து ஆக்ஷன் காட்சிகளே இல்லாமல் விஜய் நடிக்கும் முதல் படம் இது தான். விரைவில் ஐதராபாத்தில் ஷுட்டிங்கை முடித்த பிறகு மீண்டும் சென்னையில் அடுத்த கட்ட ஷுட்டிங்கை நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளதாம்.

பட ரிலீசை மாத்திட்டாங்களா
அதுமட்டுமல்ல, தளபதி 66 படத்தின் ஷுட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாலும், தளபதி 67 படம் பற்றிய அப்டேட்கள் வர துவங்கி விட்டதாலும் தளபதி 66 படத்தின் ஷுட்டிங் விரைவில் முடிக்கப்பட்டு, இந்த ஆண்டு தீபாவளிக்கு படத்தை ரிலீஸ் செய்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் லேட்டஸ்ட் தகவலின் படி, தளபதி 66 படத்தை 2023 ம் ஆண்டு பொங்கலுக்கு தான் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளார்களாம்.

விஜய், ரஜினிக்கு வாய்ப்பில்லையா
இந்த ஆண்டு தீபாவளிக்கு விஜய்யின் தளபதி 66, ரஜினியின் தலைவர் 169, அஜித்தின் ஏகே 61 ஆகிய படங்கள் ஒரே நேரத்தில் ரிலீசாகும் என ரசிகர்கள் காத்திருந்தனர். ஆனால் தற்போதைய நிலவரத்தை பார்த்தால் அஜித்தின் ஏகே 61 படம் மட்டும் தான் தீபாவளிக்கு ரிலீசாகும் என கூறப்படுகிறது. தளபதி 66, 2023 ம் ஆண்டு பொங்கலுக்கு தான் என்றாகி விட்டது. தலைவர் 169 ஷுட்டிங்கே ஜுன் அல்லது ஜுலையில் தான் துவங்கப்படும் என்கிறார்கள். முதல் கட்ட ஷுட்டிங்கை துவக்க ஆகஸ்ட் ஆகி விடும் என்பதால் அதுவும் தீபாவளிக்கு வர வாய்ப்பில்லை.


Click it and Unblock the Notifications











