அன்று அஜித்...இன்று விஜய்யா?...மிரட்டலான தளபதி 66 வில்லன் அப்டேட்
சென்னை : அஜித்திற்கு வில்லனாக நடித்த முன்னணி ஹீரோ ஒருவர் தளபதி 66 படத்தில் விஜய்க்கு வில்லனாக நடிக்க போவதாக தகவல் வெளியாகி உள்ளதால் அனைவருக்கும் தளபதி 66 படத்தின் மீதான ஆர்வம் அதிகரித்துள்ளது. இது யாரும் எதிர்பாராத அப்டேட்டாக இருக்கே என பலரும் ஆச்சரியப்பட்டு வருகின்றனர்.
விஜய் தற்போது பீஸ்ட் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்திற்கான ரிலீஸ் ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. பீஸ்ட் அடுத்த அப்டேட் என்னவாக இரக்கும் என ரசிகர்களும் ஆர்வமாக காத்திருக்கிறார்கள். செகண்ட் சிங்கிளா அல்லது டீசரா இரண்டில் என்ன அப்டேட்டை அடுத்து வெளியிட போகிறார்கள். இதோடு ரிலீஸ் தேதி வெளியாகுமா என பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

தளபதி 66 ஷுட்டிங் எப்போ
இந்நிலையில் விஜய்யின் அடுத்தடுத்த படங்கள் பற்றிய அப்டேட்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. விஜய்யின் அடுத்த படமான தளபதி 66 படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் தயாரிக்கப்பட உள்ளது. இந்த படத்தை டைரக்டர் வம்சி பைடபள்ளி இயக்க உள்ளதாகவும், தில் ராஜு தயாரிக்க உள்ளதாகவும், தமான் இசையமைக்க உள்ளதாகவும் ஏற்கனவே அறிவிப்பு வெளியாகி உள்ளது. மே மாதம் முதல் தளபதி 66 படத்தின் ஷுட்டிங் துவங்கும் என கூறப்படுகிறது.

விஜய்க்கு ஜோடி இவரா
தளபதி 66 படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க போகிறாராம். பிரகாஷ் ராஜ், மகேஷ் பாபுவின் மகள் சித்தாரா ஆகியோரும் இந்த படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. அதே சமயம் பிரகாஷ் ராஜ் இந்த படத்தில் வில்லன் இல்லை. மிக முக்கியமான கேரக்டரில் பிரகாஷ்ராஜ் நடிக்க போவதாக கூறப்பட்டுள்ளது. இதனால் வில்லன் யார் என அனைவரும் கேட்டு வருகின்றனர்.

வில்லன் அப்டேட்டும் வந்தாச்சு
லேட்டஸ்ட் தகவலின் படி தளபதி 66 படத்தில் விஜய்க்கு வில்லனாக பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் நடிக்க போகிறாராம். யாரும் எதிர்பாராத இந்த அப்டேட் ரசிகர்களை உற்சாகமடைய வைத்துள்ளது. விவேக் ஓபராய், ஏற்கனவே அஜித் நடித்த விவேகம் படத்தில் அவருக்கு வில்லனாக நடித்திருந்தார். கம்பீரான ஹீரோ லுக்கில், சிரித்த முகத்துடன் வந்து வில்லத்தனம் செய்து தமிழ் ரசிகர்களை கவர்ந்தார் விவேக். அஜித்தை தொடர்ந்து தற்போது விஜய்க்கு வில்லனாக போகிறார்.

மிரட்டல் வில்லன்கள்
மாஸ்டர் படத்தில் விஜய் சேதுபதியை வில்லனாக்கியவர்கள், விஜய்யின் பீஸ்ட் படத்தில் டைரக்டர் செல்வராகவனை வில்லனாக்கியதாக கூறப்பட்டது. ஆனால் சமீபத்தில் செல்வராகவன் வில்லன் கிடையாது. அவர் அரசியல்வாதி கேரக்டரில் தான் நடிக்கிறார் என கூறப்பட்டது. இதனால் பீஸ்ட் படத்தில் வில்லன் யார் என ரசிகர்கள் யோசித்து வரும் நிலையில், தளபதி 66 படத்தின் வில்லன் அப்டேட் வந்துள்ளது.


Click it and Unblock the Notifications











