அமீர் மட்டும் தான் கொடுப்பாரா...நாங்களும் கொடுப்போம்...முத்த சர்ச்சையில் சிக்கிய அக்ஷரா

சென்னை : பிக்பாஸ் சீசன் 5 நிறைவடைய இன்னும் மூன்று வாரங்கள் மட்டுமே உள்ளன. நாட்கள் நெருங்க நெருங்க போட்டியாளர்கள், கடுமையான வார்த்தைகளால் தங்களின் உண்மை முகங்களை வெளிக்காட்டி வருகின்றனர்.

இதற்கிடையில் குடும்ப உறவுகள் வரும் ஃப்ரீஸ் டாஸ்க், கடந்து வந்த பாதையில் வைல்ட் கார்டு என்டரியாக வந்த அமீர் மற்றும் சஞ்சீவ் தங்களின் வாழ்க்கை பற்றி கூறியது சிலரின் மனங்களில் மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. பலரை பற்றிய புரிதலையும் ஏற்படுத்தி உள்ளது.

முத்தம் கொடுத்த அமீர்

முத்தம் கொடுத்த அமீர்

என்ன தான் மற்ற பிரச்சனைகள் தீர்ந்தாலும் பாவனியை சுற்றி நடக்கும் காதல் விவகாரங்கள், சர்ச்சைகள் மட்டும் ஓயவே இல்லை. சனிக்கிழமை எபிசோடின் போது வெள்ளிக்கிழமை நடந்த நிகழ்வுகள் பற்றி காட்டப்பட்டது. அப்போது அமீர், ரகசியம் சொல்வது போல் போய் பாவனிக்கு முத்தம் கொடுத்தார். இந்த விவகாரம் சோஷியல் மீடியாவில் பெரும் விவாத பொருளானது.

பாவனி ஏன் கண்டிக்கல

பாவனி ஏன் கண்டிக்கல

முதலில் அமீரை பலர் திட்டினார்கள். அதற்கு பிறகு பாவனிக்கு இதனை எதிர்காதது ஏன். பிடிக்கவில்லை என சொல்லும் பாவனி, அமீர் தன்னிடம் எல்லை மீறுவதை தெரிந்தும் தொடர்ந்து அவருடன் நெருக்கம் காட்டுவது ஏன் என பலவிதங்களில் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

கமல் ஏன் கேட்கல

கமல் ஏன் கேட்கல

இது ஒரு புறம் இருக்க, அமீர் -பாவனிக்கு முத்தம் கொடுத்ததை பிக்பாஸ், கமல் பார்க்காமலா இருந்திருப்பார்கள். அவர்களும் இது பற்றி கண்டிக்காதது ஏன் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. அபினய் விவகாரம் பற்றி அவ்வளவு பேசிய கமல், அமீர் முத்தம் கொடுத்ததை ஏன் கண்டுகொள்ளாமல் விட்டு விட்டார் என்றும் கேட்டு வருகிறார்கள்.

அக்ஷரா கொடுத்த முத்தம்

அக்ஷரா கொடுத்த முத்தம்

இந்த சர்ச்சை அடங்குவதற்குள், திங்கள்கிழமை எபிசோடில் கேப்டன்சி டாஸ்க் நடத்தப்பட்டது. அப்போது கயிற்றை அனைவரும் விடாமல் பிடித்துக் கொண்டிருக்க வேண்டும் என கூறியதால் இரவு நேரத்தில் சோஃபாவில் அமர்ந்து, கயிற்றை பிடித்தபடி ஒருவர் மீது மற்றொருவர் சாய்ந்தபடி போட்டியாளர்கள் தூங்கினர். அப்போது வருண் மீது சாய்ந்து தூங்கிக் கொண்டிருந்த அக்ஷரா, கயிற்றை விட்டு விட்டு எழுந்து செல்லும் போது வருணுக்கு முத்தம் கொடுத்து விட்டு சென்றார். வருணும் சிரித்த முகத்துடன் இருந்தார்.

Recommended Video

Bigg Boss Tamil Season 5 | 21st December 2021 - Promo 3 | அம்மாவை நினைத்து கதறி அழுத Amir
அக்ஷரா கொடுத்தா தப்பில்லையா

அக்ஷரா கொடுத்தா தப்பில்லையா

இதை பார்த்த நெட்டிசன்கள், அக்ஷராவையும் திட்டி தீர்த்தனர். ஆனால் சிலர், அவர் ஃபிரண்ட் என்ற அடிப்படையில் முத்தம் கொடுத்தார் என சர்போர்ட் செய்தனர். எதுவாக இருந்தாலும் முத்தம் கொடுத்தது கொடுத்தது தானே. ஏன் அமீர் ஃபிரண்ட்லியாக கொடுத்திருக்கக் கூடாதா. அமீர் செய்தால் தவறு, அக்ஷரா செய்தால் தவறில்லையா என கேட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X