திருப்பதியில் சாமி தரிசனம் செய்த தளபதி 66 படக்குழுவினர்

திருப்பதி : விஜய் தற்போது டைரக்டர் நெல்சன் திலீப்குமார் இயக்கும் பீஸ்ட் படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். டெல்லியில் மிக விறுவிறுப்பாக இந்த படத்தின் ஷுட்டிங் நடந்து வருகிறது. இந்த ஷுட்டிங்கில் விஜய்யும் கலந்து கொண்டுள்ளார்.

Recommended Video

Nayanthara Vignesh Shivan Tirupati Visit | Tamil Filmibeat

ஷுட்டிங்கில் கலந்து கொள்ள டெல்லி விமான நிலையத்தில் சென்று இறங்கிய விஜய்யின் ஃபோட்டோக்கள் இணையத்தில் தீயாய் பரவியது. இதனை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் பீஸ்ட் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

விஜய்க்கு கோடியில் சம்பளம்

விஜய்க்கு கோடியில் சம்பளம்

இதற்கிடையில் விஜய்யின் அடுத்த படமான தளபதி 66 படம் பற்றிய பல்வேறு தகவல்கள் கடந்த இரண்டு மாதங்களாக வெளிவந்து கொண்டிருந்தன. இந்த படத்தை பிரபல தெலுங்கு டைரக்டர் வம்சி பைடபள்ளி இயக்க போவதாகவும், தில் ராஜு தயாரிக்க போவதாகவும் கூறப்பட்டது. இந்த படத்திற்காக விஜய்க்கு ரூ.120 முதல் 150 கோடி வரை சம்பளம் பேசப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது.

தளபதி 66 அறிவிப்பு

தளபதி 66 அறிவிப்பு

இந்நிலையில் தளபதி 66 பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியிடப்பட்டது. ஏற்கனவே சொல்லப்பட்டதை போல் வம்சி தான் இந்த படத்தை இயக்குகிறார். தெலுங்கு திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஷ்வரா கிரியேஷன்ஸ் பேனரில் தில் ராஜு மற்றும் ஸ்ரீரிஷ் இணைந்து தயாரிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பான் இந்தியன் படம்

பான் இந்தியன் படம்

தளபதி 66 அறிவிப்பு தொடர்பாக தில் ராஜு, வம்சி, விஜய் இணைந்த போஸ்டர் ஒன்றும் வெளியிடப்பட்டது. மிகப் பெரிய பட்ஜெட்டில் பான் இந்தியன் படமாக உருவாக்கப்பட உள்ள தளபதி 66 படத்தில் தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலகை சேர்ந்த புகழ்பெற்ற நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் பணியாற்ற உள்ளனராம்.

விரைவில் டைட்டில் அறிவிப்பு

விரைவில் டைட்டில் அறிவிப்பு

மிக விரைவில் தளபதி 66 படத்தில் இணைய உள்ள படக்குழுவினர் பற்றிய அறிவிப்பு, படத்தின் டைட்டிலுடன் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளதாம். தளபதி 66 படத்திற்கு எஸ்.தமான் இசையக்க அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இருந்தும் விஜய் தவிர மற்ற யாருடைய பெயரும் இந்த படத்தில் இதுவரை இறுதி செய்யப்படவில்லையாம்.

திருப்பதியில் சாமி தரிசனம்

திருப்பதியில் சாமி தரிசனம்

தளபதி 66 பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட கையோடு, வம்சி பைடிபள்ளி, ஸ்ரீரிஷ் மற்றும் தில் ராஜு ஆகியோர் குடும்பத்துடன் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளனர். இவர்கள் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த ஃபோட்டோக்கள் தற்போது இணையத்தை கலக்கி வருகிறது.

ஹிட் பட டைரக்டர்

ஹிட் பட டைரக்டர்

டைரக்டர் வம்சி, ஜுனியர் என்டிஆர் நடித்த பிருந்தாவனம், நாகர்ஜுனா - கார்த்தி இணைந்து நடித்த படத்தை தமிழில் தோழா என்ற பெயரிலும், தெலுங்கில் ஓபிரி என்ற பெயரிலும், மகேஷ் பாபு நடித்த மகரிஷி ஆகிய சூப்பர் ஹிட் படங்களை இயக்கி வெற்றி கண்டவர். இதே தில் ராஜுவின் எஸ்விசி கிரியேஷன்ஸ் பல படங்களை தயாரித்துள்ளது.

ஷங்கரின் முதல் தெலுங்கு படம்

ஷங்கரின் முதல் தெலுங்கு படம்

ராம் சரணை வைத்து தெலுங்கில் டைரக்டர் ஷங்கர் இயக்கி வரும் ஆர்சி 15 படத்தையும் தில் ராஜு தான் தயாரித்து வருகிறார். ஆர்சி 15, தில் ராஜு தயாரிக்கும் 50 வது படமாகும். ஷங்கர் இயக்கும் முதல் தெலுங்கு படம் இதுவாகும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X