போன வாரம் பீஸ்ட்...இந்த வாரம் வலிமை...அடுத்து மாஸ் காட்ட போகும் படம் எது தெரியுமா ?
சென்னை : சோஷியல் மீடியாக்களில் கடந்த வாரம் திரும்பிய பக்கமெல்லாம் பீஸ்ட் படம் பற்றிய பேச்சாக தான் இருந்தது. இந்த வாரத்தில் அஜித்தின் வலிமை பட ரிலீஸ், கலெக்ஷன் பற்றிய பேச்சாக உள்ளது. இனி வரும் வாரத்தில் மற்றொரு மெகா பட்ஜெட் படம் சோஷியல் மீடியாவை திணறடிக்க முக்கிய அப்டேட்டுடன் வர போகிறதாம்.
Recommended Video
காதலர் தினத்தை முன்னிட்டு சன் பிக்சர்ஸ் பீஸ்ட் படத்தின் ஃபஸ்ட் சிங்கிள் லிரிக்கல் பாடலாக அரபிக்குத்து பாடலை வெளியிட்டது. இந்த பாடல் ரிலீஸ் செய்யப்பட்டதில் இருந்தே அரபிக்குத்து யூட்யூப்பில் பெற்ற பார்வைகள் பற்றிய அப்டேட் ஒரு பக்கம் வந்து கொண்டிருந்தது என்றால், மற்றொரு புறம் பிரபலங்கள் அனைவரும் பாரபட்சம் இல்லாமல் அரபிக்குத்து பாடலுக்கு நடனம் ஆடி வீடியோ வெளியிட்டு வந்தனர்.

பீஸ்ட், வலிமை கொண்டாட்டம்
வலிமை ரிலீஸ் தேதி வந்ததால் அரபிக்குத்து பற்றிய தகவல் சிறிது குறைந்தது. அனைவரும் வலிமை படம் எப்படி இருக்கிறது என்பதை பற்றியும், ரசிகர்களின் கொண்டாட்டம், வலிமை முதல் நாள் வசூல் என அதை பற்றியே பேச துவங்கி விட்டனர். வலிமை கொண்டாட்டம் முடிவதற்குள் விஜய் ரசிகர்களை கொண்டாட வைக்க அரபிக்குத்து 100 மில்லியன் பார்வைகளை கடந்து விட்டதாக தகவல் வெளியானது.

இந்த வாரம் இது வர போகுது
லேட்டஸ்ட் தகவல் என்னவென்றால், வரும் வாரத்தில் பீஸ்ட் படத்தின் டீசர் தயாராகி விட்டதால், அது வெளியாகும் என கூறப்படுகிறது. அதோடு சேர்ந்து டைரக்டர் மணிரத்னம் இயக்கி உள்ள பிரம்மாண்ட படமான பொன்னியின் செல்வன் படத்தின் டீசர், டிரைலர் ஆகியன வெளியிடப்பட உள்ளதாம். அதுவும் படத்தில் நடித்துள்ளவர்களின் கேரக்டர் அறிமுகத்துடன் டீசர் வெளியிட போகிறார்களாம். வெறும் டீசர் மட்டுமின்றி அதோடு பொன்னியின் செல்வன் முதல் பாகத்தின் ரிலீஸ் தேதியும் வெளியாக உள்ளதாம்.

ரிலீஸ் பணிகள் தீவிரம்
இரண்டு பாகங்களாக உருவாக்கப்பட்டுள்ள பொன்னியின் செல்வன் படம் ரிலீசுக்கு தயாராகி விட்டதாம். போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் தீவிரமாக நடந்து வருகிறதாம். உலகின் பல நாடுகளிலும் இந்த படத்திற்கு கிராஃபிக்ஸ் அமைக்கும் பணி நடந்து கொண்டிருக்கிறது. இந்த பணிகள் கிட்டதட்ட முடிவடையும் நிலையில் உள்ளனவாம். அதனால் ரிலீசிற்கான ஏற்பாடுகளை துவக்க படக்குழு தீவிரம் காட்டி வருகிறதாம்.

ரிலீஸ் பிளான் என்ன தெரியுமா
மே மாதம் வரை அடுத்தடுத்து பல படங்கள் ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளன. இதனால் பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் ஜுன் - ஜுலை மாதங்களிலோ அல்லது அதற்கு முன் மே மாதம் கோடை விடுமுறையின் போதோ வெளியிடப்பட அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுறது. ரஜினி, விஜய், அஜித் படங்கள் தீபாவளியை குறிவைப்பதால் டிசம்பரில் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் வெளியிடப்படலாம் என கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











