பிக்பாசிற்கு பிறகு அபினய் போட்ட முதல் போஸ்ட்...என்ன சொல்லிருக்கார் பாருங்க

சென்னை : பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டவர் அபினய் வட்டி. பிரபல, முன்னணி நட்சத்திர தம்பதியான ஜெமினி கணேசன், சாவித்திரியின் பேரன் என்ற எதிர்பார்ப்புடன், பிக்பாஸ் நிகழ்ச்சிக்குள் வந்தார் அபினய்.

ஆரம்பத்தில் அமைதியானவர், நடுநிலையானவர் போல் தோன்றினாலும், இவர் எப்படிப்பட்ட கேரக்டர் என கணிக்க முடியாமல் ரசிகர்கள் குழம்பிப் போயினர். நிகழ்ச்சி துவங்கிய சில நாட்களிலேயே பாவனி துவக்கி வைத்த காதல் விவகாரம், கடைசி வரை முடிவடையவேயில்லை. அபினய், பாவனி இடையேயான காதல் விவகாரம் மிகப் பெரிய புயலை கிளப்பியது.

கமலே குழம்பிட்டார்

கமலே குழம்பிட்டார்

போட்டியாளர்களிடையே வாக்குவாதம், சண்டை, கருத்து மோதல் என துவங்கி, கடைசியாக கமல் விசாரிக்கும் அளவிற்கு போனது. இருந்தாலும் இவர்கள் நண்பர்கள் மட்டும் தானா, இல்லை இவர்களுக்குள் காதல் இருக்கிறதா என சொல்ல முடியாமல் கமலே கடைசியில் குழம்பிப் போனார்.

எவிக்ஷனுக்கு காரணம்

எவிக்ஷனுக்கு காரணம்

பல பிரச்சனைகளுக்கு பிறகு அபினய் நிகழ்ச்சியின் 78 வது நாளில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து எவிக்ஷன் மூலம் வெளியேற்றப்பட்டார். பாவனி உடனான காதல் தான் இவர் வெளியேறுவதற்கான முக்கிய காரணமாக அமைந்தது. அபினய் வெளியேறிய பிறகு, அமீர் - பாவனி இடையேயான காதல் தொடர்ந்து வருகிறது.

அபினய்யின் முதல் போஸ்ட்

அபினய்யின் முதல் போஸ்ட்

இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து இன்ஸ்டாகிராமில் இன்று முதல் போஸ்ட்டை பதிவிட்டுள்ளார் அபினய். அதில், போலியில் இருந்து நிஜத்திற்கும், உங்களின் அன்பிற்கும் திரும்பியதாக உணர்கிறேன். நீங்கள் ஒவ்வொருவரும் அளித்த அன்பு மற்றும் ஆதரவு தான் பிக்பாஸில் என்னை 78 நாட்கள் பயணிக்க வைத்துள்ளது. நிறைய விஷயங்களை என்னுடன் எடுத்து வந்துள்ளேன். ஒட்டுமொத்தமான அனுபவம் அற்புதமானது. அதிலும் கமல் சார் தொகுத்து வழங்கும் இந்த ஷோ சிறப்பானது.

அதிர்ஷ்டம் இல்லை

அதிர்ஷ்டம் இல்லை

நாணயத்திற்கு எப்போதுமே இரண்டு பக்கங்கள் உண்டு. வாழ்க்கையில் எதுவாக இருந்தாலும் அது எப்போதும் நாம் தேர்வு செய்யும் பாதையை பொருத்தது தான். அது நம்மை சுற்றி இருப்பவர்களுக்கும் மிக முக்கியம். நீங்கள் பார்த்ததை போல் அதிர்ஷ்டம் இந்த ஷோவில் என் பக்கம் இல்லை. ஆனால் அதிர்ஷ்டவசமாக எனக்கு அன்பான குடும்பம் உள்ளது. அவர்கள் எப்போதும் எனக்கு இருந்து ஏற்றத்திலும் தாழ்விலும் என்னை தாங்கி பிடித்துள்ளனர். நான் எப்படி தவறாக கணிக்கப்பட்டிருந்தாலும், தவறாக காட்டப்பட்டிருந்தாலும் முடிவில் இது ஒரு கேம் ஷோ.

அனைவருக்கும் நன்றி

அனைவருக்கும் நன்றி

வாழ்க்கை எப்போதும் உங்களை மேம்பட்ட மனிதராக மாற்றுவதற்காக கற்று கொடுத்துக் கொண்டே இருக்கும். இவை அனைத்தையும் நாம் பாசிடிவ் வழியில் தான் எடுக்க வேண்டும். இது என் குடும்பத்தை, என்னை சுற்றி உள்ள அன்பானவர்களுக்கு எதிர்காலத்தில் நல்ல இடத்தை தரும். பிக்பாஸ் வீட்டில் என்னுடைய பயணம் முடிந்து விட்டது. முதலில் என்னை நம்பும் எனது குடும்பத்திற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். எப்போதும் எனக்கு நம்பிக்கை கொடுத்து, சப்போர்டாக நின்றுள்ளனர். என்னை ஆதரித்த, எனக்கு ஊக்கமளித்த, எனக்கு ஓட்டளித்த அனைவருக்கும் என்னுடைய நன்றி.

அன்பை மறக்க மாட்டேன்

அன்பை மறக்க மாட்டேன்

எனது இந்த பயணத்தில் எனது உணர்வுகளை புரிந்து கொண்டு அக்கறை காட்டிய உங்கள் அனைவருக்கும் நன்றி. இந்த அன்பை நான் எப்போதும் மறக்க மாட்டேன். இது பல நல்ல, பாசிடிவ்வான விஷயங்களின் துவக்கம். உங்களின் ஆதரவிற்கு மிக நன்றி என தெரிவித்துள்ளார். இவ்வாறு அபினய் குறிப்பிட்டுள்ளார். இந்த போஸ்டை பார்த்து விட்டு, அபினய்யை பாராட்டியும், அவருக்கு ஆதரவாக பலர் கமெண்ட் பதிவிட்டுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X