ஏகே 61 ல் இணைந்த மற்றொரு பிரபலம்...இவரை யாருன்னு தெரியுதா ?

சென்னை : அஜித்தின் 61 படத்தில் ஏற்கனவே ஜான் கொக்கன் இணைந்துள்ளதாக கூறப்பட்ட நிலையில் தற்போது, மற்றொரு பிரபலம் இந்த படத்தில் இணைந்துள்ளதாக அப்டேட் வெளியிடப்பட்டுள்ளது.

விஜய்யின் தளபதி 66 படத்தை தொடர்ந்து, அஜித்தின் ஏகே 61 படத்தில் நடிப்பவர்கள் பற்றிய அப்டேட்கள் வெளியிடப்பட்டு வருவதால் விஜய் - அஜித் ரசிகர்கள் செம குஷியாகி உள்ளனர். தளபதி 66, 2023 பொங்கலுக்கு தான் ரிலீஸ் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் ஏகே 61 இந்த ஆண்டு தீபாவளிக்கே ரிலீசாக உள்ளதாக கூறப்படுகிறது.

இரண்டு ரோல்களில் அஜித்

இரண்டு ரோல்களில் அஜித்

ஹெச்.வினோத், அஜித், போனி கபூர் மூன்றாவது முறையாக கூட்டணி அமைத்துள்ள ஏகே 61 படத்தின் ஷுட்டிங் ஐதராபாத்தில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக விறுவிறுப்பாக நடந்து வருகிறது. வங்கி கொள்ளையை மையமாகக் கொண்ட இந்த படத்தில் அஜித், வயதான காலேஜ் ப்ரொஃபசர் ரோலில் நடிப்பதாக கூறப்படுகிறது. அதே சமயம் செம ஸ்மார்ட் மற்றும் ஸ்லிம் ஃபிட்டான இளமை கெட்அப்பிலும் நடிக்கிறாராம்.

வாய்ப்பே இல்லையா

வாய்ப்பே இல்லையா

சென்னை மவுண்ட் ரோடு வங்கி போன்று 9 ஏக்கரில் அமைக்கப்பட்டுள்ள மிக பிரம்மாண்ட செட்டில் நடந்து வரும் ஏகே 61 படத்தின் ஷுட்டிங், மிகுந்த பாதுகாப்புடன் நடத்தப்பட்டு வருவதால் படம் பற்றிய எந்த தகவலும் வெளியில் கசிய வாய்ப்பே இல்லையாம். இந்த படத்தில் அஜித்திற்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

அஜித் வில்லன் இல்லையா

அஜித் வில்லன் இல்லையா

இந்த படத்தில் ஹீரோ - வில்லன் என இரு ரோல்களில் அஜித் நடிக்க உள்ளதாக ஆரம்பத்தில் கூறப்பட்ட நிலையில், தற்போது சார்பேட்டா பரம்பரை, கேஜிஎஃப் படங்களில் நடித்த ஜான் கொக்கன் தான் ஏகே 61 படத்தில் வில்லன் ரோலில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அஜித் வில்லன் இல்லையா, அப்படியானால் அஜித்திற்கு என்ன ரோல் என ரசிகர்கள் ஆர்வமாக கேட்டு வருகின்றனர்.

என்னது இவரும் நடிக்கிறாரா

என்னது இவரும் நடிக்கிறாரா

இந்நிலையில் லேட்டஸ்ட் தகவலாக, ஏகே 61 படத்தில் மற்றொரு பிரபலமான வீரா என்ற வீரபாகு இணைந்துள்ளாராம். ராஜதந்திரம், நடுநிசி நாய்கள் போன்ற படங்களில் வீரா நடித்துள்ளார். டைரக்டர் கெளதம் வாசுதேவ் மேனனிடம் அசிஸ்டென்ட் டைரக்டராக வேட்டையாடு விளையாடு, வாரணம் ஆயிரம் உள்ளிட்ட பல படங்களில் பணியாற்றி உள்ளார். பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தில் சிறிய ரோலில் நடித்து நடிகரானார்.

இவரை யாருன்னு தெரியுதா

இவரை யாருன்னு தெரியுதா

கெளதம் மேனன் இயக்கிய சென்னையில் ஒரு மழைக்காலம் படத்தில் நான்கு ஹீரோக்களில் ஒருவராக வீராவும் அறிவிக்கப்பட்டார். ஆனால் பல காரணங்களால் அந்த படம் பாதியிலேயே கைவிடப்பட்டது. பிறகு நடுநாசி நாய்கள் படத்தின் மூலம் வீராவை ஹீரோ ஆக்கினார் கெளதம் மேனன். இவர் கடைசியாக அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா என்ற படத்தில் நடித்திருந்தார்.

என்ன ரோலில் நடிக்கிறார்

என்ன ரோலில் நடிக்கிறார்

தற்போது அஜித்தின் ஏகே 61 படத்தில் மிக முக்கியமான ரோல் ஒன்றில் நடிக்க வீரா கமிட்டாகி இருக்கிறாராம். விரைவில் மஞ்சு வாரியர், ஜான் கொக்கன், வீரா உள்ளிட்டோர் ஏகே 61 ஷுட்டிங்கில் கலந்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X