Don't Miss!
- Automobiles
இத்தனை பேரா... லேண்ட் ரோவர் கார்களுக்கு அடிமையாக பாலிவுட் நடிகைகள்!! யார் யாரிடம் இருக்கு தெரியுமா?
- News
88 கோயில்கள் பராமரிப்புக்கு ரூ.3 கோடி மானியம்! தஞ்சை அரண்மனை அறங்காவலரிடம் காசோலை தந்த முதல்வர்!
- Lifestyle
நீங்க நுங்கை விரும்பி சாப்பிடுபவரா? அப்ப உங்களுக்கு பல அதிசய நன்மைகள் காத்திருக்காம்...!
- Sports
எங்க கிட்டயும் படைகள் இருக்கு..கேஜிஎப் வசனத்தை பேசிய பாட் கம்மின்ஸ்..இந்திய அணிக்கு பாராட்டு
- Technology
சூரியனில் அதிகரிக்கும் கருப்பு புள்ளிகளால் விஞ்ஞானிகள் பதட்டம்.! சூரிய புயல் அபாயம் உருவாகிறதா?
- Finance
மார்ச் மாதம் கெடு.. அதானி குழுமத்திற்கு வந்த புதிய பிரச்சனை..!
- Travel
இந்தியாவிலேயே அதிக விருந்தோம்பல் செய்து அவார்ட் வாங்கிய இடம் புதுச்சேரி தானாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
சபாஷ் சரியான போட்டி...கமல் வரிகளுக்கு போட்டியாக உதயநிதி பாடலா ?
சென்னை : விக்ரம் படத்திற்காக கமல் எழுதிய பாடல் அரசியல் வட்டாரத்தில் சலசலப்பையும் சர்ச்சையையும் ஏற்படுத்தி உள்ள நிலையில், கமலின் பாடல் வரிகளுக்கு போட்டியாக உதயநிதி ஸ்டாலின் நெஞ்சுக்கு நீதி படத்தின் பாடல் வெளியிடப்பட்டுள்ளது.
விக்ரம் படத்திற்காக கமலே எழுதி, பாடிய பத்தல பத்தல என்ற பாடல் நேற்று ஃபர்ஸ்ட் சிங்கிளாக வெளியிடப்பட்டது. இதில் இடம்பெற்ற ஒன்றிய அரசு, திருடன் கையில் சாவி போன்ற வரிகள் அரசியல் ரீதியாக சர்ச்சையாக்கப்பட்டுள்ளது.
கஜானாலே
காசில்லே..
கல்லாலையும்
காசில்லே..
சர்ச்சையை
கிளப்பிய
கமல்ஹாசன்
விக்ரம்
பாடல்!

கொளுத்தி போட்ட கஸ்தூரி
இந்த பிரச்சனையை பெரிதாக கொளுத்தி போடும் விதமாக நடிகை கஸ்தூரியும் தனது பங்கிற்கு, தேர்தலில் பாஜக வானதியிடம் தோற்ற கோபத்தில் தான் கமல் இப்படி பாட்டு எழுதி உள்ளார் என ட்வீட் போட்டார். இது சோஷியல் மீடியாவில் மிகப் பெரிய விவாதமாக போய் கொண்டிருக்கிறது. அரசியல், சினிமா என ஒரே நேரத்தில் இரண்டிலும் பரபரப்பை கிளப்பி விட்டாரே கமல் என பலரும் கூறி வருகின்றனர்.

கமலுக்கு போட்டியாக உதயநிதி
இந்த சமயத்தில் விக்ரம் படத்திற்காக கமல் எழுதிய பாட்டிற்கு போட்டியாக உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள நெஞ்சுக்கு நீதி படத்தின் லிரிக்கல் சாங் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இதில் சாதிய பிரச்சனைகள் பற்றி யுகபாரதி எழுதி உள்ள வரிகள் அனல் பறக்க வைத்துள்ளது. அதிலும் பஞ்சாங்க நூலு தான் பள்ளம் தோண்டுதே...அன்னாடங் காய்ச்சிய குத்திச்சாய்க்குதே என குறிப்பிட்டுள்ள வரிகள் பாராட்டை பெற்றுள்ளது.

நெஞ்சுக்கு நீதி பாடல்
ஆர்டிகிள் 15 படத்தின் தமிழ் ரீமேக்காக உருவாக்கப்பட்டுள்ள நெஞ்சுக்கு நீதி படம் மே 20 ம் தேதி தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப்பட உள்ளது. இந்த படத்தின் டிரைலர் மற்றும் ஆடியோ வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. தன் தொடர்ச்சியாக லிரிக்கல் வீடியோ இன்று வெளியிடப்பட்டுள்ளது. நெஞ்சுக்கு நீதி படத்தின் பாடல் வரிகள் இதோ...

அனல் பறக்கும் யுகபாரதி வரிகள்
கண்போக
காட்சியில்லே
கால்
போக
ஊருமில்லே
மண்ணாகி
போன
பின்னே
மானிடர்க்கு
சாதியில்லே
பஞ்சாங்க
நூலுதான்
பள்ளம்
தோண்டுதே
அன்னாடங்காய்ச்சிய
குத்திச்
சாய்க்குதே
கொட்டுற
தெய்வம்
கூரய
பியிச்சி
கொட்டுன்தானே
சொன்னாங்க
கூரயுமில்லே
வீட்டுல
வாழும்
எங்கள
எதுக்கு
கொன்னாங்க
செவக்காட்டு
சீமையெல்லாம்
ஆண்டாரே
அரிச்சந்திர
ராசா

பரபரப்பிலும் இப்படி ஒரு போட்டியா
யுக பாரதியின் இந்த பாடல் வரிகளில், நாட்டுபுற தெம்மாங்கு ஸ்டைலில் அமைக்கப்பட்டுள்ள நெஞ்சுக்கு நீதி பாடல் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. ஏற்கனவே சில அமைப்புக்கள் நெஞ்சுக்கு நீதி பட டிரைலரில் இடம் பெற்ற சில காட்சிகளுக்கு எதிர்ப்பு கூறி வருகின்றன. இந்த சமயத்தில் இந்த பாடல் வரிகள் வெளியிடப்பட்டுள்ளது. கமல் பாடல் வெளியாகி பரபரப்பை கிளப்பி உள்ள சூழலில் உதயநிதியின் நெஞ்சுக்கு நீதி பட பாடலும் வெளியிடப்பட்டுள்ளது புதிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.