ஒரே ஒரு முத்தம்...ஓவர் நைட்டில் ட்விட்டர் டிரெண்டிங்கில் டாப்புக்கு போன அமீர்
சென்னை : பிக்பாஸ் சீசனில் நேற்றைய எபிசோடில் பாவனிக்கு, அமீர் முத்தம் கொடுத்தது, இது வரை பிக்பாஸ் வீட்டிற்குள் நடந்த அத்தனை பிரச்சனைகளையும் ஓரங்கட்டி, அடித்து நொருக்கி விட்டது. மீடியா, சோஷியல் மீடியா என அனைத்திலும் இதே பேச்சாக தான் உள்ளது.
இதுவரை அபினய்யிடம் ராஜு, பாவனியை காதலிக்கிறாயா என கேட்டது, அபினய், பாவனி பின்னாலேயே சென்று நெருங்கி பழகி முயற்சித்தது, அமீர் வந்த பிறகு பாவனி, அமீருடன் நெருங்கி பழகியதற்கு அபினய் கோபப்பட்டது, இவர்களின் காதல் விவகாரத்தால் வீட்டிற்குள் சண்டை, விவாதம் நடந்தது என இவைகள் பெரிய பிரச்சனைகளாக சென்று கொண்டிருந்தது.

பாவனிக்கு ஆதரவாக பேசிய கமல்
இந்த லவ் பிரச்சனை பற்றி ஏன் பிக்பாஸ், கமல் சார் பேசுவதில்லை என கேமிராக்கள் முன் பாவனி பலமுறை புலம்பிய பிறகு, ஒரு வழியாக கடந்த வாரம் கமல் இந்த விவகாரம் பற்றி பேசினார். ஒரு ஆணும், பெண்ணும் பழகுவது தவறா, ஒருவர் தனிப்பட்ட விஷயம் என கூறிய பிறகு அது பற்றி பேசுவது தவறு, அவர்களுக்குள் லவ் இருந்தால் என்ன, இல்லாமல் போனால் உங்களுக்கு என்ன என பாவனிக்கு ஆதரவாக மற்ற போட்டியாளர்களை விளாசி தள்ளினார் கமல்.

குழம்பிப் போன கமல்
ஆனால் அடுத்த நாளே, தனக்கும் அப்படி ஒரு எண்ணம் ஏற்பட்டதாக பாவனி தன்னிடம் கூறியதாக ராஜு கூறியதும் கமலே குழம்பிப் போய் அந்த பிரச்சனை பற்றி பேசுவதையே அவர் ஓரங்கட்டி வைத்து விட்டு, அடுத்த பிரச்சனை பற்றி பேச போய் விட்டார். சரி, கமல் பேசியதோடு முடியும் என்று பார்த்தால் இந்த வாரமும் அதே பேச்சு தொடர்கிறது. கடைசியாக அபினய்யும், பாவனியும் இனி பேசிக் கொள்ள வேண்டாம். விலகி இருக்கலாம் என்ற முடிவுக்கு வந்து விட்டனர்.

முத்தம் கொடுத்த அமீர்
இந்த நிலையில் பாவனிக்கு ஆறுதல், தைரியம் சொல்லி, அவர் மீது தவறு இல்லை என்பதை அவருக்கு புரிய வைக்கிறேன் என்ற பெயரில், நேற்றைய எபிசோடில் முத்தம் கொடுத்து புதிய பிரச்சனையை ஆரம்பித்து வைத்து விட்டார் அமீர். இது வரை பாவனியிடம் வழிந்து, ரொமான்ஸ் செய்து வந்ததை ஜாலியாகவும், சிலர் கலாய்த்தும் வந்தனர்.

ஒரே நாளில் டிரெண்டிங்கான அமீர்
வைல்ட் கார்டு என்ட்ரியாக வந்து, வந்த சில நாட்களிலேயே பாவனியுடன் நெருங்கி பழகி, அனைவரின் கவனத்தையும் தன் பக்கம் திருப்பி விட்டார் அமீர். பல நேரம் அவரது பேச்சு நியாயமாக கூட பலருக்கும் தோன்றியது. ஆனால் அப்போதெல்லாம் பெரிய அளவில் பேசப்படாமல் இருந்த அமீர், நேற்று பாவனிக்கு கொடுத்த ஒரே ஒரு முத்தம் காரணமாக ட்விட்டர் டிரெண்டில் டாப்பிற்கு சென்று விட்டார்.

டாப்பிற்கு வந்த ஹாஷ்டேக்
அமீர், பாவனிக்கு முத்தம் கொடுத்த சில நிமிடங்களிலேயே #Amir ஹாஷாடேக் உருவாக்கப்பட்டு, அது டிரெண்டிங்கில் இரண்டாவது இடம் பிடித்தது. ட்விட்டர் டிரெண்டிகில் முதலிடத்தில் #BiggBoss5 ஹாஷ்டேக்கும், இரண்டாவது இடத்தில் #Amir ஹாஷ்டேக்கும் இடம்பெற்றன. அமீர் முத்தம் கொடுத்த வீடியோ கிளிப்பிங் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.


Click it and Unblock the Notifications











