பேச வேணாம்னு நினைக்கிறேன்...ஆனா பேசிட்டே இருப்பேன்....குழப்பும் பாவனி

சென்னை : பிக்பாஸின் ஒவ்வொரு சீசனிலும் காதல் விவகாரம் முக்கிய விஷயமாக பேசப்பட்டு வருவது வழக்கம். ஏதாவது ஒரு காதல் ஜோடி உருவாகும். ஆனால் பிக்பாஸ் சீசன் 5 ல் காதல் விவகாரம் மிகப் பெரிய விவாத பொருளாக மாறி உள்ளது.

Recommended Video

Pavani பிரச்சினை பற்றி Abhinay மனைவி என்ன சொன்னாங்க தெரியுமா?? | Bigg Boss Tamil, Abhinay Pavani

முதலில் பாவனி - அபினய் இடையே இருப்பது காதல் என மற்றவர்கள் பேசிய போது கோபப்பட்டு கத்தினார் பாவனி. பிறகு தனக்கும் அப்படி ஒரு எண்ணம் இருப்பதாக ராஜுவிடம் கூறினார். ஆனால் தங்களுக்குள் இருப்பது நட்பு மட்டும் தான் என கடைசி வரை விடாபிடியாக நின்றார் அபினய்.

விலகாத பாவனி

விலகாத பாவனி

அமீர் வந்த பிறகு அவருடன் நெருக்கம் காட்டி வந்தார் பாவனி. அமீரும் கேமிராக்கள் சுற்றி இருப்பது தெரிந்தும் வெளிப்படையாக ஐ லவ் யூ சொன்னார். முத்தம் கொடுத்தார். பாவனியின் அம்மாவை அத்தை என்றார். ஆனால் அமீர் எல்லை மீறி நடப்பது தெரிந்தும் சிரித்துக் கொண்டே நோ சொல்லி வந்த பாவனி, அவரிடம் நெருக்கமாக பழகுவதை தவிர்க்கவில்லை.

எச்சரித்த குடும்ப உறவுகள்

எச்சரித்த குடும்ப உறவுகள்

ஃபிரீஸ் டாஸ்கின் போது வந்த குடும்ப உறவுகளும் இவர்களின் பழக்கம் பற்றி அட்வைஸ் செய்தனர். ஆனால் மற்றவர்கள் பேசுவதை பற்றி தான் கவலைபடவில்லை என்றும், தான் எப்போதும் போல் உன்னுடன் பேசிக் கொண்டிருப்பேன் என, அமீரின் கையை இறுக்கமாக பிடித்து கூறினார் பாவனி.

 பாவனியை நாமினேட் செய்த அமீர்

பாவனியை நாமினேட் செய்த அமீர்

இந்த நிலையில் நேற்றைய ஓப்பன் நாமினேஷன் ப்ராசசின் போது அமீர், பாவனியை நாமினேட் செய்வதாக கூறி அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்தார். பாவனியை நாமினேட் செய்வதற்கு அவர் சொன்ன காரணம் அதை விட அதிர்ச்சியாக இருந்தது. யாரும் எதிர்பார்க்காத செம ட்விஸ்டாக இருந்தது.

அதிர்ச்சி கொடுத்த அமீர்

அதிர்ச்சி கொடுத்த அமீர்

தான் பிக்பாஸ் வீட்டிற்கு வந்ததே பாவனியுடன் பழகுவதற்காக தான் என பலர் சொல்கிறார்கள். ஆனால் இங்கு கதவு திறக்கும் வரை எனக்கு, உள்ளே வருவதாக உறுதியானதை நான் நம்பவில்லை. பாவனியுடன் பழகுவதிலேயே நான் கவனம் செலுத்துவதாக கூறுகிறார்கள். அதனால் இனி நான் அதை செய்ய மாட்டேன். அதற்காக அவரை நாமினேட் செய்கிறேன் என்றார் அமீர்.

கடுப்பான பாவனி

கடுப்பான பாவனி

அமீர் தன்னை நாமினேட் செய்ததால் கடுப்பான பாவனி, நானா வந்து உன்னிடம் பேசினேன். நீயாக வந்து பேசி, பழகினாய். இப்போது நீ கேம் விளையாடாததற்கு நான் தான் காரணம் என்பதை போல் என்னை நாமினேட் செய்கிறாய். உன்னுடன் இனி பேச வேண்டாம் என நினைக்கிறேன் என்றார். இதனால் ரசிகர்கள், என்ன...இனி பாவனியும் அமீரும் பேச மாட்டார்களா என ஆச்சரியமாக கேட்க துவங்கினர்.

என்ன பிரச்சனை பாவனிக்கு

என்ன பிரச்சனை பாவனிக்கு

ஆனால் சிறிது நேரத்திலேயே, எதற்காக அப்படி சொன்னாய் என விளக்கம் கேட்டு அமீரிடம் தொடர்ந்து பேசுகிறார் பாவனி. இதை பார்த்து விட்டு அனைவரும், பாவனி என்ன தான் சொல்ல வருகிறார். ரொம்ப குழப்புறாரே. கமல் மற்றும் குடும்பத்தினரின் அட்வைசை கேட்டு அமீரே கேமில் கவனம் செலுத்த போவதாக கூறி விட்டார். இவர் ஏன் பேச மாட்டேன் என்று சொல்லி விட்டு, திரும்ப திரும்ப பேசிக் கொண்டிருக்கிறார். என்ன பிரச்சனை பாவனிக்கு என கேள்வி கேட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X