For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  ஆஸ்கருக்கு முன் பாலிவுட்டில் கோலோச்சிய இசைப்புயல்.. ஆஸ்கர் விருதுக்கு பின் ஒதுக்கப்பட்டாரா? ஏன்?

  |

  சென்னை: பாலிவுட்டில் நெப்போடிசத்தின் அட்டகாசம் எந்தளவுக்கு அதிகரித்து இருக்கிறது என்பதற்கான மற்றொரு சாட்சியாக இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானே மாறியுள்ளார்.

  சமீபத்தில் ரேடியோ மிர்ச்சி சேனலுக்கு அளித்த பேட்டியில், பாலிவுட் படங்களுக்கு இசையமைப்பதை குறைத்துக் கொண்டீர்களா? என்ற கேள்விக்கு, தன்னை அங்கு பணி புரிய விடாமல் தடுக்க ஒரு கூட்டமே இருப்பதாகக் கூறி பரபரப்பை கிளப்பியுள்ளார் ரஹ்மான்.

  இங்கே ஆஸ்கருக்கு முன் ஆஸ்கருக்கு பின், பாலிவுட்டில் ஏ.ஆர். ரஹ்மானின் பங்கு எப்படி இருந்தது என்பது குறித்து பார்ப்போம்.

  அடுத்து யாரு நயன்தாராவா? நடிகைகளை வம்பிழுக்கும் மீரா மிதுன்.. வச்சு செய்யும் நெட்டிசன்ஸ்!

  ஷாக்கிங்

  ஷாக்கிங்

  இந்நிலையில், ஆஸ்கர் விருதுக்கு முன்பாக ஏ.ஆர். ரஹ்மான் பாலிவுட்டில் அதிக படங்களை இசையமைத்தாரா? அல்லது அதற்கு பிறகு அதிக படங்களில் பணிபுரிந்தாரா என்ற கேள்வி இயல்பாகவே எழத்தான் செய்கிறது. அதுகுறித்து பார்க்கும் போது பேரதிர்ச்சி காத்துக் கொண்டிருக்கிறது. ஆஸ்கர் விருது வென்றதற்கு பிறகு பாலிவுட்டில் ஏ.ஆர். ரஹ்மானின் வாய்ப்புகள் மிகவும் குறைவாகவே உள்ளன.

  ஆஸ்கர் நாயகன்

  ஆஸ்கர் நாயகன்

  கடந்த 2008ம் ஆண்டு டேனி பாயல் இயக்கத்தில் வெளியாகி 8 ஆஸ்கர் விருதுகளை அள்ளிய ஸ்லம்டாக் மில்லியனர் படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் தான் இசையமைத்து இருந்தார். அந்த படத்திற்கு சிறப்பான இசை மற்றும் ஜெய்ஹோ பாடலை பாடியதற்காக ரஹ்மானுக்கு இரண்டு ஆஸ்கர் விருதுகள் கிடைத்தன. ஆஸ்கர் மேடையில் தான் ஒரு தமிழன் என்பதை பிரதிபலிக்கும் விதமாக "எல்லா புகழும் இறைவனுக்கே" என ஏ.ஆர். ரஹ்மான் பேசி இருந்தார்.

  ஆஸ்கருக்கு முன்

  ஆஸ்கருக்கு முன்

  ஸ்லம்டாக் மில்லியனர் படத்திற்கு ஆஸ்கர் வாங்குவதற்கு முன்பாக பாலிவுட்டில், படு பிசியாக இருந்துள்ளார் ஏ.ஆர். ரஹ்மான். இயக்குநர் மணிரத்னத்தின் ரோஜா படம் மூலமாக இசையமைப்பாளராக அறிமுகமான ரஹ்மான், தென்னிந்திய மொழிப் படங்களில் தனது சிறப்பான இசையை கொடுத்து பிரபலமானார். ராம் கோபால் வர்மா இயக்கத்தில் 1995ம் ஆண்டு வெளியான ரங்கீலா திரைப்படத்தின் மூலமாக பாலிவுட்டில் அறிமுகமானார்.

  பெருசா கண்டுக்கல

  பெருசா கண்டுக்கல

  ரங்கீலா படத்தின் ஆல்பம் டிராக்குகள் வேற லெவலில் பாலிவுட்டில் ஹிட்டாக முதல் படத்திலேயே பிலிம்ஃபேர் விருதுகளை அள்ளிக் குவித்தார். ஆனால், அந்த படத்தின் வெற்றிக்கு பிறகு மற்ற இயக்குநர்கள் படங்களில் பாலிவுட்டில் ரஹ்மான் ஒப்பந்தம் செய்யப்படவில்லை. மீண்டும் தமிழுக்கு வந்த அவர், இங்கே சூப்பர் ஹிட் ஆல்பங்களை இசைத்து வந்தார். மீண்டும் 1997ம் ஆண்டு ராம் கோபால் வர்மா இயக்கிய தாவுத் படத்திற்கு ரஹ்மான் இசையமைத்தார்.

  33 படங்கள்

  33 படங்கள்

  1997ம் ஆண்டு முதல் 2008 வரை பாலிவுட்டில் ரவுண்டு கட்டி அடித்தார் ஏ.ஆர். ரஹ்மான். கிட்டத்தட்ட 33 படங்களுக்கு பாலிவுட்டில் மட்டும் இசையமைத்துள்ளார். ஷாருக்கானின் தில் சே, சுவதேஷ், அமீர்கானின் லகான், ரங்தே பசந்தி, கஜினி, ஹிரித்திக் ரோஷனின் ஜோதா அக்பர், அபிஷேக் பச்சனின் குரு உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்களுக்கு இசையமைத்து ஏகப்பட்ட விருதுகளை குவித்துள்ளார்.

  ஆஸ்கருக்கு பின்

  ஆஸ்கருக்கு பின்

  ஆனால், ஆஸ்கர் விருதை வென்ற பின்னர், 2008ம் ஆண்டு முதல் 2020ம் ஆண்டு வரையிலான 12 ஆண்டுகளில் வெறும் 18 படங்களுக்கு மட்டுமே ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார் என்பது அதிர்ச்சியளிக்கும் உண்மையாகவே உள்ளது. அதிலும், பெரிய நடிகர்கள் படங்களுக்கு என்றால் பார்த்தால், ஒன்றிரண்டு படங்கள் மட்டுமே. எப்படி இந்த திடீர் மாற்றம் நடந்தது என்ற கேள்வியும் அதிகரிக்கிறது.

  Live: என்னால தூங்க முடியல A. R. Rahman emotional live video
  உங்களை வேண்டாம் என்றனர்

  உங்களை வேண்டாம் என்றனர்

  சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் இறுதி படமான தில் பேச்சாரா படத்திற்காக இயக்குநர் முகேஷ் சப்ரா இசைப் புயலை அணுகும் தகவல் தெரிந்த பாலிவுட்டின் பெரும் புள்ளிகள் சிலர், அவரா? அவர் எல்லாம் வேண்டாம்.. வேற யாராவது பாலிவுட்டிலேயே மியூசிக் டைரக்டரை பாருங்க என சொல்லி உள்ளனர். இந்த தகவலையும் தற்போது ஏ.ஆர். ரஹ்மான் வெளியிட்டு பாலிவுட்டின் நெப்போடிச முகத்திரையை கிழித்துத் தொங்கவிட்டுள்ளார்.

  English summary
  After Oscar winning AR Rahman’s bollywood movie list totally comes down in the past 12 years, he was worked only in 18 movies including Dil Bechara.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more
  X