உருக்கமான குட்டி ஸ்டோரி சொன்ன பிரியங்கா... லைக்கை மாற்றி டிஸ்லைக் கொடுத்த ஹவுஸ்மேட்ஸ்

சென்னை : பிக்பாஸ் தமிழ் சீசன் 5 ன் எட்டாம் நாளான இன்று, மீதமுள்ள போட்டியாளர்கள் தங்களின் வாழ்க்கை கதையை சொன்னார்கள். அதில் முதலாவதாக அக்ஷரா தனது வாழ்க்கையில் நடந்த பிரச்சனைகள், கடந்து வந்த பாதைகள் பற்றி சொன்னார். இதற்கு ராஜு கொடுத்த லைக் பெரும் விவாதமான விஷயமானது.

இதைத் தொடர்ந்து பிரியங்கா தனது கதையை சொன்னார். அப்போது, எங்க அம்மாவும் அப்பாவும் பயங்கரமாக காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். அப்பாவிற்கு என்னை தான் ரொம்ப பிடிக்கும். அவர் தான் என்னோட ஹீரோ.

 After priyanka tell her story some housemates change like to dislike

அவர் டெல்லியில் இருந்து ரயிலில் வரும் போது மூச்சுத்திணறல் ஏற்பட்டதாக போன் வந்தது. அம்மா என்னை மட்டும் வீட்டில் விட்டு விட்டு, தம்பியை கூட்டிக் கொண்டு போனார். கொஞ்ச நேரத்தில் அப்பா எனக்கு கால் பண்ணி, ரொம்ப மங்கலான குரலில் பேசினார். எனக்கு என்ன நடந்தது என்றே தெரியவில்லை. அடுத்த நாள் எனது பெரியம்மா தான் அப்பா இறந்து போனதை சொன்னார்.

மொத்தமாக உடைந்து போனேன். பிறகு எங்களுக்கு எந்த கஷ்டமும் தெரியாமல் அம்மா வளர்த்தார். பிறகு தான் தெரிந்தது. அப்பா ரயிலில் வந்த போது அம்மா ஸ்ட்ரெக்ட்சருடன் சென்ற போது யாரும் உதவிக்கு வரவில்லை. ஒருவேளை அப்போது யாராவது கூட இருந்திருந்தால், அவருக்கு உதவி இருந்தால், அப்பா இன்று உயிருடன் இருந்திருப்பாரோ என தோன்றியது. அதனால் தான் எனக்கு பிடிக்காதவராக இருந்தாலும் அவர்களுக்கு பிரச்சனை என்றால் முதலில் போய் நிற்பேன்.

நான் இருக்கும் இடத்தை சந்தோஷமாக, பாசிடிவ்வாக, ஜாலியாக வைத்திருக்க நினைப்பேன். அதை செய்ய வேண்டும் என்பதற்காக தான் பிக்பாஸ் வீட்டிற்கு வந்தேன். நான் இங்கு வருவதற்கு முன் அனைவரும் பயமுறுத்தினார்கள். ஆனால் அதையும் தாண்டி அப்படி நடக்காது என நம்பி தான் இங்கு வந்தேன் என்றார்.

இதைக் கேட்டு இமான் அண்ணச்சி முதல் ஆளாக ஹார்ட் கொடுத்தார். பலர் லைக் கொடுத்தனர். வழக்கம் போல் ராஜு டிஸ்லைக் கொடுத்து விட்டு, அதற்கு விளக்கம் சொன்னார். ராஜு பேசிய பிறகு எழுந்து வந்த நிரூப், லைக்கை எடுத்து விட்டு டிஸ்லைக் கொடுத்தார். அவரைத் தொடர்ந்து ஐக்கி பெர்ரியும் லைக்கை எடுத்து விட்டு, டிஸ்லைக் கொடுத்தார்.

பிரியங்காவின் கதை தனக்கு கனெக்ட் ஆகவில்லை என டிஸ்லைக் கொடுத்தார் வருண். இதைக் கேட்டு விட்டு எழுந்து வந்த அண்ணாச்சி, யாரு என்ன சொன்னாலும் ஹார்ட் கொடுத்தது கொடுத்தது தான் என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X