Don't Miss!
- News
இத்தனை ஆயிரம் கோடியா? டோல்கேட்டில் வருமானம் குவிக்கும் பாஸ்ட்டேக்.. 2022ல் வாய்பிளக்க வைத்த வசூல்!
- Finance
ஈக்விட்டி F&O முதலீட்டாளர்கள் ஷாக்.. 89% பேருக்கு நஷ்டம்..!
- Sports
ஐபிஎல் தொடருக்கு வந்த ஆபத்து.. கடும் அதிருப்தியில் அணி நிர்வாகிகள்.. எப்படி சமாளிக்கும் பிசிசிஐ
- Technology
50எம்பி கேமரா, 5000எம்ஏஎச் பேட்டரியுடன் மோட்டோ ஜி73 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்: பட்ஜெட் விலை.!
- Lifestyle
15 நிமிடத்தில் ருசியான சிக்கன் கிரேவி செய்வது எப்படி?
- Automobiles
"தாலாட்டும் காற்றே வா..." நடிகர் அஜித் பயன்படுத்திய ஜீப் மாறி இருக்கே!! ஆனால் உண்மையில் எந்த வாகனம் தெரியுமா?
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
ரஜினி பட ஸ்டையிலில் டைட்டில் வைத்த தளபதி 66 டீம்...இந்த வார்த்தைக்கு என்ன அர்த்தம்?
சென்னை : விஜய்யின் 48 வது பிறந்தநாள் நாளை கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு விஜய் தற்போது நடித்து வரும் தளபதி 66 படத்தின் டைட்டில் வெளியிடப்பட்டுள்ளது.
Recommended Video
டைரக்டர் வம்சி பைடபள்ளி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் தளபதி 66 படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஃபிலிம்ஸ் பேனரில் தில் ராஜு தயாரிக்கிறார். தமன் இசையமைக்கிறார். இந்த படத்தின் ஷுட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
ஏப்ரல் 6 ம் தேதி சென்னையில் பூஜையுடன் துவங்கப்பட்ட தளபதி 66 படத்தின் ஷுட்டிங் சென்னை, ஐதராபாத்தை தொடர்ந்து தற்போது மீண்டும் சென்னையில் நடைபெற்று வருகிறது.
விஜய் பிறந்த நாள் பரிசு.. ரசிகர்கள் வெளியிட்ட 'அண்ணா' ஆல்பம் சாங் !

கெஸ்ட் ரோலில் மகேஷ்பாபு
தளபதி 66 படத்தின் ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், ஜெயசுதா, யோகிபாபு, பிரகாஷ் ராஜ், ஷ்யாம், ஸ்ரீகாந்த், பிரபு, சங்கீதா க்ரிஷ், சம்யுக்தா உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். இதில் கெஸ்ட் ரோலில் தெலுங்கு சூப்பர் ஹீரோ மகேஷ் பாபு நடிப்பதாக கூறப்படுகிறது.

குடும்ப சென்டிமென்ட் படம்
குடும்ப சென்டிசென்ட் படமாக தளபதி 66 படத்தின் கதை அமைக்கப்பட்டு வருகிறது. இதில் விஜய் இரட்டை வேடங்களில் நடிக்கிறார். அதில் ஒரு கேரக்டர் இரண்டு குழந்தைகளுக்கு அப்பா கேரக்டர். அதே சமயம் இரண்டு கேரக்டர்களுக்கும் ஸ்டிராங்கான சென்டிமென்ட் மற்றும் பிளாஷ்பேக் காட்சிகள் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தளபதி 66 டைட்டில் வாரிசு
இந்த சமயத்தில் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை டைட்டிலுடன் படக்குழு இன்று வெளியிட்டது. தளபதி 66 படத்திற்கு வாரிசு : தி பாஸ் ரிட்டர்ன்ஸ் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. கெத்தாக, செம மாஸாக கோட் ஷுட், ட்ரிம் செய்யப்பட்ட தாடி என ஸ்டையிலான அமர்ந்திருக்கும் விஜய்யின் போஸ்டர் ஃபர்ஸ்ட் லுக்காக வெளியிடப்பட்டுள்ளது.

தெலுங்கில் என்ன டைட்டில்
தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் தயாராகி வரும் தளபதி 66 படத்திற்கு தெலுங்கில் வாரசுடு என டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் தமிழில் வாரிசு என பெயர் வைக்க அதிக வாய்ப்புள்ளதாக சமீபத்தில் தெலுங்கு மீடியாக்களில் தகவல் கசிந்தது. இந்த தகவல்படியே படத்திற்கு வாரிசு என்று தான் டைட்டில் வைத்துள்ளனர்.

ரஜினி பட ஸ்டைலில் டைட்டில்
ஆனால் அதோடு ஆங்கிலத்தில் The Boss returns என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுவரை தமிழ் சினிமாவில் The boss என்ற வார்த்தை ரஜினி படங்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது. ரஜினி நடித்த சிவாஜி படத்தின் டைட்டிலில் சிவாஜி தி பாஸ் என குறிப்பிடப்பட்டிருக்கும். அதே போல் அடுத்ததாக அவர் நடிக்க உள்ள ஜெயிலர் படத்திற்காக படக்குழு யோசித்து வைத்த டைட்டில்களில் The Boss என்ற டைட்டிலும் ஒன்று.

இந்த வார்த்தை எதுக்கு
சிவாஜி படத்தில் வில்லன்களின் சதியால் அத்தனை சொத்துக்களையும் இழந்த ரஜினி, கருப்பு பணம் பதுக்கியவர்களின் பணத்தை வைத்தை தான் இழந்தவற்றை மீட்டெடுப்பதுடன், அவற்றை ஏழைகளின் வளர்ச்சிக்காக பயன்படுத்துவார். இதனால் The Boss என தன்னை அடையாளப்படுத்திக் கொள்வார். ஆனால் குடும்ப சென்டிமென்ட் படமான தளபதி 66 படத்தின் டைட்டிலில் எதற்காக The Boss என்ற வார்த்தையை பயன்படுத்தி உள்ளனர்.

இது தான் இந்த வார்த்தைக்கு அர்த்தமா
இந்த வார்த்தைக்கு என்ன அர்த்தமாக இருக்கும். டைட்டிலில் வைக்கப்பட்டுள்ள The Boss என்ற வார்த்தைக்கும் படத்தின் கதைக்கும் என்ன தொடர்பு இருக்கும். படத்தின் கதை என்னவாக இருக்கும் என பல விதங்களில் கேள்விகள் அடுக்கடுக்காக எழுப்பப்பட்டு வருகின்றன. இல்லை என்றால் ரஜினி ஸ்டைலில் தன்னை அடையாளப்படுத்திக் கொள்வதற்காக விஜய் படத்திற்கும் ரஜினி பட ஸ்டைலில் டைட்டில் வைக்கப்பட்டுள்ளதா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.