விஜய் தலைமுடிக்கு என்னாச்சு...சதீஷ் பகிர்ந்த ஃபோட்டோவால் குழம்பிய ரசிகர்கள்

சென்னை : தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக இருப்பவர் சதீஷ். ரஜினி, விஜய், சிவகார்த்திகேயன் என பலரின் படங்களில் காமெடி ரோல்களில் நடித்து வந்த சதீஷ், தற்போது ஹீரோவாக அறிமுகமாக உள்ளார்.

லைகா ப்ரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் நாய் சேகர் படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார் சதீஷ். இதில் இவருக்கு ஜோடியாக பவித்ரலட்சுமி நடிக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் ஃபஸ்ட் சிங்கிளான எடக்கு மொடக்கு பாடல் வெளியிடப்பட்டு, நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

சதீஷ் பகிர்ந்த ஃபோட்டோ

சதீஷ் பகிர்ந்த ஃபோட்டோ

இந்நிலையில் நடிகர் விஜய்யுடன் காரில் பயணம் செய்த ஃபோட்டோ ஒன்றை சதீஷ் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். இது தான் எப்போதும் எனது பெஸ்ட் ரைடு. வாத்தி ரைடு. ரைடு வித் தளபதி விஜய் என்ற கேப்ஷனுடன் விஜய் கார் ஓட்டுவது போலவும், சதீஷ் உடன் அமர்ந்து செல்வது போலவும் இருக்கும் ஃபோட்டோவை பகிர்ந்துள்ளார்.

விஜய் தலைமுடிக்கு என்னாச்சு

விஜய் தலைமுடிக்கு என்னாச்சு

சதீஷ் பகிர்ந்துள்ள இந்த ஃபோட்டோவில் வழக்கமான ஸ்டைலான தலைமுடிக்கு பதிலாக கிட்டதட்ட மொட்டை அடித்தது போன்ற கெட்அப்பில் இருக்கிறார் விஜய். இதை பார்த்து விட்டு விஜய்யின் தலைமுடிக்கு என்ன ஆச்சு, இது தான் அவரின் உண்மையான தோற்றமா என ரசிகர்கள் குழப்பத்துடனும், சந்தேகத்துடனும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

மோதும் ரசிகர்கள்

மோதும் ரசிகர்கள்

இதில் வேடிக்கை என்னவென்றால் இந்த ஃபோட்டோவை வைத்தும் விஜய் - அஜித் ரசிகர்கள் மோதிக் கொள்வது தான். சதீஷ் பகிர்ந்த ஃபோட்டோவை அஜித் ரசிகர்கள் கிண்டல் செய்து வருவதற்கு போட்டியாக, விஜய் ரசிகர்களும் அஜித் மொட்டை அடித்திருப்பது, குறைவான முடி வைத்திருப்பது போன்ற ஃபோட்டோக்களை அதிகம் பகிர்ந்து கிண்டல் செய்து வருகிறார்கள்.

 விஜய் பள்ளிக்கூடம் கட்டுகிறாரா

விஜய் பள்ளிக்கூடம் கட்டுகிறாரா

அதோடு விஜய் இலவச பள்ளிக்கூடம் ஒன்றை கட்டி வருவதாக வெளியான பத்திரிக்கை செய்தி ஒன்றையும் ரசிகர் ஒருவர் பகிர்ந்துள்ளார். அதில், ஏழை மாணவர்கள் இலவசமாக படிப்பதற்காக திருப்போரூர் பகுதியில் விஜய் பள்ளிக்கூடம் ஒன்றை கட்டி வருவதாக தகவல் பரவி வருகிறது. ஆனால் உண்மையில் இந்த பள்ளிக்கூடத்தை விஜய் கட்டவில்லை. அவரது மாமாவும், தயாரிப்பாளருமான பிரிட்டோ தான் இதை கட்டி வருகிறார்.

Recommended Video

Fitness ரொம்ப ரொம்ப முக்கியம்' - Arun Vijay | Vishnu Vishal | Shivani | Tamil Filmibeat
இது தான் விஷயமா

இது தான் விஷயமா

விஜய்யை வைத்து மாஸ்டர் படத்தை தயாரித்த பிரிட்டோவிற்கு சொந்தமாக ஏற்கனவே ஒரு கல்லூரியும், பள்ளிக்கூடமும் உள்ளதாம். தற்போது கட்டுவது இரண்டாவது பள்ளிக்கூடமாம். இந்த பள்ளியை விஜய் சுற்றி பார்க்க சென்றுள்ளார். அதை வைத்து விஜய் தான் பள்ளிக்கூடம் கட்டுவதாக வதந்தி கட்டி விட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதையும் அஜித் ரசிகர்கள் ட்ரோல் செய்து வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X