ஆறு ஆண்டுகளுக்கு பின் மீண்டும் மோதும் விஜய் சேதுபதி – சிவகார்த்திகேயன் படங்கள்
சென்னை : தமிழ் சினிமாவை பொருத்தவரை தியாகராஜ பாகவதர் காலம் முதல் தற்போது வரை அந்தந்த கால கட்டத்தில் இரண்டு பெரிய ஸ்டார்களில் யார் பெஸ்ட் என ரசிகர்களிடம் மோதல் அடிக்கடி நடந்து வருகிறது.
தியாகராஜ பாகவதர் - பி.யு.சின்னப்பா, எம்ஜிஆர் - சிவாஜி, ரஜினி - கமல், அஜித் - விஜய், தனுஷ் - சிம்பு என ரசிகர்கள் பிரித்து வைத்து மோதிக் கொண்டுள்ளனர். அந்த வரிசையில் சமீப காலமாக ரசிகர்கள் பிரித்து வைத்துள்ளவர்கள் சிவகார்த்திகேயன் - விஜய் சேதுபதி.

ரசிகர்கள் இடையே மோதல்
இருவரின் படங்களும் வேறு வேறு விதமாக ஸ்டைலை கொண்டவை, இருவரும் நிஜத்தில் நெருங்கிய நண்பர்கள் என்பது அனைவருக்கும் தெரியும். இருந்தாலும் தமிழ் சினிமாவில் யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி, ரசிகர்களின் மனங்களை கவர்ந்தவர்கள் என்பதால், இவர்களை பற்றி அவர்களின் ரசிகர்களுக்கு இடையே மோதல் நிலவுகிறது.

பிப்ரவரியில் மோதும் படங்கள்
லேட்டஸ்ட் தகவலின் படி, சிவகார்த்திகேயன் அடுத்து நடித்து வரும் டான், விஜய் சேதுபதியின் காத்து வாக்குல ரெண்டு காதல் ஆகிய இரண்டு படங்களும் 2022 ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ரிலீஸ் செய்யப்பட உள்ளதாம். காதலர் தினத்தை முன்னிட்டு வார இறுதி நாட்களில் படத்தை ரிலீஸ் செய்ய இரண்டு படங்களின் தயாரிப்பாளர்களும் முடிவு செய்திருக்கிறார்களாம்.

ஒரே சமயத்தில் ரிலீஸ்
இதற்கு முன் 2013 ல் சிவகார்த்திகேயனின் எதிர்நீச்சல், விஜய் சேதுபதியின் சூது கவ்வும் ஆகிய படங்கள் ஒரே சமயத்தில் வெளியிடப்பட்டன. இதே போல் 2016 ல் ரெமோ, றெக்க ஆகிய படங்கள் ஒரே சமயத்தில் ரிலீஸ் செய்யப்பட்டன.

6 ஆண்டுகளுக்கு பின் மோதல்
அந்த வரிசையில் தற்போது ஆறு ஆண்டுகளுக்கு பிறகு சிவகார்த்திகேயனின் டான், விஜய் சேதுபதியின் காத்து வாக்கல ரெண்டு காதல் படங்கள் ஒரே சமயத்தில் வெளியிட உள்ளனவாம். இதனால், எந்த ஸ்டாரின் படம் அதிக வசூலையும் வரவேற்பையும் பெறும் என ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
Recommended Video

எதிர்பார்க்கப்படும் படங்கள்
டைரக்டர் சிபி சக்கரவர்த்தி இயக்கி உள்ள டான் படத்தில் சிவகார்த்திகேயன், பிரியங்கா அருள் மோகன், எஸ்.ஜே.சூர்யா, சிவாங்கி ஆகியோர் நடித்துள்ளனர். இதே போல் டைரக்டர் விக்னேஷ் சிவன் இயக்கி உள்ள காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











