மறுபடியும் லீக்கான 'வாரிசு' விஜய் வீடியோ...விட்டா படத்தையே லீக் பண்ணிடுவாங்க போல

சென்னை : டைரக்டர் வம்சி பைடபள்ளி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் வாரிசு படத்தின் ஷுட்டிங் ஐதராபாத்தில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. மிக முக்கியமான காட்சிகள் தற்போது எடுக்கப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது.

விஜய்யின் 66 வது படமாக உருவாகி வரும் வாரிசு படம் குடும்ப சென்டிமென்ட் கதை என சொல்லப்படுகிறது. இதனால் ஏற்கனவே ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது. ஒவ்வொருவருக்கும் முக்கியமான கேரக்டர் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வாரிசு படத்தில் எஸ்.ஜே.சூர்யாவும் இணைந்துள்ளதாக சமீபத்தில் சொல்லப்பட்டது. இது உண்மை தான். பிறந்தநாளான நேற்று முதல் வாரிசு பட செட்டில் எஸ்.ஜே.சூர்யாவும் இணைந்துள்ளதாக லேட்டஸ்டாக தகவல் வெளியாகி உள்ளது.

விஜய்-ராஷ்மிகா ரொமான்ஸ் சீன்

விஜய்-ராஷ்மிகா ரொமான்ஸ் சீன்

தற்போது நடைபெற்று வரும் ஷுட்டிங்கில் விஜய் - ராஷ்மிகா இடையேயான ரொமான்ஸ் காட்சிகள் உள்ளிட்ட பல முக்கியமான சீன்கள் எடுக்கப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது. இதனால் படத்தில் நடிக்கும் அனைவரும் இந்த ஷுட்டிங்கில் கலந்து கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 2023 ம் ஆண்டு பொங்கலுக்கு தான் வாரிசு ரிலீஸ் என்று சொல்லப்பட்டாலும், இப்போதே பெரும்பாலான சீன்கள் படமாக்கப்பட்டு முடிக்கப்பட்டு விட்டதாக சொல்லப்படுகிறது.

விஜய்யின் கேரக்டர் பெயர் இதுவா

விஜய்யின் கேரக்டர் பெயர் இதுவா

படத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடிப்பதாக சொல்லப்படுகிறது. இதில் ஒரு கேரக்டர் மாஸ் ஹீரோ கேரக்டர் என்றும், இந்த படத்தில் விஜய்யின் கேரக்டர் பெயர் விஜய் ராஜேந்திரன் என்றும் சொல்லப்படுகிறது. இந்த படத்தில் விஜய் ஆப் டெவலப்பர் வேலை செய்பவராக நடித்து வருவதாக மீடியாக்களில் தகவல் பரவி வருகிறது.

லீக்கான வாரிசு ஷுட்டிங் வீடியோ

இந்நிலையில் வாரிசு படத்தில் விஜய் நடிக்கும் காட்சி ஒன்றின் வீடியோ சோஷியல் மீடியாவில் லீக்காகி உள்ளது. இதில் விஜய், பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட்டில் மாடியில் நடந்து செல்வது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது. இதில் மொபைலில் வீடியோ எடுத்த யாரோ ஒருவர் சோஷியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ ஒருபுறம் அதிகம் பகிரப்பட்டு வந்தாலும், மற்றொரு புறம் இதை நீக்கும் படி விஜய் ரசிகர்கள் கெஞ்சி வருகின்றனர்.இது போன்ற ஷுட்டிங் வீடியோக்களை பகிர வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளனர்.

அட போங்கப்பா

அட போங்கப்பா

ஏற்கனவே சென்னையில் நடந்த ஷுட்டிங் போட்டோக்கள் மற்றும் வீடியோக்கள் லீக்கானதால் விஜய் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து, கோபமடைந்தனர். இதனால் அதே காட்சிகளை வேறு விதமாக டைரக்டர் மீண்டும் எடுக்க முடிவு செய்ததாக சொல்லப்பட்டது. ஆனால் அதற்கு பிறகும் மீண்டும் மீண்டும் வாரிசு படத்தின் ஷுட்டிங் வீடியோக்கள் கசிந்து வருகிறது.

விட்டா படத்தையே லீக் பண்ணிடுவாங்க

விட்டா படத்தையே லீக் பண்ணிடுவாங்க

இதனால் டென்ஷனான ரசிகர்கள், இந்த அளவிற்கா பாதுகாப்பில் கோட்டை விடுவீர்கள் என படக்குழுவினரை விமர்சித்து வருகின்றனர். அதே நேரம் சிலர், இந்த வீடியோவில் இருப்பது விஜய் போல் இல்லை. ராம் சரண் போல் உள்ளது. விட்டால் ஷுட்டிங் முடிவதற்கு முன்பே வாரிசு படத்தின் மொத்த படத்தையும் ரிலீஸ் செய்து விடுவார்கள் போல என கலாய்த்து கமெண்ட் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X