மீண்டும் ரெய்டு.. படமே வெளியாகல.. அதுக்குள்ள சோதனையா.. டார்கெட் செய்யப்படுகிறாரா விஜய்?
சென்னை: நடிகர் விஜய் வீட்டில் மீண்டும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
கடந்த மாதம் நடிகர் விஜய், சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் மற்றும் ஏஜிஎஸ் நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீரென சோதனை நடத்தினர்.
மாஸ்டர் படப்பிடிப்பில் இருந்து வரவழைக்கப்பட்டு, நடிகர் விஜய் வீட்டில் 23 மணிநேரத்துக்கும் மேலாக நடந்த வருமான வரித்துறை சோதனையில், எந்த ஒரு ரொக்கமோ, முறைகேடுகளோ கண்டுபிடிக்கப் படவில்லை.

மீண்டும் ரெய்டு
பனையூரில் உள்ள நடிகர் விஜய் வீட்டில், தற்போது மீண்டும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். 3 வாகனங்களில் வந்த 8க்கும் அதிகமான வருமான வரித்துறை அதிகாரிகள், நடிகர் விஜய் வீட்டில் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த மாதம் இதே பனையூரில் உள்ள வீட்டில் தான் நடிகர் விஜய்யிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி இருந்தனர்.

மாஸ்டர் சம்பளம்
பிகில் பட சம்பள விவகாரம் தொடர்பாக நடிகர் விஜய் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில், எந்தவொரு முறைகேடான ஆவணங்களோ, ரொக்கமோ கைப்பற்றப்படவில்லை. இந்நிலையில், சமீபத்தில், மாஸ்டர் படத்தின் இணைத் தயாரிப்பாளர் லலித் குமார் வீட்டில் சோதனை நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக தற்போது விஜய் வீட்டில் ரெய்டு நடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

பிகில் பிரச்சனை தான்
ஆனால், மாஸ்டர் படத்திற்கான சம்பளம் தொடர்பாக இந்த திடீர் வருமான வரி சோதனை தற்போது, நடைபெற்று வரவில்லை என்றும், பிகில் பட விவகாரம் தொடர்பாகத் தான் மீண்டும் வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டு வருவதாகவும், புதிய தகவல்களும் நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து வெளியாகி வருகின்றன.
Recommended Video

இசை வெளியீடு
மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் மார்ச் 15ம் தேதி சென்னையில் உள்ள லீலா பேலஸில் நடைபெற உள்ள நிலையில், அந்த இசை வெளியீட்டு விழாவில், அரசியல் குறித்த கருத்துக்களை நடிகர் விஜய் பேசக் கூடாது என்பதற்காக மிரட்டத்தான் இப்படி தொடர்ந்து, அவர் குறிவைக்கப் படுகிறார் என்ற பேச்சுக்களும் சமூக வலைதளங்களில் எழுந்து வருகின்றன.


Click it and Unblock the Notifications











