»   »  ஸ்டன்ட் கலைஞர்களுக்கும் தேசிய விருது... மத்திய அரசிடம் ஐஸ்வர்யா ரஜினி கோரிக்கை!

ஸ்டன்ட் கலைஞர்களுக்கும் தேசிய விருது... மத்திய அரசிடம் ஐஸ்வர்யா ரஜினி கோரிக்கை!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஸ்டன்ட் கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கு தேசிய விருது வழங்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடுவிடம் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா தனுஷ் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஐஸ்வர்யா தனுஷ் இயக்கத்தில் உருவாகி வரும் ஆவணப் படம் 'சினிமா வீரன்'.

Aishwarya Dhanush urges Nation Award for stunt artists

சினிமாவின் சண்டைக் ( ஸ்டன்ட்) கலைஞர்களை பற்றி பேசும் ஆவண படமாக இது உருவாகி வருகிறது. இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, ரஜினிகாந்த் அவர்கள் பின்னணி ( Voice Over ) பேசுகிறார்.

சினிமா ஸ்டன்ட் கலைஞர்களுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வரும் ஐஸ்வர்யா தனுஷ் நேற்று மத்திய தொலைதொடர்பு துறை அமைச்சர் வெங்கையா நாயுடுவைச் சந்தித்தார்.

அப்போது, "சினிமாவில் உள்ள பல துறையில் சாதனை புரிவோரை ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசு வருடம் தோறும் தேசிய விருது வழங்கி வருகிறது. அதே போல் நிஜ ஹீரோக்களான சினிமா ஸ்டன்ட் கலைஞர்களுக்கும் தேசிய விருது வழங்கி அவர்களை ஊக்குவிக்க வேண்டும்," என்னும் கோரிக்கையை வைத்தார்.

இதைத் தொடர்ந்து ஸ்டன்ட் மாஸ்டர்கள் மற்றும் ஸ்டன்ட் கலைஞர்கள் அனைவரும் ஐஸ்வர்யா தனுஷுக்கு சமூக வலைத்தளங்கள் மூலம் வாழ்த்துக்கள் தெரிவித்து பாராட்டினர்.

English summary
Rajinikanth's elder daughter Aishwarya Dhanush has urged the union govt to honour the stunt artists with National Award.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil