அதைத் தான் பண்ணியாச்சே.. மீண்டும் எதுக்கு பிக் பாஸ்? அதிரடியாக பதில் சொன்ன ஐஸ்வர்யா தத்தா!

சென்னை: பிக் பாஸ் அல்டிமேட்டில் ஏன் கலந்துக்கொள்ளவில்லை என ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு ஐஸ்வர்யா தத்தா அளித்துள்ள பதில் ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.

தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானவர் நடிகை ஐஸ்வர்யா தத்தா.

பிக் பாஸ் தமிழ் இரண்டாவது சீசனில் தாடி பாலாஜி மீது சர்வாதிகாரியாக டாஸ்க்கிற்காக செயல்பட்டு வந்த ஐஸ்வர்யா தத்தா குப்பையை கொட்டியது பெரும் சர்ச்சையை கிளப்பியது.

படங்கள் ஓடவில்லை

படங்கள் ஓடவில்லை

நகுல், தினேஷ், ஐஸ்வர்யா தத்தா மற்றும் பிந்து மாதவி நடிப்பில் வெளியான தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், ஐஸ்வர்யா தத்தா நடித்த படங்கள் எதுவும் அவருக்கு தமிழ் சினிமாவில் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு வெற்றியை கொடுக்கவில்லை. பாயும் புலி, அச்சாரம், ஆறாது சினம், சத்ரியன், மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

பிரபலத்துக்காக பிக் பாஸ்

பிரபலத்துக்காக பிக் பாஸ்

சினிமாவில் நல்ல வரவேற்பு கிடைக்காத நிலையில், ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைய பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டார் ஐஸ்வர்யா தத்தா. ரித்விகா டைட்டில் வெல்ல ரன்னர் அப் ஆனார் ஐஸ்வர்யா தத்தா. அந்த சீசனில் மட்டும் தான் இரு பெண்கள் கமல் கையை பிடித்துக் கொண்டு பிக் பாஸ் மேடையை அலங்கரித்து இருப்பார்கள்.

குப்பைக் கொட்டிய சர்ச்சை

குப்பைக் கொட்டிய சர்ச்சை

ராணி மகாராணி டாஸ்க்கில் சர்வாதிகாரியான ஐஸ்வர்யா தத்தா தாடி பாலாஜி மீது பிக் பாஸ் வீட்டில் இருந்த டஸ்ட் பின்னை தூக்கிக் கொண்டு வந்து அதில் இருந்த குப்பைகளை அவர் தலைமீது கொட்டியது சமூக வலைதளங்களில் பெரிய சர்ச்சையை கிளப்பியது. இன்றளவும் பிக் பாஸ் ரசிகர்கள் அந்த காட்சியை மறக்காமல் உள்ளனர்.

அல்டிமேட்டுக்கு நோ

அல்டிமேட்டுக்கு நோ

பிக் பாஸ் முதல் சீசன் ரன்னர் அப் சினேகன், 4வது சீசன் ரன்னர் அப் பாலாஜி முருகதாஸ் எல்லாம் தவற விட்ட வெற்றியை மீண்டும் தட்டிப் பறிக்கும் முயற்சியில் பிக் பாஸ் அல்டிமேட்டில் கலந்து கொண்டுள்ளனர். ஆனால், இரண்டாவது சீசன் ரன்னர் அப் ஆன ஐஸ்வர்யா தத்தா, மூன்றாவது சீசன் ரன்னர் அப் சாண்டி மற்றும் 5வது சீசன் ரன்னர் அப் பிரியங்கா உள்ளிட்டோர் இந்த பிக் பாஸ் அல்டிமேட்டில் கலந்து கொள்ளவில்லை.

சினிமாவில் பிசி

சினிமாவில் பிசி

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு நடிகை ஐஸ்வர்யா தத்தா ஏகப்பட்ட புதிய படங்களில் கமீட் ஆகி நடித்து வருகிறார். அவர் நடிப்பில், கெட்டவன்னு பெயர் எடுத்த நல்லவன்டா, அலேகா, கன்னித்தீவு, பொல்லாத உலகில் பயங்கர கேம், மிளிர், ஜீவா நடிப்பில் ஒரு படம் என ஏகப்பட்ட படங்கள் கைவசம் உள்ளன.

Recommended Video

Bigg Boss Kondattam Season 5 Promo லுங்கியில் Dance ஆடிய Priyanka | Pavani Amir, Raju
ஏன் கலந்துக்கல

ஏன் கலந்துக்கல

இந்நிலையில், சமீபத்தில் ரசிகர்களுடன் ஆன்லைனில் சாட்டிங் நடத்திய ஐஸ்வர்யா தத்தாவிடம் ஒரு ரசிகர் பிக் பாஸ் அல்டிமேட்டில் ஏன் கலந்துக்கல என்கிற கேள்வியை எழுப்பி உள்ளார். அதற்கு பதில் அளித்த ஐஸ்வர்யா தத்தா அதை தான் பண்ணியாச்சே.. திரும்பவும் எதற்கு அதே பிக் பாஸ் என பதில் அளித்துள்ளது ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X