Ganesh Chaturthi: மகளுடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய ஐஸ்வர்யா ராய்.. கூட்டத்திலும் அவ்வளவு பொருமை!
சென்னை: ரசிகர்களுக்கு எப்போதுமே இருக்கும் ஆர்வம் நாடே கொண்டாடுகிற, உலகமே கொண்டாடுகிற விழாக்களை தங்களது அபிமான நட்சத்திரங்கள் எப்படி கொண்டாடுகிறார்கள் என்பதை தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டுவார்கள். குறிப்பாக புத்தாண்டு, கிறிஸ்துமஸ் , ரம்ஜான், பொங்கல் உள்ளிட்டவற்றை கூறலாம். அதேபோலத்தான் விநாயகர் சதுர்த்தியும். விநாயகர் சதுர்த்தி நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்களும் மதம் கடந்து கொண்டாடுகிறார்கள். அப்படி இருக்கும்போது நடிகை ஐஸ்வர்யா விநாயகர் சதுர்த்தியை தனது மகளுடன் கொண்டாடியுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
ஐஸ்வர்யா ராய் தனது மகள் டீன் ஏஜை எட்டியதில் இருந்தே தான் எங்கு சென்றாலும் அதிகம் அழைத்துச் செல்கிறார். மேலும் இந்திய சினிமா உலகில் உள்ள பணக்கார வீட்டுப் பிள்ளை போல தனது மகளை நடத்தாமல், தனது மகளுக்கு பல நல்ல குணங்களையும் கற்றுக் கொடுத்து வருகிறார். குறிப்பாக பெரியவர்களை மதிப்பது, பொது இடங்களில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது என பல விஷயங்களை கற்றுக் கொடுக்கிறார். இது மட்டும் இல்லாமல் ஆர்வக் கோளாறில் ஏதாவது செய்தால் கூட உடனே அதை திருத்தவும் சொல்லிக் கொடுக்கிறார்.

ஐஸ்வர்யா ராயும் அவரது கணவர் அபிஷேக் பச்சனும் விவாகரத்து செய்யவுள்ளார்கள் என்று தகவல் வந்த போது கூட ஐஸ்வர்யாவுடனே இருந்தார் அவரது மகள், ஆராத்யா பச்சன். இந்நிலையில் மும்பையில் உள்ள கௌட் சரஸ்வத் பிராமணர் (GSB) கணேஷோத்சவ் அதாவது விநாயகர் சதுர்த்தி ஏற்பாட்டில் கலந்து கொண்டு வழிபட்டனர். இவர்கள் இருவரும் கூட்டத்தோடு கூட்டமாக நடந்து சென்று விநாயகர் சிலையை வழிபட்டனர். இவர்களைப் பார்த்த ரசிகர்கள் அவர்களுடன் புகைப்படம் எடுக்க ஆர்வம் காட்டினர்.
ஆராத்யா பச்சன்: குறிப்பாக ஐஸ்வர்யா ராயின் மகள் ஆராத்யாவுடன் புகைப்படமும் செல்ஃபியும் எடுத்துக் கொள்ள ஆர்வம் காட்டினர். ஆராத்யா பச்சனும் கொஞ்சமும் முகம் சுளிக்காமல் தன்னுடன் புகைப்படம் எடுக்க ஆசைப்பட்டவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். இதைத் தெரிந்து கொண்ட இணையவாசிகள் பலரும் ஆராத்யாவை பாராட்டி வருகிறார்கள். ஆராத்யாவை ஒரு நெபோ கிட்டாக மாற்றிவிட வேண்டாம். அவரை அவரது விருப்பத்திற்கு விட்டுவிடுங்கள் எனவும் கோரிக்கை வைத்து வருகிறார்கள்.

ஜான்வி கபூர்: சில தினங்களுக்கு முன்னர் நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் விநாயகர் சதுர்த்தி வழிபாட்டு கூட்டத்தில் சிக்கினாலும் விநாயகரை வழிபட்டு விட்டுச் சென்றது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களையும் பார்த்தோம். இந்நிலையில் நடிகை ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகள் ஆராத்யா பச்சன் இணைந்து விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தில் கலந்து கொண்டது, தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.


Click it and Unblock the Notifications











