»   »  மாமியாருடன் மோதல்: வீட்டை விட்டு வெளியேறுகிறாரா ஐஸ்வர்யா ராய்?

மாமியாருடன் மோதல்: வீட்டை விட்டு வெளியேறுகிறாரா ஐஸ்வர்யா ராய்?

Posted By:
Subscribe to Oneindia Tamil
ஐஸ்வர்யா ராய் பச்சன் தனது மாமியார் வீட்டில் இருந்து வெளியேறப் போவதாக வெளியான தகவல் குறித்து உண்மை

மும்பை: பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சன் தனது மாமியார் வீட்டில் இருந்து வெளியேறப் போவதாக வெளியான தகவல் குறித்து உண்மை தெரிய வந்துள்ளது.

பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் நடிகர் அபிஷேக் பச்சனை திருமணம் செய்ததில் இருந்து மாமனார் அமிதாப் பச்சன், மாமியார் ஜெயாவுடன் கூட்டுக் குடும்பமாக வசித்து வருகிறார்.

அமிதாபின் பங்களாவான ஜல்சாவில் தான் அவர்கள் வசித்து வருகிறார்கள்.

ஐஸ்வர்யா

ஐஸ்வர்யா

ஐஸ்வர்யா ராய்க்கும், மாமியார் ஜெயா பச்சனுக்கும் ஆகவே ஆகாது என்று சில காலமாக தொடர்ந்து செய்திகள் வெளியாகி வருகின்றது. இந்நிலையில் ஐஸுக்கும் நாத்தனார் ஸ்வேதாவுக்கும் பிரச்சனை என்ற பேச்சு கிளம்பியுள்ளது.

வீடு

வீடு

ஐஸ்வர்யாவும், அபிஷேக்கும் சேர்ந்து மும்பையில் ரூ. 21 கோடிக்கு அபார்ட்மென்ட் வாங்கியுள்ளனர். ஐஸ் தனது கணவர் மற்றும் மகள் ஆராத்யாவுடன் அந்த வீட்டில் தனிக்குடித்தனம் போகப் போவதாக செய்திகள் வெளியாகின.

பெற்றோர்

பெற்றோர்

அபிஷேக் பச்சனுக்கு தனது பெற்றோர் என்றால் உயிர். அவர்களை விட்டுவிட்டு மனைவியுடன் தனிக்குடித்தனம் போக மாட்டார் அபிஷேக். இது ஐஸ்வர்யாவுக்கும் தெரியும். அதனால் அவர் தனியாக செல்ல மாட்டாராம். முதலீட்டுக்காக அபார்ட்மென்ட் வாங்கியுள்ளார்களாம்.

தனிக்குடித்தனம்

தனிக்குடித்தனம்

முன்னதாக அபிஷேக் பச்சனுக்கும், பாலிவுட் நடிகை கரிஷ்மா கபூருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. ஆனால் கரிஷ்மா திருமணத்திற்கு பிறகு தனிக்குடித்தனம் போக விரும்பியதால் அபிஷேக் அவரை பிரிந்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Abhishek Bachchan and Aishwarya Rai Bachchan's new house pictures are getting viral on the Internet. There were rumours that the couple will be soon moving out from Jalsa after buying this new property. According to reports, Abhishek Bachchan will never leave his parents as it was the same reason why he broke his engagement with Karishma Kapoor.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X