அய்யோ இது ஐஸ்வர்யா ராயே இல்லைங்க.. சொன்னா இல்லை பார்த்தா கூட நம்பமாட்டீங்க.. அப்படியொரு ஒற்றுமை!

மும்பை: அச்சு அசல் ஐஸ்வர்யா ராயை போல ஏகப்பட்ட சோஷியல் மீடியாக்கள் பல ஆண்டுகளாக வலம் வந்தாலும், யங் ஐஸ்வர்யா ராய் போல தற்போது ஒட்டுமொத்த இணையத்தையும் அதிர வைத்து வருகிறார் இந்த டூப் ஐஸ்வர்யா ராய்.

உலக அழகிப் பட்டம் வாங்கியதில் இருந்தே கட்டுனா ஐஸ்வர்யா ராய் போல ஒரு பொண்ணத்தான் கட்ட வேண்டும் என இந்தியா முழுவதும் ஏகப்பட்ட ஆண்கள் சல்மான் கானை போல முரட்டு சிங்கிளாக இன்னமும் வாழ்ந்து வருகின்றனர்.

நாளுக்கு நாள் அந்த டூப் ஐஸ்வர்யா ராய்க்கு இன்ஸ்டாகிராமில் ஃபாலோயர்கள் அதிகரித்து வருகின்றனர்.

அன்பே அன்பே கொல்லாதே

அன்பே அன்பே கொல்லாதே

ஜீன்ஸ் படத்தில் வரும் பாடலை போலவே எப்போது ஐஸ்வர்யா ராயை பார்த்தாலும் அந்த பாடலை ரசிகர்கள் பாடி வருகின்றனர். இவ பெரிய உலக அழகி ஐஸ்வர்யா ராய் என பெண்களை பசங்க கிண்டல் செய்யும் அளவுக்கு அழகென்றாலே ஐஸ்வர்யா ராய் தான் பொன்னியின் செல்வன் போஸ்டரை பார்த்த பின்னரும் சொல்லும் ரசிகர்கள் ஏராளம்.

ஐஸ்வர்யா ராய் டூப்

ஐஸ்வர்யா ராய் டூப்

இந்நிலையில், அச்சு அசல் ஐஸ்வர்யா ராய் போலவே இருக்கும் ஆஷிதா சிங்கின் இன்ஸ்டாகிராம் ரீல் வீடியோக்கள் ரசிகர்களை ஷாக் ஆக்கி வருகின்றன. பாலிவுட் படங்களின் பாடல்களுக்கு லிப் சிங்க் கொடுத்து பாடி வீடியோக்களை அப்லோடு செய்து இன்ஸ்டாகிராமில் வியூக்களையும் ஃபாலோயர்களையும் அள்ளி வருகிறார்.

யங் ஐஸ்வர்யா ராய்

யங் ஐஸ்வர்யா ராய்

இளம் வயது ஐஸ்வர்யா ராய் என்றே ஏகப்பட்ட ரசிகர்கள் அவரை வர்ணித்து வருகின்றனர். பாலிவுட்டில் இந்த பெண்ணுக்கு யாராவது வாய்ப்பு கொடுங்கப்பா என்றும் சிபாரிசுகள் பறக்கின்றன. 2.5 லட்சம் ரசிகர்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கொண்டுள்ள ஆஷிதா சிங் இணையத்தில் டூப் ஐஸ்வர்யா என்றே டிரெண்டாகி வருகிறார்.

பொன்னியின் செல்வனில் டபுள் ரோல்

பொன்னியின் செல்வனில் டபுள் ரோல்

இவர் ஒரு புறம் இருக்க, ரியல் ஐஸ்வர்யா ராய், இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் இருவர், குரு, ராவணன் உள்ளிட்ட படங்களில் நடித்த நிலையில், 4வது முறையாக அவர் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்துள்ளார். இம்மாத இறுதியில் பொன்னியின் செல்வன் படம் வெளியாகிறது. அதன் டிரைலர் வரும் செப்டம்பர் 6ம் தேதி வெளியாகிறது. இந்த படத்தில் ஐஸ்வர்யா ராய் சோழர் குலத்தையே பழிவாங்கும் நந்தினி தேவியாகும் மந்தாகினி எனும் வயதான ரோலிலும் நடித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X