»   »  ஓகே சொன்ன ஐஸ்வர்யா ராய், ஆனால் மாதவன் தான்...

ஓகே சொன்ன ஐஸ்வர்யா ராய், ஆனால் மாதவன் தான்...

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: ஐஸ்வர்யா ராய் நடிக்கும் ஃபேனி கான் படத்தில் இருந்து மாதவன் வெளியேறியதற்கு வேறு காரணம் கூறப்படுகிறது.

ராகேஷ் ஓம்பிரகாஷ் மெஹ்ரா இயக்கும் பாலிவுட் படம் ஃபேனி கான். இந்த படத்தில் அனில் கபூர், ஐஸ்வர்யா ராய், ராஜ்குமார் ராவ் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள்.

இந்த படத்தில் மாதவன் நடிப்பதாக இருந்தது.

மாதவன்

மாதவன்

ஃபேனி கான் படத்தின் கதை மிகவும் பிடித்துள்ளது. ஆனால் நான் தற்போது பிசி, அந்த படத்திற்கு டேட்ஸ் கொடுக்க முடியவில்லை. அதனால் படத்தில் இருந்து விலகியுள்ளேன் என்று மாதவன் தெரிவித்தார்.

உண்மை

உண்மை

மாதவன் டேட்ஸ் காரணமாக வெளியேறவில்லையாம். 15 நாட்கள் படப்பிடிப்பில் கலந்து கொள்ள ரூ. 1.5 கோடி சம்பளம் கேட்டாராம் மாதவன். அது கட்டுப்படியாகாது என்று தயாரிப்பாளர் கூறியதால் தான் அவர் வெளியேறியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

பட்ஜெட்

பட்ஜெட்

ஃபேனி கான் பட்ஜெட்டுக்கு மாதவன் கேட்ட சம்பளம் ரொம்ப ஜாஸ்தி. அதனால் அவருக்கு பதில் வேறு யாரையாவது நடிக்க வைக்க முடிவு செய்தனர். பின்னர் ராஜ்குமார் ராவை ஒப்பந்தம் செய்தனர் என்று கூறப்படுகிறது.

ஐஸ்வர்யா

ஐஸ்வர்யா

ஐஸ்வர்யா ராய் மாதவனுடன் நடிக்க விரும்பவில்லை என்றும், ராஜ்குமார் ராவுடன் தான் ஜோடி சேர விரும்புவதாகவும் கூறப்பட்டது. ஆனால் அவர் மாதவனுடன் நடிக்க தயாராக இருந்தாராம்.

ஆதில் இப்ராஹிம்

ஆதில் இப்ராஹிம்

மலையாள திரையுலகில் பிரபலமான ஆதில் இப்ராஹிமை மாதவனுக்கு பதில் நடிக்க வைக்க விரும்பினாராம் இயக்குனர். ஆனால் ஆதிலுடன் சேர்ந்து நடிக்க மாட்டேன் என்று ஐஸ்வர்யா ராய் கறாராக கூறிவிட்டாராம்.

English summary
Fanney Khan is one of Aishwarya Rai Bachchan's most awaited films. The actress was supposed to romance R Madhavan in the film but because of his shocking demand, the role ultimately fell into Rajkummar Rao's lap.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil