பட்டுப்புடவையில் பிரைடல் லுக்கில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.. அடடா என்ன விசேஷம் என கேட்கும் ஃபேன்ஸ்!
சென்னை: ஐஸ்வர்யா ரஜினிகாந்தை பிரைடல் லுக்கில் மேக்கப் போட்டு அசத்தலாக போட்டோக்கள் எடுத்த புகைப்படங்களை பிரபல மேக்கப் கலைஞர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்ய என்ன விசேஷம் என ரசிகர்கள் கேட்க ஆரம்பித்துள்ளனர்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நடிகர் தனுஷை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் தனுஷ், ஸ்ருதிஹாசன் உடன் ஜோடி போட்டு '3' படத்தில் நடித்தார். அந்த படத்தில் தான் அனிருத் 'கொலவெறி' பாடலுடன் இண்டஸ்ட்ரியில் அறிமுகமாகி இன்றும் ராக்ஸ்டாராக கூலி படம் வரை கலக்கிக் கொண்டிருக்கிறார்.

கெளதம் கார்த்திக்கை வைத்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய வை ராஜா வை படத்தில் கொக்கி குமாராக தனுஷ் கேமியோ ரோலில் அப்போதே வந்து கலக்கினார். ஆனால், அந்த படம் ஓடாத நிலையில், அடுத்தடுத்து 2 படங்களும் சொதப்பிய நிலையில், சினிமாவில் பல ஆண்டுகள் பிரேக் கொடுத்தார்.
வயதுக்கு வந்த மகன்கள் இருந்தும் விவாகரத்து: தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கிட்டத்தட்ட 19 ஆண்டுகள் வாழ்ந்து வந்த நிலையில், வயதுக்கு வந்த யாத்ரா மற்றும் லிங்கா என 2 மகன்கள் உள்ள நிலையிலும் பிரிவதாக அறிவித்தனர். அதன் பின்னர் விவாகரத்தும் பெற்று விட்டனர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இளைய மகள் செளந்தர்யா ரஜினிகாந்தை தொடர்ந்து மூத்த மகளும் விவாகரத்து பெற்றது அவரை ரொம்பவே சோகத்தில் ஆழ்த்தியது. செளந்தர்யா 2வது திருமணம் செய்துக் கொண்டு சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்.
அப்பாவை வைத்து படம்: தனுஷை வைத்து படம் இயக்கி தோல்வியை தழுவிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்துக்குப் பிறகு அப்பா ரஜினிகாந்தை வைத்து லால் சலாம் படத்தை இயக்கினார். விஷ்ணு விஷால், விக்ராந்த் நடிப்பில் வெளியான அந்த படமும் மிகப்பெரிய தோல்விப் படமாக அமைந்தது. நடிகர் தனுஷும் விவாகரத்துக்குப் பிறகு யாரையும் திருமணம் செய்துக் கொள்ளாமல் இயக்கத்திலேயே பிசியாக உள்ளார். ராயன், நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் அடுத்து இட்லி கடை என அசத்தி வருகிறார்.
பிரைடல் லுக்கில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்: திடீரென இன்ஸ்டாகிராமில் மேக்கப் ஆர்ட்டிஸ்ட் வைஷாலி சுந்தரம் சில புகைப்படங்களை ஷேர் செய்துள்ளார். அதில், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பிரைடல் லுக்கில் அழகாக இருப்பதை பார்த்த ரசிகர்கள், வீட்டில் என்ன விசேஷம் என கேள்விகளை எழுப்பி வருகின்றனர். தனுஷின் மகன்களும் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாவார்களா என்கிற கேள்விகளும் கிளம்பி உள்ளன.
பட்டுப்புடவையில் செம அழகு: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பெரும்பாலும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வியர்க்க வியர்க்க ஜிம்மில் உடற்பயிற்சி செய்த புகைப்படங்களையும் அதிகபட்சமாக சுடிதார் அணிந்த போட்டோக்களையும் தான் வெளியிட்டு வருகிறார். இந்த பிரைடல் லுக் போட்டோக்களையும் அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்யாத நிலையில், மேக்கப் ஆர்ட்டிஸ் ஷேர் செய்துள்ள போட்டோக்கள் ஏகப்பட்ட லைக்குகளை அள்ளி வருகிறது. கூடிய சீக்கிரமே ஐஸ்வர்யாவும் இதை தனது பக்கத்தில் பகிர்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. செளந்தர்யா ரஜினிகாந்த் தயாரிப்பில் பிசியாகி வரும் நிலையில், ஐஸ்வர்யா எப்போது அடுத்த படத்தை அறிவிப்பார் என்கிற கேள்விகளையும் எழுப்பி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











