»   »  டென் எண்டர்டெயின்மென்ட்... இது ஐஸ்வர்யா தனுஷின் புதிய பட நிறுவனம்!

டென் எண்டர்டெயின்மென்ட்... இது ஐஸ்வர்யா தனுஷின் புதிய பட நிறுவனம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஐஸ்வர்யா தனுஷ் ஆரம்பித்துள்ள புதிய படத் தயாரிப்பு நிறுவனத்துக்கு டென் எண்டர்டெயின்மென்ட் என்று பெயர் சூட்டியுள்ளார்.

ரஜினியின் மூத்த மகளும், தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யா, இப்போது திரைப்பட இயக்குநராகவும் உள்ளார். 3, வை ராஜா வை படங்களை இயக்கியுள்ள அவர் அடுத்து தயாரிப்பாளராகவும் அவதாரம் எடுத்துள்ளார்.

Aishwarya's production company named as Ten Entertainment

முதல் கட்டமாக குறும்படங்களைத் தயாரித்து வெளியிடத் திட்டமிட்டு, தயாரிப்பு நிறுவனம் ஒன்றைத் தொடங்கியுள்ளார். இதற்கு டென் எண்டர்டெயின்மென்ட் என்று பெயர் சூட்டியுள்ளார். இந்த நிறுவனம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய நான்கு மொழிகளிலும் குறும்படங்களைத் தயாரிக்கவிருக்கிறது.

தனுஷின் தயாரிப்பு நிறுவனமான வுண்டர்பார் நிறுவனத்தின் துணை நிறுவனமாக டென் எண்டர்டெயின்மென்ட் செயல்படும்.

Aishwarya's production company named as Ten Entertainment

இதுகுறித்து ஐஸ்வர்யா கூறுகையில், "நான் தயாரிப்பு நிறுவனம் தொடங்கியதற்குக் கிடைத்த வரவேற்பு மகிழ்ச்சியளிக்கிறது. உற்சாகப்படுத்த ஏராளமான திறமையாளர்கள் காத்திருக்கிறார்கள். தென்னிந்திய மொழிகளில் குறும்படங்களை எனது நிறுவனத்தின் யுட்யூப் சேனல் மூலம் வெளியிடுவதில் பெருமை அடைகிறேன்," என்றார்.

English summary
Aishwarya Dhanush's newly launched production company has named as Ten Entertainment.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil