»   »  பள்ளியில் மகனுடன் அஜீத்: கண்டமேனிக்கு வைரலான புகைப்படங்கள்

பள்ளியில் மகனுடன் அஜீத்: கண்டமேனிக்கு வைரலான புகைப்படங்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil
பள்ளியில் மகனுடன் அஜீத்: கண்டமேனிக்கு வைரலான புகைப்படங்கள்

சென்னை: அஜீத் குமார் தனது மகன் ஆத்விக்கின் பள்ளிக்கு சென்றபோது எடுத்த புகைப்படங்கள் வெளியாகி வைரலாகியுள்ளது.

விவேகம் படத்தை அடுத்து அஜீத் சிவா இயக்கத்தில் விசுவாசம் படத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் கருப்பு நிற முடியுடன் ஸ்டைலாக வருவாராம்.

அஜீத்தை பெப்பர் லுக்கில் பார்க்க ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.

சிவா இந்த முறை ஏமாற்ற மாட்டார் என்று நம்பப்படுகிறது.

பள்ளி

அஜீத் மகன் ஆத்விக் பள்ளியில் விளையாட்டு போட்டிகள் நடந்தது. இதையொட்டி அஜீத் பள்ளிக்கு சென்றுள்ளார். அவர் மகனை தூக்கி வைத்திருக்கும் புகைப்படம் வெளியாகி வைரலாகியுள்ளது.

தல

ஆத்விக் மைதானத்தில் ஓடும்போது எடுத்த புகைப்படமும், அஜீத் பெற்றோருடன் பெற்றோராக சேர்ந்து ஒரு ஓரமாக நிற்கும் புகைப்படமும் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

 குட்டி தல

குட்டி தல

அஜீத், ஆத்விக் ஆகியோரின் புகைப்படங்களை பார்த்த தல ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தல, குட்டி தல சூப்பர் என்று தங்களின் மகிழ்ச்சியை ரசிகர்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.

கெட்டப்

அஜீத்தின் தலைமுடியின் நிறம் தான் பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. தலைமுடி பின்னால் கருப்பாக இருக்கிறது, முன்னால் வெள்ளையும் இல்லாமல் தங்கமும் இல்லாத ஒரு கலரில் உள்ளது. இது என்னது சிவா?

English summary
Pictures of Ajith with his son Adhvik at his school sporting event have gone viral on social media. Ajith is seen in his upcoming movie Viswasam hairstyle.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil