மீண்டும் நேருக்கு நேர் மோதி பார்க்க ரெடியான அஜித் - விஜய்.. வாரிசு vs ஏகே 61 பொங்கலுக்கு வருதாம்!

சென்னை: நடிகர் விஜய்யின் வாரிசு திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாக உள்ளதாக எப்போதோ அறிவிக்கப்பட்டு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் எல்லாம் வெளியாகி விட்டன.

ஆனால், நடிகர் அஜித்தின் ஏகே 61 திரைப்படம் பற்றிய எந்தவொரு அப்டேட்டும் இதுவரை வெளியாகவில்லை.

இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட அஜித் படம் பொங்கலுக்கு விஜய்யின் வாரிசு படத்துடன் போட்டிப் போட உள்ளதாக உறுதியான தகவல்கள் வெளியாகி உள்ளன.

அஜித் vs விஜய்

அஜித் vs விஜய்

எம்ஜிஆர் - சிவாஜி, ரஜினி - கமல் போட்டிக்கு பின்னர் தமிழ் சினிமாவில் அஜித் - விஜய் போட்டி தான் பெரிய அளவில் உள்ளது. சுமார் 8 ஆண்டுகள் இருவரும் நேரடி போட்டியையும் ரசிகர்கள் சண்டையையும் தவிர்த்து வந்த நிலையில், வரும் பொங்கலுக்கு நேருக்கு நேர் மோதி பார்த்துவிட துணிந்து விட்டனர் என ஒட்டுமொத்த இண்டஸ்ட்ரியும் தகவல் தெரிவித்துள்ளது.

ஜில்லா vs வீரம்

ஜில்லா vs வீரம்

கடைசியாக 2014ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு விஜய்யின் ஜில்லா மற்றும் அஜித்தின் வீரம் படங்கள் நேரடி மோதலை சந்தித்தன. அதன் பின்னர் சுமார் 8 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இருவரது படங்களும் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகப் போவதாக உறுதியான தகவல்கள் வெளியாகி உள்ளன. சில தியேட்டர் ஓனர்களே அதை கன்ஃபார்மும் செய்துள்ளனர்.

நேருக்கு நேர்

நேருக்கு நேர்

நேருக்கு நேர் படத்திலேயே விஜய் - அஜித் நடிக்க விருந்த நிலையில், ரசிகர்கள் சண்டையை ஊக்குவிக்க வேண்டாம் என நினைத்தே விஜய் - சூர்யா அந்த படத்தில் நடித்தனர். ஆனால், ரிலீஸ் சமயத்தில் அஜித் மற்றும் விஜய்யின் படங்கள் அவ்வப் போது நேரடியாக மோதி உள்ளன. 2002ம் ஆண்டு பிரெண்ட்ஸ் - தீனா, 2003ம் ஆண்டு ஆஞ்சநேயா - திருமலை, 2007ம் ஆண்டு போக்கிரி - ஆழ்வார், 2014ல் ஜில்லா - வீரம் உள்ளிட்ட ப்டங்கள் நேருக்கு நேர் போட்டியை சந்தித்துள்ளன.

தள்ளிப்போகும் ரிலீஸ்

தள்ளிப்போகும் ரிலீஸ்

கடந்த ஆண்டு தீபாவளிக்கு வலிமை வெளியாகும் என அறிவிக்கப்பட்டு பின்னர் இந்த ஆண்டு பொங்கலுக்கு வலிமை திரைப்படம் வெளியானது. அதேப் போலா ஏகே 61 படமும் இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், படத்தின் ஷூட்டிங் தாமதம் ஆனதால் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு தள்ளிப் போகிறது.

கிளாஷ் நடக்குமா

கிளாஷ் நடக்குமா

சமீப காலமாகவே நடிகர் அஜித் மற்றும் விஜய் நேரடி மோதலை தவிர்த்து வரும் நிலையில், கோலிவுட்டின் பாக்ஸ் ஆபிஸை கருத்தில் கொண்டு இந்த முறையும் நேரடியாக மோதுவார்களா? என்கிற கேள்வியும் எழாமல் இல்லை. பொங்கலுக்கே படம் வந்தாலும் ஒரு வார இடைவெளியாவது இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஏகே61 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் ரிலீஸ் தேதி அறிவிப்புகள் விரைவில் வெளியாக உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X