Don't Miss!
- News
விதி மீறிட்டாங்க.. பலூனை சுட்டு வீழ்த்திய அமெரிக்கா! பாய்ந்து வரும் சீனா.. விழுந்த "பார்ட்ஸ்" எங்கே?
- Sports
இந்திய அணிக்கு 2 தமிழக வீரர்களுக்கு அழைப்பு.. ஆஸி.யை சமாளிக்க திட்டம்.. மொத்தம் 6 பேர் சேர்ப்பு
- Technology
சாம்சங் நிறுவனத்திற்கு போட்டியாக புதிய பிளிப் போனை இந்தியாவில் இறக்கிவிடும் Oppo.! அறிமுகம் எப்போது?
- Lifestyle
வார ராசிபலன் 05 February to 11 February 2023 - இந்த வாரம் இந்த ராசிக்காரங்க கவனமா இல்லன்னா பணஇழப்பு ஏற்படும்
- Finance
பிப்.6-8 RBI நாணய கொள்கை கூட்டம்.. மீண்டும் ரெப்போ விகிதம் உயருமா..?
- Automobiles
மாருதி ஷோரூம்ல கூட்டம் குவியுது... எல்லாம் இந்த காரை பாக்கதான்... விற்பனையகங்களுக்கு வர தொடங்கிய ஃப்ரான்க்ஸ்!
- Travel
இந்தியாவிலேயே அதிக விருந்தோம்பல் செய்து அவார்ட் வாங்கிய இடம் புதுச்சேரி தானாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
அடடா! பார்க்கவே எம்புட்டு நல்லா இருக்கு.. பொங்கல் வரைக்கும் அந்த பேனர் கிழியாம இருந்தா சரி!
சென்னை: வாரிசு இசை வெளியீட்டு விழாவில் ஒரு வார்த்தைக் கூட இந்த முறை நண்பர் அஜித் பற்றியோ அவருடைய துணிவு படம் வருவது குறித்தோ விஜய் எதுவும் பேசாதது அஜித் ரசிகர்களை ரொம்பவே அப்செட் ஆக்கியது. ஆனாலும், வரும் பொங்கலுக்கு விஜய் மற்றும் அஜித் படங்கள் வெளியாக உள்ள நிலையில், அஜித் ரசிகர்கள் வைத்துள்ள நட்பு பேனர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.
தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிஸ் கிங்குகளான இரு பெரும் முன்னணி நடிகர்களுக்கும் மாலை அணிவித்து ஒற்றுமையுடன் இருக்கும் பேனரை பார்த்த ரசிகர்கள் தல தளபதி ரசிகர்களும் இப்படி ஒற்றுமையா சண்டை போடாமல் இருந்தா எப்படி இருக்கும் என கமெண்ட் போட்டு வருகின்றனர்.
மேலும், சில ரசிகர்கள் வர பொங்கல் வரைக்கும் அந்த பேனர் முதலில் கிழியாம இருக்கான்னு பாருங்க என ட்ரோல் செய்து வருகின்றனர். திருநெல்வேலியை சேர்ந்த அஜித் ரசிகர்கள் சார்பாக வைக்கப்பட்டுள்ள இந்த பேனருக்கு சோஷியல் மீடியாவில் விஜய், அஜித் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
விஜய்
மாஸ்
ஹீரோ...
ஆனா
அந்த
விசயத்துல
அஜித்
தான்
டாப்:
மாறி
மாறி
பேசிய
வாரிசு
பட
நடிகர்!

பொங்கல் போட்டி
வரும் பொங்கல் 2023க்கு தமிழ் சினிமாவில் மிகப்பெரிய வசூல் வேட்டை நடை பெற உள்ளது. ஜனவரி 12ம் தேதி வாரிசு மற்றும் துணிவு என இரு படங்களுமே ஒரே நாளில் ரிலீஸ் செய்யப்பட்டால் ஒட்டுமொத்த திரையரங்குகளும் 10 நாட்களுக்கு மேல் நிரம்பி வழியும் என எதிர்பார்க்கப்படுகிறது. பொங்கல் போட்டியை எல்லாம் தாண்டி இரு படங்களையுமே வாங்கும் தியேட்டர் ஓனர்களுக்கு வசூல் வேட்டை காத்திருக்கு என்கின்றனர்.

தல தளபதி பேனர்
சோஷியல் மீடியாவில் விஜய் மற்றும் அஜித் ரசிகர்கள் இடையே கடும் சண்டை வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு பிறகு வெடித்து வரும் நிலையில், தற்போது தல தளபதி பேனர் ஒன்று செம டிரெண்டாகி அந்த பிரச்சனைகளை முடிவுக்கு கொண்டு வந்திருக்கிறது. திருநெல்வேலி மாவட்ட அஜித் ரசிகர்கள் இந்த ஏற்பாடை செய்துள்ளனர்.

ரொம்ப சூப்பர்
பார்க்கவே அம்புட்டு நல்லா இருக்கு என்றும் விஜய் மற்றும் அஜித் எப்போதுமே நண்பர்களாக ஒற்றுமையாக இருப்பது போல அவர்களது ரசிகர்களும் ஒன்றாக இருந்து வரும் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் இரு படங்களையும் பார்த்து கொண்டாட வேண்டும் என கமெண்ட்டுகள் குவிகின்றன.

பேனர் இருக்குமா பாருங்க
யாராவது எங்கேயேவது ஒரு சிலர் இந்த நல்ல முன்னெடுப்பை எடுப்பார்கள். ஆனால், அந்த பேனர் கூட பொங்கல் வரை முழுசா கிழியாம இருக்குதான்னு பார்க்கணும். வாரிசு மற்றும் துணிவு படங்களை வாங்கி உள்ள தியேட்டர்களின் நிலை என்ன ஆகுமென்றே தெரியவில்லை என ட்ரோல் செய்து வருகின்றனர்.

இன்சூரன்ஸ் பண்ணிடுங்க
ஏற்கனவே நேரு ஸ்டேடியத்தில் வாரிசு இசை வெளியீட்டு விழா நடைபெற்ற நிலையிலேயே ஏகப்பட்ட நாற்காலிகள் மற்றும் அந்த அரங்கின் பல பகுதிகள் சேதமடைந்துள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன. வாரிசு மற்றும் துணிவு படங்கள் ஒரே நேரத்தில் வெளியாக உள்ள நிலையில், தியேட்டர்களை எல்லாம் இன்சூரன்ஸ் பண்ணிடுங்க.. ஸ்க்ரீன்களுக்கு முன்பாக ஆணியடித்து ரெடியா வச்சிக்கோங்க என்றும் எச்சரிக்கைகள் பறக்கின்றன. இல்லை என்றால் விஜய் மற்றும் அஜித் ரசிகர்களின் அட்டகாசத்தை பார்ப்பீங்க என்றும் கலாய்த்து வருகின்றனர்.