»   »  திரையுலகில் 23 வருடம்.. ட்விட்டரில் ட்ரெண்டாக்கி அஜீத்தைக் கொண்டாடும் ரசிகர்கள்

திரையுலகில் 23 வருடம்.. ட்விட்டரில் ட்ரெண்டாக்கி அஜீத்தைக் கொண்டாடும் ரசிகர்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் அஜீத் நடிக்க வந்து இந்த வருடத்துடன் 23 வருடங்கள் ஆகின்றன, திரையுலகில் அஜீத் நடிக்க வந்து 23 வருடங்களை நிறைவு செய்ததை அவர் கொண்டாடவில்லை. மாறாக அவரது ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்து கொண்டு இருக்கின்றனர்.

1992 ம் வருடம் பிரேமபுஸ்தகம் என்னும் தெலுங்குப் படத்தில் நடிகராக அறிமுகமான அஜீத் இந்த 23 வருடங்களில், கடைசியாக வெளிவந்த என்னை அறிந்தால் திரைப்படத்துடன் சுமார் 55 படங்களை நிறைவு செய்து இருக்கிறார்.

இதனைக் கொண்டாடும் வகையில் அஜீத்தின் ரசிகர்கள் #23yearsofinvincibleajith என்ற ஹெஷ்டேக்கை உருவாக்கி இந்திய அளவில் ட்விட்டர் ட்ரெண்டிங்கில் முதலிடத்தில் வைத்து இருக்கின்றனர்.

இந்த 23 வருடங்களில் வெல்ல முடியாத சக்தியாக அஜீத் உருவாகியிருக்கிறார் என்னும் பொருள் கொண்ட இந்த ஹெஷ்டேக்கில் இருந்து, அவரது ரசிகர்களின் ட்வீட்டுகள் சிலவற்றை இங்கு பார்க்கலாம்.

சொல்லாமல் வாழ்ந்து காட்டியவர் - வீகே

சொல்லாமல் வாழ்ந்து காட்டியவர் - வீகே

"வாழு வாழ விடு என்று வாயால் சொல்லாமல் வாழ்ந்து காட்டியவர் அஜீத்" என்று அஜீத்தின் ரசிகர் ஒருவர் பதிவிட்டு இருக்கிறார்.

தன்னம்பிக்கையின் மறுபெயர் - சரண்

"தன்னம்பிக்கை என்றால் அகராதியில் இவர் பெயர்தான் முதலில் இருக்கும் சாதனைகள் தொடரும் இவருக்கு" என்று சரண் என்னும் ரசிகர் பதிவிட்டு இருக்கிறார்.

தல கோட்டை - காளிதாஸ்

"இது தல கோட்டை எதிர்த்தா வேட்டை "என்று ரைமிங்காக பன்ச் பேசியிருக்கிறார் காளிதாஸ் என்னும் ரசிகர்.

நல்ல மனசுக்காக - அஜித் ரசிகர்

"அஜித்துடைய நடிப்புக்காக சேர்ந்த கூட்டத்தை விட நல்ல மனசுக்காக சேர்ந்த கூட்டமே அதிகம்" என்று ஒரு ரசிகர் கூறியிருக்கிறார்.

பெண்கள் முதன்முதலில் பேனர் வைத்த நபர்

"பெண்கள் முதன்முதலில் பேனர் வைத்தது அஜீத் நடித்த காதல் கோட்டை படத்திற்குத் தான்" என்று தீனா என்னும் ரசிகர் கூறியிருக்கிறார்.

வெற்றியில் மட்டுமல்ல தோல்வியிலும்

"வெற்றியில் மட்டுமல்ல தோல்வியிலும் தாங்கிப் பிடித்த ரசிகர்கள் நாங்கள்" என்று ஹரி என்னும் ரசிகர் பதிவிட்டு இருக்கிறார்.

நடிப்பதில் ஹிட்லர் வாழ்வதில் புத்தர்

"ஹிட்லராக நடித்து புத்தராக வாழ்வது அஜீத்திற்கு மட்டுமே சாத்தியம்" என்று ராக்கி என்னும் ரசிகர் உருகி இருக்கிறார்.

English summary
Ajith Completed 23 Years in Cine Industry, His Fans Celebreating in Twitter.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil