போதும்ப்பா போர் அடிக்கும்...போனி கபூருடனான உறவை முறிக்கும் அஜித்
சென்னை : அஜித் படம் என்றாலே ஹிட் தான் என்பதால், அவரை வைத்து படம் இயக்குவது ஒவ்வொரு இயக்குனரின் கனவாக இருந்து வருகிறது. அஜித் தற்போது ஹச்.வினோத் இயக்கும் வலிமை படத்தில் நடித்து வருகிறார்.
நேர் கொண்ட பார்வை படத்தின் வெற்றியை தொடர்ந்து ஹச். வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிக்கும் வலிமை படத்தில் அஜித் நடித்து வருகிறார். பல காரணங்களால் தள்ளி போகும் இந்த படம் கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக அஜித் படம் எதுவும் வெளிவரவில்லை.
இதனால் வலிமை பட அப்டேட் கேட்டு அஜித் ரசிகர்கள் சோர்ந்து போய் விட்டனர். அரசியல் தலைவர்கள் முதல் கோயில் பூசாரி வரை வலிமை அப்டேட் கேட்டு விட்டனர். ரசிகர்களை திருப்திப்படுத்த சமீபத்தில் வலிமை மோஷன் போஸ்டர் மற்றும் ஃபஸ்ட்லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. இது மிகப் பெரிய அளவில் வைரலானது.

வலிமை தீபாவளி ரிலீஸா
இரண்டு ஆண்டுகளாக தாமதமாகி வந்த வலிமை படம் இப்போது இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. விரைவில் படக்குழு ஸ்பெயின் செல்ல உள்ளது. அங்கு எடுக்கப்பட உள்ள க்ளைமாக்ஸ் காட்சிகளுடன் படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைய உள்ளதாம். ஏற்கனவே போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் துவங்கப்பட்டு விட்டதால், படத்தை ஆயுதபூஜை அல்லது தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது.

3 வது முறையாக இணையும் கூட்டணி
இந்நிலையில் அஜித்தின் 61 வது படத்திலும் ஹச்.வினோத், போனி கபூர் கூட்டணி மூன்றாவது முறையாக இணைய உள்ளது. இந்த படத்தின் ஷுட்டிங் 2022 ம் ஆண்டு ஜனவரியில் துவங்க உள்ளதாம். அதற்கு முன் வலிமை படத்தை ரிலீஸ் செய்து, அடுத்த படம் பற்றிய அறிவிப்பை வெளியிட உள்ளனராம். இந்த படமும் ஆக்ஷன் த்ரில்லர் படம் தானாம். இதற்கான கதையை வினோத் உருவாக்கி வருகிறாராம்.

2 மாதங்களில் தல 61
வலிமை படம் இரண்டு ஆண்டுகளாக தாமதமாகி வருவதால் அஜித்தின் 61 வது படத்தை 2 மாதங்களில் எடுத்து முடிக்க திட்டமிட்டுள்ளனராம். அஜித்தின் சினிமா வாழ்க்கையில் மிக குறுகிய காலத்தில் எடுக்கப்பட உள்ள படம் இது தானாம்.

போனி கபூர் இனியும் வேணாம்
அதற்குள் அஜித்தின் 62 வது படம் பற்றிய பேச்சுக்கள் அடிபட்டு வருகிறது. அந்த படத்தையும் போனி கபூர் தான் தயாரிக்க உள்ளதாகவும், வினோத் இயக்க உள்ளதாகவும் கூறப்பட்டது. ஆனால் இது ரசிகர்களுக்கு சலிப்பை ஏற்படுத்தலாம் என அஜித் நினைக்கிறாராம்.

புதிய கூட்டணியில் தல 62
அதனால் தல 62 படத்தை புதிய கூட்டணியில் உருவாக்க அஜித் விரும்புகிறாராம். இதனால் அஜித்தின் 62 வது படத்தை போனி கபூருக்கு பதில் விஸ்வாசம் படத்தை தயாரித்த சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிக்க உள்ளதாம். இந்த படத்தின் ஷுட்டிங்கும் அடுத்த ஆண்டு ஜனவரியில் தான் துவங்க உள்ளதாம்.

அடுத்தடுத்த படங்களில் அஜித்
வலிமை படத்தை போல் அடுத்தடுத்த படங்களுக்கும் ரசிகர்களை காக்க வைக்க கூடாது என நினைத்து இனி அடுத்தடுத்த படங்களில் நடித்து, படங்களை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளாராம். இதனால் புதிய கூட்டணியில் தல 62 படத்தை உருவாக்கப்பட உள்ளதாம்.

வலிமைக்கு பிறகு அறிவிப்பு
அதே சமயம் தல 62 படத்தின் டைரக்டர் உள்ளிட்ட மற்ற விபரங்கள் இதுவரை வெளியிடப்பட உள்ளது. அதே சமயம் பலருக்கும் அறிமுகமான முகங்களே இந்த படத்தில் பணியாற்ற உள்ளதாக கூறப்படுகிறது. தல 61 மற்றும் தல 62 படங்களில் பணியாற்ற உள்ளவர்கள் பற்றிய விபரங்கள் முடிவான உடன் இது பற்றிய அறிவிப்பு வெளியிடப்பட உள்ளது.


Click it and Unblock the Notifications











