Don't Miss!
- News
ஷோகேஷில் வைக்கப்பட்டு இருந்த தங்க நகை மாயம்.. திருடன் என சிசிடிவி காட்சிகளை பார்த்தால்.. ட்விஸ்ட்!
- Finance
எஸ்பிஐ வாடிக்கையாளரா நீங்க.. மார்ச் கடைசி வரையில் இந்த சலுகையை பெறலாம்..!
- Automobiles
சுஸூகி ஜிம்னி எலெக்ட்ரிக் காரை தயாரிக்க முடிவு, இந்திய வருகை எப்பொழுது தெரியுமா?
- Lifestyle
எடையை வேகமாக குறைக்க பழச்சாறு குடிப்பவரா நீங்கள்? இனிமே அந்த தப்ப பண்ணாதீங்க...!
- Sports
இதை செய்தால் போதும்.. உலக கோப்பையை இந்தியா வெல்லும்.. முன்னாள் கேப்டன் கங்குலி அறிவுரை
- Technology
மூன்று அதிநவீன ஸ்மார்ட்வாட்ச் மாடல்களை கம்மி விலையில் இறக்கிவிட்ட Fire Boltt.!
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
வலிமை வசூலை போனி கபூர் சொல்லிட்டாரு.. எதற்கும் துணிந்தவன் வசூலை சன் பிக்சர்ஸ் சொல்லுமா?
சென்னை: புதிய படங்கள் பார்க்க நல்லா இருக்கா, இல்லையா என்பதை தாண்டி அதன் வசூல் மற்ற நடிகர்களின் படங்களின் வசூலை பீட் பண்ணியதா என்கிற போட்டியில் தான் ரசிகர்கள் அதிக ஆர்வத்தை செலுத்தி வருகின்றனர்.
வலிமை படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் என்ன? எதற்கும் துணிந்தவன் எத்தனை கோடி வசூல் ஈட்டியது என்கிற போட்டியே சமூக வலைதளங்களில் சண்டையாக மாறி வருகிறது.
மேலும், யூடியூப் டிரெண்டிங்கில் யார் படத்தின் பாடல்கள், டீசர்கள் சாதிக்கின்றன என்றும் ரசிகர்கள் சண்டை போட்டுக் கொள்கின்றனர்.
காய்ச்சலுடன்
எக்சாம்
எழுதிய
சரஸ்வதி...
நலம்
விசாரித்த
கோதை
அம்மாள்!

போனி கபூர் சொல்லிட்டாரு
அஜித் நடிப்பில் வெளியான வலிமை படம் 200 கோடி வசூல் ஈட்டியதாக சொல்லப்பட்ட நிலையில், அத்தனை கோடி எல்லாம் வசூல் செய்யவில்லை என விஜய் மற்றும் சூர்யா ரசிகர்கள் ட்ரோல் செய்தனர். இந்நிலையில், தயாரிப்பாளர் போனி கபூரே அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டார். #ValimaiHits200CBoxOffice என அஜித் ரசிகர்கள் ஹாஷ்டேக்கே போட்டு கொண்டாடி வருகின்றனர்.

சன் பிக்சர்ஸ் சொல்லுமா?
வலிமை திரைப்படம் ஹிட் அடிக்கவில்லை என விஜய் மற்றும் சூர்யா ரசிகர்கள் வெறுப்பேற்றி வந்த நிலையில், போனி கபூர் ட்வீட் போட்டு 200 கோடிக்கும் அதிகமான வசூலை வலிமை திரைப்படம் பெற்றுவிட்டது என அறிவித்துள்ள நிலையில், சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் திரைப்படம் எவ்வளவு வசூல் ஈட்டியது என்பதை சன் பிக்சர்ஸ் சொல்லுமா என அஜித் ரசிகர்கள் கேள்வி எழுப்பி கலாய்த்து வருகின்றனர்.

பீஸ்ட்டுகாவது
எதற்கும் துணிந்தவன் பிளாக்பஸ்டர், மேசிவ் ஹிட் என போட்டுக் கொண்டு சன் பிக்சர்ஸ் அடுத்ததாக பீஸ்ட் படத்தின் புரமோஷன் வேலைகளில் மும்முரம் காட்டி வருகிறது என்றும் பீஸ்ட் வரட்டும் பார்த்துக்கலாம் என சன் பிக்சர்ஸ் திடமாக இருப்பதாகவும் அந்த படத்திற்காக அதிகாரப்பூர்வமான பாக்ஸ் ஆபிஸ் வசூலை சன் பிக்சர்ஸ் சொல்லுமா என்றும் அஜித் ரசிகர்கள் மரண கலாய் கலாய்த்து வருகின்றனர்.

ப்ளூ சட்டை மாறன் ட்வீட்
வலிமை திரைப்படம் 200 கோடி வசூல் செய்தது என தயாரிப்பாளர் போனி கபூர் சொல்லியதை அதன் விநியோகஸ்தர்கள் ஒத்துக் கொள்வார்களா? என புதிய கேள்வியை கேட்டு இருக்கிறார் விமர்சகர் ப்ளூ சட்டை மாறன். வலிமை படத்திற்கு மோசமான விமர்சனத்தை கொடுத்த ப்ளூ சட்டை மாறன் படம் பெரிய இழப்பை சந்தித்ததாகவும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Recommended Video

திட்டும் ரசிகர்கள்
ப்ளூ சட்டை மாறனின் இந்த ட்வீட்டை பார்த்த அஜித் ரசிகர்கள் மீண்டும் கடுப்பாகி அவரை கண்டபடி திட்டித் தீர்த்து வருகின்றனர். அதுதான் வலிமை பட தயாரிப்பாளர் போனி கபூரே சொல்லிட்டாரே, இதற்கு மேல் எப்படி அதிகாரப்பூர்வமாக சொல்வது மற்ற நடிகர்களின் படங்களை தயாரித்த தயாரிப்பாளர்கள் இதை கூட அறிவிக்கவில்லையே? என கேள்வி எழுப்பி வருகின்றனர்.