கொடுத்து வச்ச ஹோட்டல் ஊழியர்.. அஜித் என்னம்மா கேக் ஊட்டுறாரு.. டிரெண்டாகும் புகைப்படம்!

ஹைதராபாத்: நடிகர் ஆதி - நிக்கி கல்ராணி திருமணத்துக்கும் நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணத்துக்கும் கலந்து கொள்ளாத நடிகர் அஜித் ஹோட்டல் ஊழியர் ஒருவரின் பிறந்தநாள் விழாவில் பங்கேற்றுள்ள புகைப்படம் டிரெண்டாகி வருகிறது.

போனி கபூர் தயாரிப்பில் இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் ஏகே 61 படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளது.

அதன் காரணமாக சென்னைக்கு கூட வர முடியாத நிலையில், ஷூட்டிங் முடித்து இரவு நேரத்தில் கிடைக்கும் சின்ன கேப்பில் தனது ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார் நடிகர் அஜித்.

தீபாவளிக்கு கன்ஃபார்ம்

தீபாவளிக்கு கன்ஃபார்ம்

80 சதவீத ஏகே 61 படப்பிடிப்பு முடிந்து விட்டதாகவும், கூடிய விரைவிலேயே படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் ஆரம்பித்து வரும் தீபாவளிக்கு சரவெடியாக ஏகே 61 படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான பணிகளில் நடிகர் அஜித் மற்றும் இயக்குநர் வினோத் தீவிரமாக உழைத்து வருகின்றனர். ஷூட்டிங்கிற்கு லீவே விடாமல் தொடர்ந்து படப்பிடிப்பு நடைபெற்று வருகிறதாம்.

திருமண நிகழ்ச்சிகளில் அஜித் குடும்பம்

திருமண நிகழ்ச்சிகளில் அஜித் குடும்பம்

ஏகே 61 படப்பிடிப்பு காரணமாக திருமண விழாக்களில் கலந்து கொள்ள முடியவில்லை என்றாலும், தனது மனைவி ஷாலினி மகள் அனோஷ்கா மற்றும் மகன் ஆத்விக் என ஒட்டுமொத்த குடும்பத்தையும் கலந்து கொள்ள சொல்லி இருக்கிறார் அஜித். நயன்தாரா திருமணத்தை தொடர்ந்து ஏ.ஆர். ரஹ்மான் மகள் திருமண வரவேற்பிலும் சகோதரி மற்றும் குழந்தைகளுடன் ஷாலினி பங்கேற்றுள்ளார்.

ரசிகர்களுடன் புகைப்படம்

ரசிகர்களுடன் புகைப்படம்

ஏகே 61 படப்பிடிப்பு தளத்திற்கு வந்து நடிகர் அஜித்தை சந்திக்க முயற்சி செய்யும் ரசிகர்களை படப்பிடிப்பு முடிந்த பிறகு சந்தித்து புகைப்படங்களை எடுத்து வருகிறார் நடிகர் அஜித். ஏகப்பட்ட ரசிகர்கள் அந்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு தங்களின் சந்தோஷத்தை ஷேர் செய்து வருகின்றனர்.

கேக் ஊட்டிவிட்ட அஜித்

கேக் ஊட்டிவிட்ட அஜித்

இந்நிலையில், சமீபத்தில் ஹைதராபாத்தில் உள்ள ஒரு உணவகத்திற்கு இரவு நேரம் சென்றுள்ளார் நடிகர் அஜித். அப்போது அஜித்தின் தீவிர ரசிகர் ஒருவர் தனது பிறந்தநாளை கொண்டாடப் போகிறேன், நீங்க வந்தா நல்லா இருக்கும் சார் என கேட்க, உடனடியாக அந்த பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டு அந்த ஹோட்டல் ஊழியருக்கு கேக் ஊட்டி விட்டுள்ளார் அஜித், தற்போது அந்த புகைப்படம் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

Recommended Video

தல அஜித் கூட படம் பண்ணனும் | தமிழ் Youngest Director| Sona Sokkama- First Single
சென்னை ரசிகர்கள் வருத்தம்

சென்னை ரசிகர்கள் வருத்தம்

இப்படியொரு அருமையான வாய்ப்பு சென்னையில் இருக்கும் நமக்கெல்லாம் கிடைக்கவில்லையே என ரசிகர்கள் ரொம்பவே அப்செட் ஆகி உள்ளனர். இங்கே இப்படி நடிகர் அஜித் எங்கேயாவது சென்றால், ஒரு பெருங்கூட்டமே அலைமோதுமே, அதனால் தான் படப்பிடிப்பையே ஹைதராபாத்தில் தொடர்ந்து நடத்தி வருகிறார் நடிகர் அஜித் என்றும் கூறுகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X