சீக்கிரம் முடிங்க...அமர்க்களம் பட ஷூட்டிங்கில் டைரக்டர் சரணிடம் அவசரப்பட்ட அஜித்

சென்னை : நடிகர் அஜித் மற்றும் ஷாலினிக்கு திருமணம் முடிந்து 23 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது. 2000 ம் ஆண்டு ஏப்ரல் 24ம் தேதி இவர்களின் திருமணம் நடைபெற்றது. இவர்கள் திருமண வாழ்க்கையில் இணைந்து 22 ஆண்டுகள் நிறைவடைந்து 23வது ஆண்டில் அடியெடுத்து வைப்பதற்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

இவர்களின் திருமண நாள் நெருங்குவதை முன்னிட்டு வாழ்த்து சொல்லும் விதமாக ஷாலியின் தங்கை ஷாமிலி, அஜித்-ஷாலினியின் லேட்டஸ்ட் ரொமான்டிக் போட்டோ ஒன்றை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். இந்த போட்டோ காட்டுத்தீ போல் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. லைக்குகளும் வாழ்த்துக்களும் குவிந்து வருகிறது.

அஜித்-ஷாலினிக்கு வாழ்த்து

அஜித்-ஷாலினிக்கு வாழ்த்து

அஜித்-ஷாலினி படு நெருக்கமாக இருக்கும் இந்த போட்டோவை பார்த்து முதலில் ஷாக் ஆனவர்கள் பிறகு, எதற்காக இந்த போட்டோவை ஷாமிலி பகிர்ந்துள்ளார் என்ற விஷயம் தெரிந்ததும் தற்போது #23YearsofTogetherness என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி வாழ்த்து சொல்ல துவங்கி விட்டனர். பலரும் அஜித்-ஷாலினியின் அரிய போட்டோக்களையும் பகிர்ந்து வருகின்றனர்.

அமர்க்களம் ஷுட்டிங் சுவாரஸ்யம்

அமர்க்களம் ஷுட்டிங் சுவாரஸ்யம்

1999ம் ஆண்டு டைரக்டர் சரண் இயக்கிய அமர்க்களம் படத்தில் சேர்ந்து நடித்த போது தான் அஜித்-ஷாலினி இடையே காதல் ஏற்பட்டு, பிறகு அவர்கள் திருமணம் செய்து கொண்டார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். ஆனால் அமர்க்களம் ஷுட்டிங்கின் போது நடந்த, இதுவரை வெளிவராத சுவாரஸ்ய தகவல் ஒன்று தற்போது வெளியாகி உள்ளது.

அவசரப்படுத்திய அஜித்

அவசரப்படுத்திய அஜித்

அமர்க்களம் ஷுட்டிங் துவங்கிய சில நாட்களிலேயே அஜித், டைரக்டர் சரணிடம் சென்று ஷுட்டிங்கை சீக்கிரமா முடிங்க சார் என சொல்லி அவசரப்படுத்தினாராம். அஜித் எப்போதும் இப்படி நடந்து கொள்ள மாட்டாரே. ரொம்ப பொறுமையாக தானே இருப்பார். இப்போ ஏன் இப்படி அவசரப்படுத்துறார் என புரியாமல் டைரக்டர் சரண், அஜித்திடமே அது பற்றி கேட்டு விட்டாராம்.

இது தான் காரணமா

இது தான் காரணமா

அதற்கு அஜித், இந்த பொண்ண லவ் பண்ணிருவேனோனு பயமா இருக்கு சார். அதுனால சீக்கிரம் ஷுட்டிங்கை முடிங்க என கேட்டுள்ளார். இதைக் கேட்டு முதலில் சிரித்த சரண், அப்படியெல்லாம் ஒன்றும் ஆகாது என அஜித்தை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தாராம். ஆனால் அஜித் பயந்தது போலவே ஷாலினியை லவ் பண்ணியதுடன், அமர்க்களம் ஷுட்டிங் ஸ்பாட்டிலேயே வைத்து ஷாலினியிடம் ப்ரொபோசும் செய்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X