Don't Miss!
- Finance
ரெசிஷன் நினைக்கும் அளவுக்கு மோசமா இருக்காது.. ஐஎம்எப் கொடுத்த குட் நியூஸ்..!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Automobiles
கார் பைக்குகளில் இருப்பது போல ரயில் இன்ஜின்களிலும் கியர் இருக்குமா? இது எப்படிப் பயன்படுகிறது?
- Sports
"எங்களுக்கு நீங்க ஆர்டர் போடாதீங்க" பணிச்சுமை விவகாரம்.. பிசிசிஐ - ஐபிஎல் அணிகள் இடையே மோதல்- விவரம்
- News
கொடுங்கோல்.. தலித் கோயிலுக்கு சென்றது தவறா? ஜாதி தீண்டாமை தொடருதே - கொந்தளித்த பா.ரஞ்சித்
- Technology
ஒட்டுமொத்த பட்ஜெட் போன்களையும் பேக்கில் ஓடவிடப்போகும் OnePlus Nord 3.! இது தான் காரணமா?
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
- Lifestyle
பிப்ரவரி மாதத்தில் இந்த 4 ராசிக்காரங்க நிறைய பணப் பிரச்சனைகளை சந்திப்பாங்களாம்.. உஷாரா இருங்க...
அஜீத்தின் 'வீரம்' செம வசூல்: மகிழ்ச்சியில் கர்நாடக வினியோகஸ்தர்
பெங்களூர்: அஜீத்தின் வீரம் படம் கர்நாடகத்தில் வசூலை அள்ளியுள்ளதாக அம்மாநிலத்துக்கான வினியோகஸ்தரும், முன்னணி கன்னட பட தயாரிப்பாளருமான கே. மஞ்சு தெரிவித்துள்ளார். மேலும் கர்நாடகத்தில் ஓபனிங்கில் ரஜினிகாந்துக்கு அடுத்தது அஜீத் தான் என்று அவர் தெரிவித்துள்ளார்.
அஜீத்தின் வீரம் படத்தை முன்னணி கன்னட பட தயாரிப்பாளரும், வினியோகஸ்தருமான கே. மஞ்சு கர்நாடகத்தில் வெளியிட்டார். இந்த சங்கராந்தி மஞ்சுவுக்கு மகிழ்ச்சிகரமானதாக அமைந்துள்ளது.
இது குறித்து அவர் ஒன்இந்தியாவுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது,

சூப்பர் ஹிட்
கர்நாடகாவில் அஜீத்தின் வீரம் படம் சூப்பர் ஹிட். படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துள்ளது. கர்நாடக ரசிகர்களுக்கு வீரம் படம் மிகவும் பிடித்துள்ளது என்றார் மஞ்சு.

ரூ.1 கோடி
படம் ரிலீஸான முதல் 7 நாட்களிலேயே ரூ.1 கோடிக்கும் மேல் வசூல் செய்தது. நான் போட்ட பணத்தில் 40 சதவீதத்திற்கும் மேலான பணம் கிடைத்துவிட்டது என்று மஞ்சு தெரிவித்தார்.

தியேட்டர்கள்
வீரம் கர்நாடகத்தில் 45 தியேட்டர்களில் ரிலீஸ் ஆனது. அதில் பெங்களூரில் மட்டும் 20க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் ரிலீஸ் ஆனது. படத்திற்கு கிடைத்த வரவேற்பை பார்த்து மல்டிபிளக்ஸ்களில் வீரத்திற்கு கூடுதல் ஸ்கிரீன்கள் ஒதுக்கப்பட்டது.

லாபம்
மஞ்சு வீரம் படத்தின் கர்நாடக உரிமையை ரூ.1.60 கோடிக்கு வாங்கியுள்ளார். அந்த பணத்தை இன்னும் சில வாரங்களில் எடுத்துவிடுவேன் என்கிறார்.

முதல் முறை
நான் முதல்முறையாக அஜீத் படத்தை வாங்கி கர்நாடகத்தில் வெளியிட்டுள்ளேன். முதல் முயற்சியே வெற்றி அளித்துள்ளது என்று சந்தோஷப்படுகிறார் மஞ்சு.

ஜில்லா
விஜய்யின் ஜில்லா படம் வீரம் ரிலீஸ் ஆன அன்றே ரிலீஸானதால் அஜீத் படத்தின் வசூல் பாதிக்கப்பட்டதா என்று கேட்டதற்கு மஞ்சு கூறுகையில், இல்லவே இல்லை. இரண்டு நடிகர்களுக்கும் இங்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இரண்டு படங்களுமே நல்ல வசூல் செய்துள்ளது என்றார்.

ரஜினி
கர்நாடகாவில் ஓபனிங்கில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை அடுத்து அஜீத் குமார் தான் என்று மஞ்சு தெரிவித்தார். (அவர் கூறுவது தமிழ் படங்களுக்கு)
-
டாப் ஹீரோக்களால் ஓடிடியிலும் சின்ன பட்ஜெட் படங்களுக்கு பிரச்சினை... யாரை சொல்கிறார் பா ரஞ்சித்?
-
பாதி இங்கே இருக்கு.. மீதி எங்கே.. ஜிமிக்கி பொண்ணு வீடியோ பாடல் ரிலீஸ்.. விஜய் ரசிகர்கள் விரக்தி!
-
என்ன சொல்றீங்க.. சூர்யா 42 படத்தில் சீதா ராமம் ஹீரோயின் நடிக்கிறாங்களா? அதுவும் அந்த ரோலிலா?